A.R.Rahman, Slumdog Millionaire, Oscar


22 ம் திகதி பெப்ரவரி அமெரிக்காவின் Los Angeles, Californiaல் நடைபெற்ற 81வது ஒஸ்கார் விருதுவழங்கும் வைபவம் பற்றிதான் தற்போது சூடான பேச்சுக்கள். அதற்கெல்லாம் முழு காரணம் A.R.Rahman(Mozart of Madras) எனப்படும் இசைப்புயல்தான். ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் தனது இசை அலையால் கட்டிபோட்ட இவர் இப்போது தனது தனித்திறமையால் உலக அளவிலும் வளர்ந்து பலரையும் தனது இசைக்கு அடிமையாக்கியுள்ளார். அது சரி Oscar விருதை வெண்ட முதல் தமிழர் என்ற ரீதியிலும் அவரது இசைக்கு தீவிர ரசிகர்கள் என்ற வகையிலும் பலருக்கும் தாங்களே விருதை வென்றதைபோல் ஒரு மகிழ்ச்சி.

ரோஜா என்ற தனது முதலாவது தமிழ் படத்தில் 1992 ல் தொடங்கிய பயணம் 1995ல் முதலாவது ஹிந்தி படமான ரங்கீலா ஊடாக தொடர்ந்து 2003ல் Warriors of Heaven and Earth என்ற ஜப்பான் மொழிபடமூடாக (முதலாவது வேற்று நாட்டு படம்) உலகரீதியில் பயணிக்க ஆரம்பித்து இன்று பல மொழிகளிலும் வெற்றி நடைபோட ஆரம்பித்து இருக்கிறது. கடைசியாக Delhi6 என்ற ஹிந்திபட பாடல் இவரது இசையில் சக்கை போடு போடுகிறது. மொத்தமாக இவரது இசையில் 57 தமிழ் படங்களும் 39 ஹிந்தி படங்களும் 3 தெலுங்கு படங்களும் 3 ஆங்கில படங்களும் ஒரு மலையாள படமும் வெளிவந்துள்ளது. (எண்ணிக‌்கை ஒன்ரிரண்டு தவறக்கூடும்).

மனைவி சைரா பானுவுடன் ரகுமான்

1966 ஜனவரி 6 சென்னையில் பிறந்த திலிப்குமார் என்ற இயற்பெயருடைய ரகுமானுக்கு இதுவரை கிடைத்த விருதுகளோ ஏராளம்.

4 தேசிய விருது - ரோஜா(1992) மின்சாரகனவு(1997) லகான்(2002) கன்னத்தில் முத்தமிட்டால்(2003) .

6 தமிழ்நாடு மாநில விருது - ரோஜா(1992) ஜென்டில்மன்(1993) காதலன்(1994) பம்பாய்(1996) மின்சாரகனவு(1997) சங்கமம்(1999) .

பத்மசிறி விருது.

11 FilmFare விருது.

இதைவிட உலகளாவிய ரீதியில் 2008ல் Slumdog Millionaire படத்திற்கு இசையமைத்தமைக்கு பெற்றவிருதுகளாக
BAFTA(British Academy of Film and Television Arts) விருது.
Golden Globe விருது.
Broadcast Film Critics Association விருது.

அனைத்துக்கும் மகுடம் சூடும்படியாக 2 Oscar விருதுகள்.
சிறந்த திரைப்பட இசைக்காகவும்(Best Original Score) சிறந்த பாடலுக்காகவும் (Best Original Song) இவ்விரண்டு விருதுகளும்.
எனினும் இவரது இரு பாடல்கள்(O... Saya, Jai Hoo) சிறந்த பாடலுக்கான பிரிவில் போட்டியிட்டாலும் Jai Hoo என்ற பாடலே விருதை தட்டி சென்றது.

எது எவ்வா‌றாயினும் பலரும் பலப்பல அபிப்பிராயங்களை இசைப்புயலை பற்றி கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சில அவரைபற்றி குறை கூறுவதாக உள்ளது.

வேறு மொழி படங்களுக்கு இசைஅமைக்க தொடங்கிய பின் இவர் தமிழில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்று பலரும் கவலைப்படுகின்றனர். இதை உறுதி படுத்துவது போல் கடைசியாக தமிழில் வந்த சக்கரைகட்டி படத்தின் பின் ரகுமான் இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் வேற்று மொழியே. யுவராஜ், கஜினி, ஸ்லம்டக் மில்லியனியர், டெல்கி6 படப்பாடல்களே அவை.

90களில் ரகுமான் போட்ட மெட்டுகளுக்கு நிகராக தற்போதைய பாடல்கள் இல்லை எனறு ஒரு கூட்டம் சொல்கிறது. இக்கருத்து பொதுவாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் தீவிர ரகுமான் விசிறிகள் தற்போது Trend மாறி விட்டது அதற்கேற்ற படி புதுசாக இசையை ரகுமான் வழங்குவதாக கூறுகின்றனர். எனினும் தொடக்க காலங்களில் ரகுமானால் போடப்பட்ட மெட்டுக்கள் எந்த காலத்திலும் காதிற்கு இனிமை தருவனவாக இருந்தது. ஆனால் தற்போது வருகின்ற பாடல்கள் பொதுவாக அவ்வாறானதாக இல்லை. தற்போது வரும் பாடல்கள் பொதுவாக இளவயது உடையோரையே பெரிதும் திருப்தி படுத்துவதாக பலரும் குறைபட்டு கொள்கின்றனர். 2003ல் வெளிவந்த BOYS திரைப்படத்திற்கு பின் ரகுமானின் பாணி சற்றே மாறி இருந்தது. கூடுதலாக Western இசை கலந்த Fast Beat பாடல்களே பெரும்பாலும் வெளிவர‌ தொடங்கின. இதனாலேயோ என்னவோ ஆங்கில மொழிபடங்களிற்காகவும் இவரை ஒப்பந்தம் செய்ய தொடங்கினர்.

என்னதான் குறைகள் வந்தாலும் ரகுமான் என்பவர் இசைக்காகவே பிறந்த ஒரு அழியாத பொக்கிசம் ஆகும்.

இவ்வாறு A.R.Rahmanஐ உச்ச புகழ் நிலைக்கு அடிப்படைகாரணமாக அமைந்தது Slumdog Millionaire என்ற படம்தான் என்றால் அது தவறாகாது. இந்த படத்தை இயக்கிய டானி போயல் 1956ம் ஆண்டு பிறந்த இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆவார். இந்திய எழுத்தாளர் விகாஸ் சுவறூப் எழுதிய Q&A என்ற நாவலை தழுவியே இப்படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இப்படம் மொத்தமாக 8 ஒஸ்கார் விருதை இம்முறை பெற்றுக்கொண்டது. மொத்தமாக 9 விருதுகளுக்காக 10 இடங்களில் பிரேரிக்கப்பட்டிருந்தது. Best Original Song விருதுக்காக இப்படத்தின் இரு பாடல்கள் போட்டியிட்டமையால் ஆகும்.
தவறவிடப்பட்ட ஒரு விருது Best Sound Editing விருதாகும்.



இப்படம் முதலில் Telluride Film Festival மற்றும் Toronto International Film Festival களில் 2008 செப்ரெம்பர் மாதமளவில் திரையிடப்பட்டது. பின்னர் லண்டனில் 2009 ஜனவரி9 லும், மும்பாயில் ஜனவரி22 லும், அமெரிக்காவில் ஜனவரி 23 லும் வெளியிடப்பட்டது.

எவ்வளவுதான் குறிப்பிட்டு கூடிய தரமான படமாக Slumdog இருந்தாலும் லகான் போன்ற (2002ல் ஒஸ்கருக்காக Best Foriegn Language Filmல் பிரேரிக்கப்பட்டது)படங்களுடன் ஒப்பிடும்போது இதில் அவ்வளவு மாயாஜாலம் இல்லாத போதிலும் வெளிநாட்டு இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் கூடிய விளம்பரப்படுத்தல்கள் போன்றவற்றுடன் இந்தப்படம் பல விருதுகளை அள்ளுகிறது என்பது ஒரு பொதுவான உண்மை.

Golden Globe விருதுகளுடன் Slumdog கலைஞர்கள்


இப்படம் பெற்ற Oscar விருதுகள்
Best Picture – Slumdog Millionaire
Best Director – Danny Boyle
Best Original Score – A.R. Rahman
Best Original Song – A.R. Rahman
Best Sound Mixing – Resul Pookutty
Best Film Editing – Chris Dickens
Best Cinematography - Anthony Dod Mantle
Best Adapted Screenplay - Simon Beaufoy

மேலதிகமாக
7 BAFTA(British Academy of Film and Television Arts) விருதுகள்(பிரேரிக்கப்பட்டது 11)
4 Golden Globe விருதுகள்(பிரேரிக்கப்பட்டது 4)
5 Broadcast Film Critics Association விருதுகள்(பிரேரிக்கப்பட்டது 6)

இப்படத்தை பற்றி கடுமையான விமர்சனங்கள் பல தரப்புகளிடமிருந்து எழுந்தாலும் கூட அதையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து இப்படம் உலக அளவில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.



Oscar வென்ற அடுத்த இந்தியர் ரசூல் பூக்குட்டி


இதைவிட நடைபெற்ற வைபவத்தில் Oscar விருது பெற்ற அடுத்த இந்தியர் ரசூல் பூக்கொடியை பலரும் கவனத்தில் கொள்ளவில்லை. ரகுமானின் பிரபலத்தால் இவரைபற்றிய பேச்சுக்கள் குறைவாகவே வெளிவந்தன. ரகுமானின் இசை மூலமாகவே இவர் பிரபலம் அடைந்தாலும் இவரது திறமை இல்லாது ரகுமானால் இவ்வளவு சிறப்பாக அப்படத்திற்கு இசையை வெளிப்படுத்தி இருக்க முடியாது. Richard Pryke, Ian Tapp போன்றோருடன் Slumdog படத்திற்காக சிறந்த இசை கலவை(Best Sound Mixing) Oscar விருதை பெற்றார். 1971ல் கேரளாவில் பிறந்த மலையாளியான இவர் 1997ல் Private Detective என்ற படத்தின் மூலமாக Sound Desingerஆக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். Sound Engineer ஆன இவர் ஸ்லம்டக் மில்லியனரை விட அண்மையில் வெளிவந்த ஹிந்தி க‌ஜினியிலும் Sound Mixerஆக பணிபுரிந்துள்ளார்.

Richard Pryke, Ian Tappஉடன் ரசூல் பூக்குட்டி


இவருக்கு கிடைத்த முக்கிய விருதுகள்
2005ல் Musafir என்ற ஹிந்தி/உருது மொழி படத்திற்காக Zee Cine விருது
2009ல் Slumdog Millionaire படத்திற்காக BAFTA, OSCARவிருது



அடுத்த விடயம் இந்தியர் இருவருக்கு மூன்று ஒஸ்கார் விருது கிடைத்தாலும் இந்தியாவில் எடுக்கப்பட்ட 39 நிமிட Documentary என்று கூறப்படும் விபரணப்படத்திற்கு Best Documentary(Short Subject) உள்ள பிரிவில் அப்பட இயக்குனர் Megan Mylanனுக்கு Oscar விருது கிடைத்துள்ளது. இப்படம் இந்தியாவிலுள்ள மிர்ஸாபூர் மாவட்டத்திலுள்ள PINKI என்ற உதட்டுபிளவினால்(Cleft Lip) அவதிப்பட்ட சிறுமியை பற்றியதாகும். ஒரு சமூக‌சேவையாளர் ஒருவரால் Smile Train எனப்படும் இலவச உதட்டு பிளவு சத்திர சிகிச்சைக்கு அச்சிறுமி கூட்டிச்செல்லப்பட்டு அப்பிள்ளையின் வாழ்க்கை ஒளி மயமானதாக்கப்படுகிறதே அதன் கதையாகும். விருது பெற்ற மேகன் மைலன் சான் பிரான்ஸிஸ்கோவை சேர்ந்தவர் ஆவார்.



Megan Mylan

அதன் Trailer பாக்க விரும்புவோர் கீழே உள்ள Link‌ஐ தொடர்க.

http://www.youtube.com/watch?v=CamEXQ8x72c

4 comments:

பெயரில்லா சொன்னது…

தரமான ஒரு பதிவு..
சில விடயங்கள் எனக்கு புதிதாக இருந்தது...

Unknown சொன்னது…

அண்ணாத்தே... ரஹ்மானின் சமீபத்திய தமிழ் Hits Fast Beat பாடல்கள் மட்டுமில்லையே.. 'சஹானா'- சிவாஜி, 'முன்பே வா'- ஜில்லென்று ஒரு காதல். ‘மருதாணி' ‘i muss you' சக்கரகட்டி.. இப்படியாக நல்ல மெல்லிசைப் பாடல்களையும் தந்திருக்கிறார். டெல்லி-6, யுவராஜ், கஜினி, ஜானே து மெரெ க்யா, அடா என்று அவரின் இசையில் வெளியான படப் பாடல்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். டெல்லி-6 ஒரு முழுமையான இசை ஆல்பம். கேட்டுப்பாருங்கள். பாய்ஸ்ல் அவர் போட்ட துள்ளிசைப் பாணியில்தான் பலர் இன்றும் கோலோச்சுகிறார்கள் தமிழ் சினிமாவில். அந்தப் பாணியை ‘மயிலிறகே' பாட்டு மூலம் மாற்றியதும் அவர்தான்.

கார்த்தி சொன்னது…

நன்றி முகு!!!!

கார்த்தி சொன்னது…

@ Keith
நீங்களும் தீவிர ரகுமான் ரசிகர் போல...
Delhi 6 பாடல்கள் அனைத்தும் அற்புதம்தான். நான் ஏற்கனவே கேட்டுவிட்டேன்.
ரகுமானுக்கு இணை ரகுமான்தான்...
நான் பழைய அவரது பாடலுக்கும் புதிய அவரது பாடலுக்கும் ஒப்பிட்டுதான் கூறினேன்

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்