காதல் செய்வோம்!
தொடர்ச்சியான இரவு நேர Training ஆல் மனமும் உடலும் நன்றாக களைத்துப்போயிருந்தது. நேற்றுதான் எனது பொறுப்பாளரிடமும் நேரத்துக்கு Reportகள் அனுப்பவில்லை என்று வாங்கிக்கட்டியிருந்தேன். அதுக்கு சரியான காரணங்கள் என்னிடம் இருந்தாலும் அதை சொல்லோணும் என்று நான் விரும்பவில்லை. ஏனெனில் எனது வேலைகளை ஒழுங்காக இயலுமான அளவு வடிவாக செய்திருந்தேன். இவ்வளவு கஷ்டப்பட்டும் பயனில்லை என்று நினைத்த போது மனது ரொம்பவே சலித்துப்போயிருந்தது. நடைபிணமாக அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினேன். செய்யும் எந்த செயல்களிலும் பிடிப்பு இல்லாது இருந்தது. ஒரு பதிவு இடும் நேரம் இல்லை எனினும் மற்ற வேலைகளை மூட்டைகட்டி வைச்சுவிட்டு தற்போதைய நாளிற்கு ஏற்றபடி ஒரு பதிவை இட எண்ணியுள்ளேன்.
நாட்டில் நடைபெறும் கோரநிகழ்வுகளிற்கிடையில் இது தேவைதான என்று பலர் நினைக்க கூடும். நண்பர் ஒருவர் அதிகாலை வேளையில் அனுப்பிய Messageல் அக்கொடூரங்கள் படங்களாக காட்டப்பட்டிருந்தது. நித்திரையால் விழித்த எனக்கு நல்ல தொடக்கம். பார்க்கவே முடியவில்லை, அழிய பிறந்த இனம் தமிழ் இனம் என நினைத்துக்கொண்டேன். எது எப்படி இருந்தாலும் நான் எழுத வந்த விசயத்துக்கு வருகிறேன்.
நாளை காதலர் தினம் பெப்ரவரி 14. உலகம் முழுக்க காதலர்களால் கொண்டாடப்படும் தினம்.
காதல் புனிதமானது தூய்மையானது என்றெல்லாம் சொல்கிறார்களே காதலிப்பவர்களையும் நடைமுறையிலுள்ள காதலையும் பார்த்தால் அப்படியா தெரிகிறது? எல்லாக்காதலையும் காதலிப்பவர்களையும் அவ்வாறு கூறவரவில்லை. பெரும்பாலான காதல் இப்போது கெட்டு சீரழிஞ்சு கிடப்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய உண்மை. அன்றாடம் சாலை ஓரங்களிலும் கடற்கரைகளிலும் பொதுஇடங்களிலும் காண்கின்ற காட்சிகள் பல முகத்தை சுழிக்க வைக்கின்றன. சோடிகள் சேர்ந்து இருந்து செய்யும் சேஷ்டைகள் கொஞ்ச நஞ்சமில்லை. மற்ற ஆக்கள் பொது இடங்களில் இருக்கிறார்களே என்பதையும் சிந்திப்பதில்லை. இதுவா காதல் ? இதற்கு பெயர் வேறு!
காதல் செய்யும் இருவரும் கைகளை பிடித்தவாறே ஊர் முழுக்க பவனி வந்தால்தான் காதல் எண்டு சொல்லலாம் என்கின்றனர். யார் வகுத்த சட்டங்கள் இவை? திரைப்படங்களில் காட்டப்படும் சில பிழையான காட்சிகளை நம்மவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அதன் படியே நடக்க முயல்வதுதான் கேவலத்திலும் கேவலம். ”நளதமயந்தி” , ”அழகிய தீயே” போன்ற தரமான தூய்மையான காதல் உள்ள படங்களை பார்க்காததன் விளைவுதான் இது. காதல் என்ற பெயரில் எத்தினை படங்கள் வந்திருக்கும் அனைத்து படங்களும் காதலை ஒழுங்காக சொல்லியிருக்கா என்பது கேள்விக்குறியே. இனியாவது, காதலிப்போர் மேலே குறிப்பிட்டவற்றை கவனித்தால் சரி!
மதம் மொழி இனம் கடந்து மனங்களை காதல் செய்வோம்.
எத்தடைகளையும் இரு மனம் கொண்டு தகர்த்து காதல் செய்வோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
12 comments:
காதலர் தின வாழ்த்துக்கள்
இப்போதெல்லாம் காமத்தில் தொடங்கி தான் காதலில் முடிகிறது !
அன்பே நமக்கிடையிலிருக்கும் உறவை காதல் என்று சொல்லி எம்முடைய உறவை கொச்சைப்படுத்த விரும்பவில்லை!!!
ஆதிரைக்கும் காதலர்தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
@கோபம்
//இப்போதெல்லாம் காமத்தில் தொடங்கிதான் காதலில் முடிகிறது !
இதெல்லாம் காதல் என்ற வகைக்குள் அடக்க முடியாதவை.
@சுதந்தரி
// காதல் என்று சொல்லி எம்முடைய உறவை கொச்சைப்படுத்த விரும்பவில்லை!!!
இப்ப காதல் என்று சொல்லுவதே கேவலமாகி போய்விட்டதா??
என்ன நண்பா... கதலிக்கலாம் எங்கிறியா??? இல்லை கதலிகவே வேனங்றியா????
கோபம் கூறியது...
இப்போதெல்லாம் காமத்தில் தொடங்கி தான் காதலில் முடிகிறது !...
\\\\
நமக்கு தெரியாது மாப்பு...
நளதமயந்தி...
அழகியதீயே..
நல்ல படங்கள் தான்
// @ கவின்
என்ன நண்பா... கதலிக்கலாம் எங்கிறியா??? இல்லை கதலிகவே வேனங்றியா????
வருவதுக்கும தொடர்ச்சியாக கருத்திடுவதிற்கும் மிக்க நன்றி!!!
நான் வடிவா சொல்லியிருக்கிறேனே காதல் செய்வோம் எண்டு.....
நான் சாடியிருப்பதெல்லாம் காதல் என்ற பெயரில் நடைபெறும் சில்மிசங்களை.
இவற்றால் உண்மையான காதலுக்கும் கெட்டபெயர்.
இவற்றை திருத்துவோம்.
// @ கவின்
நளதமயந்தி...
அழகியதீயே..
நல்ல படங்கள் தான்.
தரமான படங்கள் அனைவரும் கட்டாயம் பாக்கவேண்டிய படங்களும் கூட
சண்டையை தொடங்குகிறேன்... சமாதானத்துக்காக.....
சமாதானமாய் இருக்கிறாய் சண்டைக்காக....
நாடு நிலைமையும் இது தானா?
@ தங்கம்
//நாடு நிலைமையும் இது தானா?
யாருக்கு தெரிகின்றது நாடு போகும் நிலை
கருத்துரையிடுக