முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை

என்னதான் மற்றவர்களை கணக்கெடுக்காமல் ஓவராக தாறுமாறாக பேசினாலும் சிலரிடம் இருக்கு மதிப்பு குறைவதில்லை. அதுபோலதான் இயக்குனர் மிஸ்கினிடம் ஒரு எதிர்பார்ப்பு கலந்த மதிப்பு சினிமா ரசிகர்களிடயே இருந்து வருகிறது. சித்திரம்பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம்செய் என்று இவரால் வந்த படைப்புக்கள் வித்தியாசமானவை இவரது தனி முத்திரையை வெளிப்படுத்தியவை. இவரது முதல் 2படங்களும் சூப்பர்ஹிட்டாகவும் நந்தலாலா பெரிதாக சோபிக்காமலும் (பலதரப்பாலும் பெரிதாக பாராட்டப்பட்டாலும்) யுத்தம்செய் முதலுக்கு மோசமில்லாது நன்றாகவும் போயிருந்தது.


உலகசினிமாவை உல்டா பண்ணுகிறார் (நந்தலால படத்திற்கே முக்கியமாக எழுந்தது) என்று ஆங்காங்கே கூச்சல்கள் எழுந்தாலும் திரையுலகில் இவரது பயணம் உறுதியாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இயக்குனராக வசனகர்த்தாவாக பாடகராக நடிகராக என்று பல அவதாரங்கள் அனைத்திலும் கலக்கி இருந்தவர்தான் இந்த மிஸ்கின். 

தனது கனவுப்படம் (Dream Movie) என்றும் தமிழ் சினிமாவில் முதலாவது Super Hero Filmஎன்றும் மிஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட படம்தான் இந்த முகமூடி. தனது முதல் இரு படங்களுக்கும் இசைக்காக சுந்தர்.C.பாபுவையும் அறிமுகப்படுத்தி பயன்படுத்திய இவர் நந்தலாலாவுக்கு இளையராஜாவையும் இறுதியாக யுத்தம் செய்யிற்கு புதுமுகமாக இசையமைப்பாளர் Kயையும் அறிமுகப்படுத்தியிருந்தார். மிஸ்கினின் படங்களில் பாடல்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்திலும் பின்னணி இசைக்கு தனியொரு முக்கியத்துவம் கிடைப்பது வழமை. எனினும் நந்தலாலா தவிர்த்து சித்திரம்பேசுதடியிலிருந்து  ஒவ்வொரு படத்திலும் டப்பாங்கூத்து பாடல் ஒன்று வந்து அந்தவருடத்தின் சூப்பர்ஹிட் என்கிற அளவுக்கு அது வெற்றியும்பெற்று வந்துள்ளது. யுத்தம்செய்யில் ஒரு பாடலிலும் கலக்கலான பின்னணி இசையினுாடாகவும் அறியப்பட்ட Kயையே மீண்டும் முகமூடிக்கும் கழமிறக்கியிருந்தார் மிஸ்கின்.


படம் எப்பிடி என்கிற கேள்விக்கு முதல் ஏன் இதை மிஸ்கின் தமிழின் முதலாவது Super Hero படமெண்டு சொன்னார் என்கிறது புரியாத புதிராகவே இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை ஆங்கில படங்களில் வருகின்றதுபோல ஆச்சர்ய அமானுச சக்திகளை கொண்ட ஹீரோவைப்பற்றிய கதைகளே Super Hero படங்களில் உள்ளடங்கும். இந்தப்படத்திலேயே நரேன் அடிக்கடி சொன்ன படப்பெயர்களான SuperMan SpiderMan IronMan போன்ற படங்கள். ஆனால் தமிழ் சினிமாவில் வந்த கந்தசாமி வேலாயுதம் படங்களை யாரும் அந்த Categoryக்குள் போடுவார்களா? அப்பிடி போடப்பட்ட படம்தான் இந்த முகமூடியும். Atleast ஜித்தன் படத்தில் வந்த மாதிரியேனும் ஒரு அற்புதசக்திகூட ஹீரோவுக்கு இல்லை. ஆனால் சில சகாசங்களை செய்கிறார் ஹீரோ. தமிழ்சினிமாவில் அமானுச சக்திகள் கொண்ட ஹீரோக்கள் வருவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் லாஜிக் இல்லை என்பார்கள் என்பதால்தான் இப்பிடி என்றால் சும்மா ஒரு மனிதர் வெவ்வேறு இடங்களுக்கெல்லாம் கணப்பொழுதில் போகும் லாஜிக்கை என்னவென்று சொல்வது. ஒரு திறமையான இயக்குனர் இப்பிடி எதையோசித்து செய்தார் என்பது புரியாத புதிர்தான்.



படம் முதல்பாதியில் மிஸ்கினின் அரசாட்சி என்று சொல்லும்படியாக அவரது வழமையான பாணியில் சுவாரஸ்யமாக வேகமாக நேரம்போவதே தெரியாமல் போகின்றது. குடும்பம், அடிதடிஅக்சன், காதல், மர்மமனிதர்கள்  திரில் என்று அற்புதமாக பிணைக்கப்ட்டு அனைத்து காட்சிகளும் நேர்த்தியாக சென்றிருந்தது. ஆனால் இரண்டாம்பதியோ  எடுத்துக்கொண்ட Story Concept சொதப்பலால் முதல் பாதியின் வேலைகளை மறக்கசெய்யக்கூடியவாறு சும்மா ஏனோதானோவென்று சென்றுவிட்டது. சொல்ல வந்த கதையின் வினைதான் அது. மிஸ்கின் எடுத்துக்கொண்ட கதை படத்தை சுவாரஸ்யமாக 2வது பாதியில் கொண்டு செல்லவிடவேயில்லை. இந்த கதையைகொண்டு படத்தை சுவாரஸ்யமாக ஆக்கியும் இருக்கேலாது. மிஸ்கினும் சொதப்ப தொடங்கி விட்டார் என்று 2வது பாதியில் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். படம் மொக்கை விசர் கேவலம் என்று சொல்லவில்லை. ஆனால் படம் வாய்க்கவில்லை ”பார்க்கலாம் ரகம்” என்பதனுள்தான் இந்த 2வது பாதி சொதப்பாலால் சொல்லலாம்.

சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தாலும் சூப்பர்ஹீரோ Subject என்று சொன்ன பில்டப்பிற்கு ஏற்றவாறு பெரிதாக சண்டைக்காட்சிகள் இருக்கவில்லை. ஜீவா கொடுத்தவேலையை அழகாக செய்திருக்கிறார். வழமையான அவரின் அலட்டலில்லாத அளவான நடிப்புடன் அழகாகவும் தெரிகிறார். (நீதானே என்பொன்வசந்தத்தின் பாதிப்போ  தெரியவில்லை). அறிமுக ஹீரொயின் பூஜா கெஹ்டேயிற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. நடிப்பையும் கணிக்க முடியவில்லை. நரேனிற்கு இறுதி காட்சிகள் தவிர பெரிதாக பேசுவதற்குரிய காட்சிகள் இல்லை. எனினும் நரேன் காட்சிகளில் எதிர்பார்த்தளவு மிரட்டவில்லை.

படத்தின் அல்பத்தில் மொத்தம் 3 பாடலகள் என்றாலும் சின்மயி பாடிய ”மாயாவி” பாடல் படத்தில் இடம்பெறவில்லை. அதன் ஆரம்ப beatகள் இடையிடையே பயன்பட்டாலும் முக்கியமாக படம் நிறையும் தருவாயில் அந்த ஆரம்ப இசையை மட்டும் போட்டார்கள் பாட்டை கடைசிவரை காட்டவேயில்லை. மிஸ்கின் பாடிய ”நாட்டில நம்ம வீட்டில” பாடல் மெட்டு வேறு அதே மாதிரி பாடல்களை ஞாபகப்படுத்தினாலும் அந்த டப்பாங்கூத்து பாடல் எடுக்கப்பட்ட விதமும் பாடலும் நன்றாக இருந்தது. பெரிதாக ரசிக்கப்பட்ட ”வாய மூடி சும்மா இருடா” பாடல் வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருந்தது நன்றாக Visualsம் வந்திருந்தது.

யுத்தம்செய் போலவே படத்தின் பின்னணி இசை படத்தின் ஊன்றுகோல். அதிரடியான கலக்கல் இசையை வழங்கியிருந்த இசையமைப்பாளர் K இன்னும் யுத்தம்செய் பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பது பின்னணி இசையிலும் ”வாய மூடி சும்மா இருடா” பாடல் இசையிலும் தெளிவாகியிருந்தது. ”யுத்தம்செய்”இல் மர்மமான இடங்களில் பெரும்பாலும் போடப்பட்ட அந்த இசை மீண்டும் இங்கேயும் பெரிதாக தலை காட்டியிருந்தது. என்றாலும் பல இடங்களில் Kயின் பின்னணி இசைதான் படத்தின் ஹைலட்டே.

பெரிதாக எதிர்பார்க்கபட்ட முகமூடி கடைசிவரை மூடியமுகமாகவே சென்றது ரசிகர்களுக்கு பெரிய்ய ஏமாற்றம்தான். முதல்முறையாக மிஸ்கினில் தடுமாற்றத்தை இந்தப்படத்தில் உணர்ந்தேன்.

4 comments:

கோவை நேரம் சொன்னது…

பார்க்கலாம் ரகம் ....கண்டிப்பாக...நல்ல விமர்சனம்..

நிராதன் சொன்னது…

என்னை பொறுத்த வரை நரேன் வில்லன் நடிப்பு பரவாயில்லை
அண்ட் கார்த்திகன் மிஸ்கின் ஒரு கலந்துரையாடலில் சொல்லி இருக்கிறார் சுப்பர் ஹீரோ எண்டவர் ஒரு சிறப்பாற்றல் கொண்டவரே தவிர அமானுஷ்ய சக்தி கொண்டவர் அல்ல உதாரணமாக மாடிக்கு மாடி தாவுவது பிளேனை விட வேகமாக ஓடுவது. அதை தமிழ் ரசிகர்களும் தமிழ் படங்களில் ஏற்று கொள்ள மாட்டார்கள்
சோ மிஸ்கின் சொன்னது என்ன எண்டா இது தமிழ் படம் என்பதை மனதில் வைச்சு கொண்டு படம் பாருங்க எண்டு
சோ நீங்க சுப்பர் ஹீரோவா இதில எதிர் பாக்கேலாது
பேட் டிராகன் லீ எண்ட பில்டப் எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்!!!

Bond 2018 சொன்னது…

அருமையான, நியாயமான கருத்துப்பகிர்வு. வாழ்த்துக்கள். திரைப்பட சூப்பர் ஹீரோ பற்றி எழுதும் நீங்கள், காமிக்ஸ் புத்தக கதாநாயகர்கள் பற்றியும் கொஞ்சம் எழுதலாமே நண்பரே?

http://www.facebook.com/pages/Tamil-Comics-Lion-Muthu-Classics/312096298840069

பெயரில்லா சொன்னது…

buy tramadol without a script buy tramadol echeck - tramadol in dogs

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்