பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
ஜனவ
04
டிஸ்கி: இந்த தொடர் பதிவுமூலமாக ஒவ்வாரு பாடல்களும் கேக்கும்போது ஏற்படும் நினைவுகள் தொடர்ச்சியாக பகிரப்படும். பாடல்கள் மூலமாக கடந்து வந்த பாதைகளை அசைபோடுதல் பதிவின் நோக்கமாக இருக்கிறது.
இடம்பெயர்ந்து சாவச்சேரிக்கு வந்து வெறும் ஒரு மாதமும் ஆகியிருக்காது. 1995பிற்பகுதி அது. ஒரு விடிகாலை நேரம், அண்மையில்தான் றேடியோவுடன் setup செய்யப்பட்ட டைனமோவை சைக்கிளை குப்பிற கிடக்கவிட்டு கையால் பெடலை சுழற்ற தொடங்குகிறார் பெரியப்பா. ஒரு பெரிய்யவீட்டில் நாங்கள் 3குடும்பம் தங்கியிருக்கிறோம். நானும் அண்ணாவும் படுத்திருந்த ஹோலுக்கு அண்மையில் நிலையெடுத்திருந்த றேடியோ, இலங்கை சர்வதேச வானொலியின் அறிவிப்புடன் எனது நித்திரையை குழப்புகிறது. எனக்கும் வேறு சிந்தனை இன்றி படுத்திருந்தபடியே சுழலும் பின்பக்கசில்லின் வால்ரியுப்கட்டை பற்றி அலைவுகாலத்தை கண்இமைப்பொழுதை கொண்டு கணக்கிட முயற்சிக்கிறேன். ஒரே சீராக சில்லு சுற்றுகிறதா இல்லையா என்பதை அறியதான் முயல்கிறேன். என்னை அறியாமலே எனது கவனம் சிதறுகிறது.
அந்த மெட்டின் அடி அந்த இனிமை எனது வழுக்கொண்ட கணிப்பை மேலும் கேள்விக்குள்ளாக்கிறது. என்னால் சில்லு சுற்றுவதை இப்போது உணரக்கூட முடியவில்லை. மார்கழி மாதம் நெருங்கிவிட்ட அந்த மழைக்குளிருக்கு மேலாக அந்த பாடல் மேலும் குளிர்ச்சியை அள்ளி கொட்டுகிறது. வானத்தில் பறப்பது போல ஒரு உணர்ச்சி. அப்போது சினிமா தொடர்பில் அறிவுமட்டம் பூச்சியம். யார் பாடினது இசையமைச்சது ஒண்டும் தெரியாது. ஒண்ணு மட்டும் விளங்கியது பாட்டு மக்சிமம் எண்டு.
இந்தப்பாட்டை ஒவ்வொருமுறை கேக்கும்போதும் இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் இருந்த நினைவுகளும் அந்த காலைப்பொழுதும்தான் ஞாபகத்தில்!!! ஒவ்வொரு பாடல்களும் தருகின்ற நினைவுகள் ஏராளம்.
-------------------------------------------------------------------------------
அப்போதுதான் எமக்கு A/L ஆரம்பித்திருந்தது. 2003ன் தொடக்கம். பாடகர் கார்த்திக் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த காலப்பகுதி. சனி ஞாயிறு விடிய 7.30க்கு ScienceHallல Class தொடங்கிடும். விடிய செந்தில்ராஜ் Sirன்ர CombinedMaths. அந்தாள் Time எண்டா Time. என்ன இடி இடிச்சாலும் சரியா 7.30க்கு வகுப்பு தொடங்கிடும். (சுனாமி அடிச்ச அடுத்த நாளே அதேநேரத்துக்கு தொடங்கின punctualityஆளு). Startல வேறகொட்டிலுல நடந்தாலும் கொஞ்ச காலத்துக்கு பிறகு Sience Collegedன்ர தொங்கல் கொட்டிலிலயே விடிய Class permanentஆயிடுச்சு. அந்த கொட்டிலுன்ர அமைப்புதான் எனக்கு எமன்; யாரும் வகுப்புக்கு உள்ளுக்கு போகோணுமெண்டா முன்னாலதான் போகோணும். Class தொடங்கினால் பிந்தி வாற ஆக்கள வடிவா படிப்பிக்கிறவருக்கு தெரியும்.
7.30தொடங்கி பின்னேரம் 3.30மட்டும் பாடங்கள் இருக்கிறதால வடிவா சாப்பிட்டு போகணும்.
என்னதான் தலைகீழா நிண்டாலும் என்னால சரியான நேரத்துக்கு என்னால போகமுடியுறேல. அவ்வளவு ஆக்களுக்கு முன்னால ஒவ்வொருதரமும் பிந்திபோறது. சரியான அந்தரம். ஒவ்வொரு தரமும் போறணைக்குள் போற உணர்வுதான். என்னதான் பிந்திப்போட்டுதுன்னு தெரிஞ்சு குதிரை வேகத்தில் பெடலை மிதித்து வரும்போதும், ஸ்ரான்லி Road ஆரியகுளம் ஏறும் சந்தியில் இருக்கும் சாப்பாட்டுக்கடையில் ShakthiFMலிருந்து ”அடிசுகமா சுகமா சுடிதாரே” என்ற பாட்டை கேட்கும்போது. எனது கால்கள் பெடல்களை நோக்கிய தள்ளுகையை பூரணமாக நிறுத்திவிடும். என்னதான் வகுப்புக்கு பிந்தினால் என்ன? அந்த கடையை கடக்கும் நேரத்தை குறைவாக்கினால் பாடல் என் காதில் ஒலிக்கும் நேரம் கூடுமில்லயா. என்ன மாயமோ மந்திரமோ பெரும்பாலும் 7.40/7.35 நேரப்பகுதியில் அந்த பாட்டு அந்த சந்தியில் ஒலிக்கும். நானும் அந்தநேரத்திலெல்லாம் AI Disableஆகின VBS2 Unit மாதிரிதான் தடுமாறுவேன். எனது கூட்டாளிகள் எல்லோரும் Backbenchers என்றபடியால் பிந்திபோனாலும் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன்.
இந்தப்பாட்டை எப்ப எங்க முதல்கேட்டன் என்று ஞாபகம் இல்லை. இப்போது கேக்கும்போதெல்லாம் ScienceHall, ஆரியகுளம்சந்தி, ALகாலப்பகுதிதான் ஞாபகத்தில். LoveTodayல் SPBன் குரலின் ”என்னஅழகு” பாடலை மெருகூட்டிய அதே இசையமைப்பாளர் சிவா.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
0 comments:
கருத்துரையிடுக