முதலாவது போலீஸ் நிலைய அனுபவம்-I


எனது முதலாவது பொலிஸிடம் ஆப்பிட்ட அனுபவம் குறித்து இதில் பதிவிடஇருக்கிறேன். இச்சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலாயிருக்கும். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. அந்நாளில் வழமையாக வகுப்பொன்று பம்பலப்பிட்டியில் 10.30-2.00 இருந்தது. அன்றும் வழமை போல தங்குமிடமான கட்டுப்பெத்தையிலிருந்து 255 பஸ்ஸிற்காக 10.15ற்கு காத்திருந்தேன். எப்பவும் வகுப்பு தொடங்கி 20நிமிசத்துக்கு பிறகே போவதால் நேரம் சுணங்கிவிட்டது எண்டு நான் அப்ப நினைக்கவில்லை. (வேளைக்குபோயும் என்ன செய்யிறது? என்ர Brotherம் வருவதால் அவன் நோட்சுகளை ஒழுங்கா எழுதுவான் எண்ட நம்பிக்கையில நான் பெருமளவான நேரத்தை ACக்குள் தூங்கியே கழித்து விடுவதுண்டு).

அப்படி காத்திருந்த வேளை அந்த வழியே சென்ற சக மாணவன் "இண்டைக்கு Galle Roadல செக்கிங்ஆம் பாத்து போ!!" என்று சொல்லிட்டு போனான். அப்ப எனக்கு அது
பெரிசா படவில்லை. எத்தினை செக்கிங் கண்டிருப்போம். ஒவ்வொரு முறையும் Police Report இல்லாட்டியும் பந்தாவா Campus IC காட்டி நழுவிவிடுவோமல்லவா. Police Report எடுக்கோணும் என்பது ஒருபொருட்டாக அதுவரை காலமும் தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் இருந்த வீட்டு உரிமையாளரிடம்(சிங்களவர்) பல தடவை Police Report கேட்டு தொல்லை கொடுத்திருந்தோம். Moratuwa Police Station ல் போலீஸ் ரிப்போர்ட் தமிழர்களுக்கு தரமாட்டினம் என்பதால் கடைசிவரை எங்களுக்கு அது கிடைக்கவில்லை.

5 நிமிட காத்திருப்பின் பின் வந்த 255ல் ஏறி புறப்பட்டேன். கட்டுப்பெத்த சந்தியை தாண்டியபோது நிலமை சற்று மோசம் என்பதை உணர்ந்து கொண்டேன். Checkpoint ல் இருந்து வாகனங்கள் பெரு வரிசையாக நின்றது. ஒருமாதிரி எறும்பு ஊருற மாதிரி ஊறி 10.30 போல சோதனை சாவடிக்கு கிட்ட வந்து நின்றது. இப்படியே ஒருவர் ஒருவராக செக் பண்ணி அனுப்பினா நான் வகுப்புக்கு போன மாதிரிதான் எண்டு யோசிச்ச போது எனது Super Senior(7G Group)ல் ஐவர் Galle Road ஐ குறுக்கே கடந்து மற்ற பக்கமாக Fashion Bug வழியே நடந்து வெற்றிகரமாக முன்னேறி சென்று கொண்டிருப்பதை பார்த்தேன். எனக்கும் முதலிலேயே அப்படி ஒரு ஐடியா இருந்தது எண்டாலும் அப்படி குறுக்கே கடக்கும் போது காவல்துறையினர் பாத்தா நிலமை மிகவும் மோசமாகும் என்பதால் பேசாது இருந்திருந்தேன்.

ஆனாலும் அவர்களின் வெற்றிகரமான முன்னேற்ற பாய்ச்சலை பார்த்த எனக்கும் ஒரு வேகம் வந்து சடுதியாக பஸ்ஸில் இருந்து இறங்கி ஒன்றையும் கவனியாது வீதிக்கு குறுக்கே நடந்தேன். தொடக்கம் நல்ல சிறப்பாகதான் இருந்தது ஒரு ஆமி மாமாவோ போலீஸ் மாமாவோ என்னை அப்ப காணவில்லை. "ஓ வெற்றி! கேனையங்களுக்கு சுத்தியாச்சு இனி ஸ்பீடா போன வேளைக்கு போயிடலாம்" எண்டு எனது
மனசு சொல்லிக்கொண்டது. ஒழுங்கா வரிசையில நிண்டு செக்கிங் முடிக்க எப்படியும் 20 நிமிசமாவது பிடிக்கும் இது Short ரூட்டு வெறும் 5 நிமிசத்தில் முடிச்சிடலாம். மற்ற பக்கம் இருக்கும் போலிஸிடமோ ஆமியிடமோ IC காட்டிவிட்டு பிரச்சினை இல்லாம போயிடலாம் எண்டு நினைத்தேன். ஏனெண்டா இங்க கியு இருக்காது.

நடந்து போய்கொண்டு இருக்கும்போதே எனக்கு முன்னால் வழிகாட்டி சென்று கொண்டிருக்கும் சீனியர் மாணவர்களை பிரச்சனை இல்லாது போகிறார்களா? என்று கவனித்து கொண்டேன். அவர்களும் முன்னே ஒரு ஆமியிடம் அடையாள அட்டையை காட்டிவிட்டு பிரச்சனை இல்லாது முன்னேறிக்கொண்டிருந்தனர். நானும் அதே ஆளிடம் Campus IC காட்ட அவனும் "ஆ மொறட்டுவ விஸ்வவித்யாலய" என்று கூறி புன்முறுவல் செய்தபடி மேற்கொண்டு போக அனுமதித்தான்.

மீதி அடுத்த பதிவில்............

5 comments:

நிராதன் சொன்னது…

டேய் முழுக்க எழுது. இல்லாவிட்டால் சுவார்ஸ்யமில்லாமல் இருக்கும்.
இது ஒரு சாதனை. எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு

Nantharupan சொன்னது…

அடோ வம்பிலை மாட்டாட்டால் சரி!!!
பதிவுகளை தினமும் எதிர்பார்கிறோம்
UNIVERSITY அனுபவங்களையும் எழுதலாமே
கெட்டவங்கள்

கார்த்தி சொன்னது…

@ Nira முழுசா எழுதினா சரியான பெரிசா வந்திடும் அதான் 2பதிவில தர இருக்கிறேன்..

@சுதந்தரி
விரைவில் அதுவும் வரும்

கவின் சொன்னது…

//வேளைக்குபோயும் என்ன செய்யிறது? //
நியமாவே தெரியாதா... நாமெல்லாம்ம் ரீயுசன் தொடங்க 1 மணத்தியாளம் முந்திபோயிடுவம்... படிப்பிலை அவ்வளவு அக்கறை...????
ஹி..ஹிஹி...ஹி

கார்த்தி சொன்னது…

@கவின்: ஒரு மணித்தியாலம் முந்திபோய் பொம்பிளப்பிள்ளைகளுக்கு கரைச்சல் குடுக்கத்தானே???
நான் போற இடத்தில வடிவான பிள்ளைகள் வாறேல என்ன செய்யிறது????

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்