HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
தொடக்க டிஸ்கி: ஹாரிஸ்ஜெயராஜ்க்கு முழுதாக ஆதரவு குரல் கொடுக்கவே இந்த பதிவு. மற்ற இசையமைப்பாளர்களை குறைசொல்லவோ கலாய்க்கவோ இல்லை.ஹாரிஸின் எதிர்ப்பாளரென்றால் வாசிக்க முதலே Close பண்ணிடுங்க.
பெரும்பாலும் 2006க்கு பிறகு வந்த ஹாரிஸின் அல்பங்கள் ஹிட் ஆகிறதோ இல்லையோ பெரும்பாலும் எல்லாத்தரப்பிலும் பலத்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறது. பெரும்பாலும் இந்த குற்றச்சாட்டுக்கள் இரண்டு வகைக்குள்ளேயே அடங்கி விடுகிறது. 1-->இவர் வேறு மொழி பாடல்களை லாவகமா ஆட்டய போட்டு தனது பாட்டுக்களை ஹிட் ஆக்குகிறார். 2--> தான் முதலே பயன்படுத்திய மெட்டுக்களை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார்.
இதிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான பாரிய்ய ஹாரிஸை கேலிப்படுத்தும் தாக்குதல்கள் பெரிய்ய ஹீரோக்களின் படங்களின் அல்பம் வெளியாகிறபோதே சுனாமிபோல பெரிய்ய அலையாக கிளம்பும். அண்மையில் வந்த அல்பங்களே இதுக்கு பெரிய்ய எடுத்துக்காட்டு. சூர்யாவின் 7ம் அறிவு, மாற்றான் விஜயின் நண்பன் போன்ற அல்பங்கள் கடும் ஏளனப்படுத்தல்களை எதிர்கொண்டது. ஆனால் ஜெயம்ரவியின் எங்கேயும் காதல், ஜீவாவின் கோ, உதயநிதியின் OKOK போன்ற அல்பங்கள் ஏலவே குறிப்பிட்ட பெரிய்ய மாஸ் ஹீரோக்களின் அல்பங்கள் எதிர்கொண்ட குற்றச்சாட்டுகளுடன் ஒப்பிடும்போது இல்லையென்று சொல்லும் அளவுக்கு அங்காங்கே சொற்பமான அடிகளையே வாங்கியிருந்தது.
இதுவரை வந்த அல்பங்களை கொண்டு 2012ன் Super Hit அல்பம் என்று நண்பனை சொல்லிவிடலாம். ஹாரிஸ் வழமையான பாணியிலிருந்து கொஞ்சம் மாறி புதுமைகளை புகுத்தியிருக்கிறார் என்று நடுநிலையாளர்களால் கூறப்பட்ட இந்த அல்பமும் வழமைபோல சகட்டு மேனிக்கு தாக்கப்பட்டது. நண்பனில் பழைய மாதிரியான ஹாரிசின் மெட்டுக்கள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் சம்பந்தம் சம்பந்தமே இல்லாத பக்திபாடல் மெட்டுக்களுடன் beatகள் ஒத்துப்போகாத தருணங்களில் கூட ஹாரிஸ் எதிர்பாளர்கள் இது அதின்ர கொப்பி அப்பிடி இப்பிடி என்று கூச்சலிட்டிருந்தனர்.
அண்மையில் மாற்றான் பாடல்கள் கேட்டபோது பெரும்பாலான பாடல்கள் எனக்கும் வேறு பாடல்களை ஞாபகப்படுத்தியதுதான்.
1. கால் முளைத்த பூவே - ”சுந்தரி சிறிய ரெட்டைவால்” கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்
இரண்டு பாடல்களும் அப்பிடியே ஒரே மெட்டு என்று சொல்லேலாது. ஆரம்பத்தில் Mouth Organனோடு தொடங்கும் chorus இசையும் (ரகுமானின் பாடலும் Mouth Organனுடனேயே ஆரம்பிக்கிறது) இடையிடையே வரும் பெண்களின் Chorous இசையும் இந்தப்பாடலை எனக்கு ஞாபகப்படுத்தியது.
2. நானி கோனி ராணி - தொடக்க இசை பச்சைக்கிளி முத்துச்சரம் ”கரு கரு விழிகளால்” பாடலை ஞாபகப்படுத்தியது. அதோடு பாடல் பூராவும் வரும்மெட்டு ஆதவன் ”ஏதோ ஏதோ பனித்துளி” பாட்டை ஞாபகப்படுத்தியது. ஆதோடு அயனின் ”நெஞ்சே நெஞ்சே”க்கு அடித்த drums அடியும் இதிலே பின்னணியில் வந்தது.
3. இரட்டை கதிரே - எல்லோருக்கும் தெரிந்தது அயனின் டைட்டில் Song "வானம் யாவும் மேகம்”
மற்ற 2பாடல்களும் எங்கயோ கேட்டமாதிரி இருந்தாலும் என்ன பாடல்களை போல் அந்தப்பாடல்கள் இருக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியல. இதில் நிச்சயமாக இரட்டைக்கதிரே பாடல் KV.Anandன் வேண்டுகோளுக்காகவே அந்த அயன் Title Song மெட்டிவிருந்து உருவப்பட்டிருக்கும். வித்தியசமான அந்த மெட்டு அயனில் வந்தபோதே இது ஒரு முழுப்பாட்டாக வந்திருக்கலாம் என்று கவலைப்பட்டோரில் நானும் ஓராள்.
ஹாரிஸ் இப்பிடி பம்மாத்து காட்டி உல்டா விளையாட்டுக்கள் பண்ணும்போது எனக்கு Strike பண்ணுறதை ஹாரிஸ் ரசிகனாக இருந்தபோதும் நானும் பதிவுகள் மூலம் சொல்லிதான் வந்திருக்கிறேன். அது GV.பிரகாஸாக இருந்தால் என்ன யுவன்சங்கர்ராஜாகவிருந்தாலென்ன. ஆனால் இப்போது பொதுவாக எல்லா தரப்பிலும் இருந்து அடிவாங்குபவர் ஹாரிஸ் மட்டும்தான். இந்த விளையாட்டுக்களை ஹாரிஸ் மட்டுமல்ல எல்லாரும்தான் செய்கிறார்கள் ஆனால் ஹாரிஸ் கொஞ்சம் ஓவராக செய்கிறார்.
2010ன் சிறந்த படமான மைனா பட பாடல்களும் அப்போது பெரு வரவேற்பை பெற்றது. அதில் ”நீயும் நானும்” பாடல் ஆரம்ப்பிக்கும் மெட்டும் AR.Rahmanன் கருத்தம்மா பட உன்னிமேனன் சுஜாதா பாடிய ”போறாளே பொண்ணுதாயி”ல் ”வெள்ளாமை நீதான் வெள்ளாடு நாந்தான் வெட்கத்த விட்டுத் தள்ளம்மா”, "வெள்ளாம காட்ட விட்டுத் தர மாட்டா பண்பாட்ட கட்டிக்காக்கும்” வரிகள் அப்பிடியே மைனாவின் ”நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் புள்ள” மெட்டுடன் ஒத்துப்போயிருந்தது.
வேட்டையில் யுவன்சங்காராஜாவின் ”தைய தக்கா” பாடல் ஆரம்பிக்கும்போது (0.30s-0.37s) இடையில்(3.55s-4.02s), இறுதியில்(5.10s-5.17s)இடைவெளிகளிலும் வரும் ஒரு இசைசெருகல் அப்பிடியே விஜய்அன்ரனியின் வெடி பட "இச்சு இச்சு கொடு” பாடலின் (0.07s-0.20s) இசைசெருகலுடன் அப்பிடியே ஒத்துப்போகிறது. வெடி பாடல்கள் முதலிலும் வேட்டைபாடல்கள் பின்னரும் வந்தது.
அண்மையில் ”எங்கேயும் எப்போதும்” புகழ் இசையமைப்பாளர் சத்யாவின் 4வது திரைஅல்பம் ”பொன் மாலைப்பொழுது” வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இடம்பெற்ற ”அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்” பாடல் அப்பிடியே ஹாரிஸ் ஜெயராஜின் ஆதவன் ”ஏதோ ஏதோ பனித்துளி” பாட்டை ஞாபகப்படுத்தியது.
இப்பிடி அப்பிடி இப்பிடின்னு சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
திருப்ப திருப்ப ஒரே கதையுடன் வரும் மசாலாபடங்களை ரசிக்கிறோம். வேறு மொழி பட, Novel களின் inspirationனுடன் வரும் படங்களை கூட ரசிக்கிறோம் மெச்சுகிறோம். ஏன் ஹாரிஸின் ஆட்டைகளை குறைகூறினாலும் சொந்த நல்ல மெட்டுக்களை பாராட்டலாம்தானே?
முடிவு டிஸ்கி: ஹாரிஸையும் இவ்வளவு ரசிக்கிறனே. இவனுக்கு இசையறிவே இல்லையா? என்று யாரும் கேட்டால் எனக்கு அது இல்லாமலே இருந்து விடட்டும்!!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
5 comments:
சப்பைக்கட்டு :)
எனக்கும் பிடித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் தான்.. இருந்தாலும் இப்பொழுதெல்லாம் அதை மூச்சு கூட விடுவதில்லை.. கொப்பி பண்ணுவதை தவிர பாடல்கள் காதுக்கு இனிமை என்பதை மறுக்க இயலாது.. எப்படியோ ஆயிரம் சொன்னாலும் வருசத்தின் ஹிட் பட்டியலில் ஹாரிஸின் பாடல்கள் இல்லாத பட்டியல் அவர் அறிமுகம் ஆகியதில் இருந்து இல்லை என்பதை மறுக்க இயலாது..
//ஹாரிஸையும் இவ்வளவு ரசிக்கிறனே. இவனுக்கு இசையறிவே இல்லையா? என்று யாரும் கேட்டால் எனக்கு அது இல்லாமலே இருந்து விடட்டும்!!//
வழிமொழிகிரேன்
நானும் ஒரு ஹாரிஸ்ஜெயராஜ் ரசிகன் தான்
மின்னலே,மஜ்னு,12B வந்த போது எந்தளவுக்கு அவரது இசை கவர்ந்ததோ அதே அளவுக்கு எங்கேயும் காதல், கோ வரை அவரது இசைக்கு அடிமையாக இருந்தேன் ( இடையில் ஒரு சில படங்கள் தவிர) ஆனால் அதன் பின்னர் வந்த ஏழாம் அறிவு, நண்பன் ஒரு வித கேள்விக் குறியை ஏற்படுத்தியது ஒரு கல் ஒரு கண்ணாடி பரவாயில்லை ஆனால் இந்த மாற்றான் கடும் ஏமாற்றத்தை தந்து விட்டது
/முடிவு டிஸ்கி: ஹாரிஸையும் இவ்வளவு ரசிக்கிறனே. இவனுக்கு இசையறிவே இல்லையா? என்று யாரும் கேட்டால் எனக்கு அது இல்லாமலே இருந்து விடட்டும்!!/
இது நான் ஸ்ரீதேவியை ரசிப்பதற்கு கூறும் காரனந்த்தை போன்றது :)
ஆண்டி ஹீரோவா?இருந்துவிட்டு போகிறேன் ஸ்ரீதேவிக்காக!!
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக