காதலர் தினம்- 2011
காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்! உண்மைக்காதல் ஜெயிக்கும். பொறுத்திருங்கள்.
காதலர்தினத்துக்காக ஒரு சிலவரிகள்...
உனைக்கண்ட நாளிலிருந்து
முழுப்போதைதான் எனக்கு
பிறகெதற்கு VODKA போத்தல்!
-------------------------------------------------------
தொலைத்ததை தேடுகிறேன்
அவளிடம் மட்டும் - அது
விரும்பியவளிடம் இருந்துவிடவேண்டுமென
-------------------------------------------------------
உன் தரிசனமும் ரகுமான் Albumபோலதான்
எப்போதென்பது புரியாத புதிர்
கிடைத்தால் கொண்டாட்டம்தான்
-------------------------------------------------------
உன் கண்ணை பார்த்தே
பலருக்கு இதயம் துடிக்கவில்லையாம்
உன் கண் என்ன GUNஆ?
திரைதகவல் பெட்டகம்-III
இதன் முந்தய பதிப்புக்களுக்கு கீழே கிளிக்குங்கள்
இந்த பதிவு இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஸ் தொடர்பான சிறப்பு பதிவெனலாம். அவர் தொடர்பான, அவர் பயன்படுத்தும் பாடகர்கள் தொடர்பான தகவல்களை தர இப்பதிவு முயல்கிறது.
Aalaap Raju ஆலாப் ராஜு |
நான் அண்மைக்காலத்தில் வியந்து அடிக்கடி, ஒரு நாளுக்கு சராசரியாக 10தடவைக்கு மேல் கேட்கும் பாடல் (சிலநாட்கள் 50தடவைக்கு மேலும் கேட்டிருக்கிறேன்) ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் எங்கேயும் காதல் படத்திற்காக வந்த ”எங்கேயும் காதல்” என்று ஆரம்பிக்கும் பாடல். காதல் வரிகள் சொட்டும், அலட்டலில்லாத அளவான, அற்புதமான மெலடியில் உள்ள இந்தப்பாடலை தனியே மிகவும் சத்தமாக Wooferல் கேட்கும் சுகமே ஒரு தனிசுகம். இந்த பாடல், கேட்கும் எல்லோரையும் வானத்தில் பறக்கும் உணர்வை தரும். காலையில் இப்பாடலை ஒரு தடவைகேட்டுவிட்டு உங்கள் காரியங்களை தொடக்குங்கள். அந்தநாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.
இதைவிட இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால் இதை பாடியவர் ஒரு புதுமுகம் ”ஆலாப் ராஜு (Aalaap Raju)”. ஒரு Bass Guitar வாத்தியக்காரர் இவர். "அய்யனார்" படத்தில் முதலில் பாடகராக அறிமுகமாகினபோதும் இந்த எங்கேயும் காதல் பாடலே இவருக்கு சிறப்பான அறிமுகத்தை வழங்கியிருக்கிறது எனகூறலாம். இந்த வாய்ப்புக்கு அடுத்ததாக ”கோ” படத்தில் ”என்னமோ ஏதோ” என தொடங்கும் பாடலை பாட வாய்ப்பளித்துள்ளார் ஹாரிஷ். மற்றைய இசையமைப்பாளர்களும் இவரை இனி துரத்துவார்கள் இல்லையாஎன பாருங்கள்.
இதைவிட இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால் இதை பாடியவர் ஒரு புதுமுகம் ”ஆலாப் ராஜு (Aalaap Raju)”. ஒரு Bass Guitar வாத்தியக்காரர் இவர். "அய்யனார்" படத்தில் முதலில் பாடகராக அறிமுகமாகினபோதும் இந்த எங்கேயும் காதல் பாடலே இவருக்கு சிறப்பான அறிமுகத்தை வழங்கியிருக்கிறது எனகூறலாம். இந்த வாய்ப்புக்கு அடுத்ததாக ”கோ” படத்தில் ”என்னமோ ஏதோ” என தொடங்கும் பாடலை பாட வாய்ப்பளித்துள்ளார் ஹாரிஷ். மற்றைய இசையமைப்பாளர்களும் இவரை இனி துரத்துவார்கள் இல்லையாஎன பாருங்கள்.
இதை டைப்பும்போது கூட அதே பாடல்தான். ”பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட”
-----------------------------------------------------------------------
![]() |
”கோ” படப்பாடல்கள் வந்து எல்லோர் மனதையும் கொள்ளயடித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இருபடப்பாடல்கள் குறுகிய காலஇடைவெளிகளில் வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். பலர் கோ படப்பாடல்களை பற்றி நன்றாக கிலாகித்தாலும் என்னை பொறுத்தவரை ”எங்கேயும் காதல்” பாடல்கள்தான் கோ பாடல்களை விட இருபடி முன்நிற்கின்றன. கோ படப்பாடல்களை முதலில் கேட்டபோதே அந்த திப்பு, ஹரிசரன் சேர்ந்து பாடும்பாடலான "Gala Gala காலா Gang" பாடல், சரோஜா பட ”தோஸ்துபடா தோஸ்து” பாடலின் அதே Beatஎன உடனேயே பிடித்துவிட்டேன். இதை உணர்ந்தவுடனேயே நண்பர்களுக்கு CHATல் வெளிப்படுத்தியிருந்தேன். (ஆனால் பாடல் வந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆவதால் பலர் இதைபற்றி குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் இதுவரை நான் அப்படி ஒரிடமும் வாசிக்காதமையால் இதை இங்கே பதிகிறேன்).
Copy அடித்து உருவான கோ பட பாடல்ஆனால் அந்தப்பாடலே யுவன் சங்கர்ராஜா ஆங்கில பாடலொன்றிலிருந்து சுட்டதுதான் என்பது பலரும் அறிந்ததே. பொதுவாக ஹாரிஷின் பாடல்கள் பல ஆங்கில பாடல்களின் சுட்டவடிவம்தான். ஆனால் அதையே மெருகூட்டி அதைவிட சிறப்பாக தருவதில் இவருக்கு நிகர் இவர்தான். உண்மையில் இந்த Original பாடலை யுவன் காப்பி பண்ணியது ஹாரிஸிற்கு தெரிந்திருக்காது. சரோஜா பாடல்களை அவர் கேட்டிராமையால் இது மீண்டும் காப்பி பண்ணப்பட்டிருக்கிறது. முதலே கேட்டிருந்தால் நிச்சயம் மீண்டும் அந்தபாடலையே காப்பி பண்ணாது வேறொரு பாடலை FRESHஆக காப்பி பண்ணியிருப்பார்.
அந்த Original ஆங்கில பாடல் கீழே
-------------------------------------------------------------------------------------
எங்கேயும் காதல் படத்தில் நான் அதிகம் ரசித்த (மற்றவர்கள் வெறுத்த) ஒரு FastBeat பாடல் ”நங்கை நிலாவின் தங்கை” பாடல். (இந்தப்பாடல் Michael Jacksonனிடமிருந்து சுட்ட பாடல் என்கின்றனர் பலரும்). இந்தபாடலின் வரிகளை கேட்டால் நகைச்சுவையாக இருப்பதோடு பாடலின் துள்ளளிசைக்கு மேலும் பலம் சேர்க்கிறது இந்த வரிகள். இந்தப்பாடலை பாடகர் Western Styleல் அழகாக பாடியிருப்பார். உண்மையில் பாடகர் யார் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. பிறகுதான் அறிந்தேன் அவர்பெயர் Richard(றிச்சாட்). Googling செய்தபோது இன்னோர் அதிர்ச்சி அது வேற யாருமில்ல காதல் வைரஸ், யுகா, நாளை போன்றவற்றில் நடித்த பேபி சாலினியின் தம்பி றிச்சாட்தானாம் அவர். நம்பவே முடியவில்லையே!!!
---------------------------------------------------------------------------------------
![]() |
Bombay ஜெயசிறி |
ஹாரிஸ் ஜெயராஜின் ஆஸ்தான பாடகியாக மின்னலே திரையிலிருந்து இருந்து வந்த "Bombay ஜெயசிறி" Dhaam Dhoom படத்தில் ”சகியே” பாடலின்பின் நீண்டகாலம் காணமல் போயிருந்தார். அவரிற்கு பதில் ஜெயசிறியைபோல் கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கும் சுதா ரகுநாதனை வாரணம் ஆயிரத்தில் ”அனல் மேலே பனித்துளி” ஆதவனில் ”ஏதோ ஏதோ பனித்துளி” போன்ற பாடல்களுக்கு ஹாரிஸ் பயன்படுத்தியிருந்தார். ஆனால் கோ படத்தில் ”வெண்பனியே” பாடலுக்கு மீண்டும் Bombay ஜெயசிறியை பயன்படுத்தியது மகிழ்வான விடயம். என்னை பொறுத்தவரை திரைப்பாடல்களுக்கு சுதா ரகுநாதனை காட்டிலும் பொருத்தமானவர் Bombay ஜெயசிறிதான். --------------------------------------------------------------------------------------
![]() |
VijayPiragash |
மீண்டும் இன்னோர் பாகத்தில் சந்திப்போம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
▼
2011
(29)
- ► செப்டம்பர் (2)
