கசப்பான அந்த நாள்-IVமுடிவு

இதன் முதல் பாகங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 1  2  3.

ஒருவாறு எமகண்டத்திலிருந்து தப்பியாச்சு. வேறுமாவட்ட மாணவர்கள் அவர்களது சொந்த இடங்களிற்கு செல்ல யாழ் மாணவர்கள் மட்டும் தங்களிற்கு தெரிந்த உறவினர்களின் கொழும்பு வீடுகளில் தங்கினார்கள். உடுத்த உடுப்போடு வேறு எதையும் எடுக்கமுடியாது போனமையால் அத்தியாவசிய பொருட்களை மீண்டும் வாங்கவேண்டி இருந்தது.

காலவரையறையின்றி கம்பஸ் பூட்டப்படும் என்ற வதந்தியின் மத்தியிலும், இவ்வளவு பிரச்சனைகள் நடந்திருந்தும் கூட திங்கட்கிழமை வழமைபோல் கம்பஸ் திறக்கப்பட்டது (சம்பவம் நடந்தது வெள்ளியில்). முதல்நாளில் ஒருசில தமிழர்களை தவிர ஒருவரும் பயத்தால் அந்த பக்கம் செல்லவில்லை. நிலமைகளை அவதானித்த பின்னரே செல்வது உசிதம் என்பதால் பலர் வீடுகளில் பதுங்கி இருந்தனர்.


சொந்தவீடுகளில் இருப்போருக்கு வேறு பிரச்சனைகள் இருந்திருக்கவில்லை. ஆனால் எங்களைபோல தூரத்து சொந்தங்களின் வீடுகளில் தங்கியிருந்தோர் பலர் அதை comfortable ஆக உணரவில்லை. எவ்வளவு விரைவாக எங்களது பழைய roomகளுக்கு செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக செல்லசந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தோம்.

செவ்வாயன்று சில தமிழர்கள்(பெரும்பாலும் கொழும்பை சேர்ந்தோர்) சென்று அங்கே பதட்டமான சூழ்நிலை இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின், கொஞ்ச மாணவர்களை சேர்த்து கொண்டு புதனன்று நாங்களும் அங்கே சென்றோம். முதலிலேயே கதைத்து கொண்டபடி சத்தம் சந்தடி எதுவுமின்றி கம்பஸிற்குள் நுழைந்தோம். சுற்றாடலிலும், உள்ளேயும் பதாகைகளும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.

எமது Roomதொகுதியை சேர்ந்த 5பேரளவில் ஒன்று சேர்ந்து கன்ரீனில் சந்தித்து பேசி, எமது roomகளுக்கு சென்று நிலமையை பார்த்து வர முடிவு செய்தோம். நான் முன்னே சொன்னபடி எங்கள் அறைகள் கம்பஸிலிருந்து கிட்டத்தட்ட 300மீட்டர் தூரம். போக வேண்டுமெனில் முன்னே உள்ள ஓட்டோக்காரர்களையும் (குடுக்காரர்கள்) தாண்டியே செல்ல வேண்டும். அவர்களுக்கு நாங்கள் தமிழர்கள்தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது. எனவே வீணே கூட்டமாக சென்று யாரிடமும் அடி வாங்காது முதலில் ஒருவரை அனுப்பி பரிசோதித்து அவருக்கு எதுவும் நடக்கவில்லை எனின் மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செல்லலாம் என தீர்மானித்தோம்.


இவங்களபோலதான் நாங்களும் நல்ல colors ஆன பெடியள்

அதற்கு பொருத்தமான பருத்த, உயரமான தோற்றமுடைய (இராவண வம்சத்தின் எச்சமோ என பலரால் சந்தேகிக்கபடுபவரும் பண்ணாகத்தின் மைந்தனுமாகிய) ஒருவரை தேர்ந்தெடுத்தோம். இருப்பவர்களில் சிங்களம் பேச கூடியவரும், அடிவாங்க கூடிய தேகவளமுடையவருமாதலால் அவரின் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவரும் பதுங்கி பதுங்கி சென்று ஒருவாறு சேரவேண்டிய இடத்தை அடைந்து எமக்கு callசெய்து பிரச்சனை இல்லை என்பதை உறுதி செய்தார்.


இவரை போலதான் அவர் இருப்பார்

நாங்களும் இருவர் இருவாராக வேகமாக நடந்து ஒருமாதிரி போய் சேர்ந்தோம். எங்களது வீட்டு உரிமையாளர்(சிங்களவர்) நல்லவர். அவர், இப்போது பிரச்சனை பெரிதாக இல்லை என்றும் நீங்கள் இன்றே தங்கலாம் என்றும் நம்பிக்கை கூறினார். வேறு வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறு தமிழர்களை தங்க விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நான் அன்று அங்கே தங்க விரும்பாது தேவையான சிலவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் உறவினரின் வீட்டுக்கு சென்றேன்.

எனினும் 2மாணவர்கள் அங்கே தங்கியிருந்து பரீட்சித்து பார்ப்பதென்று முடிவெடுத்து அன்றிரவு அங்கேயே தங்கினார்கள். அவர்கள் பிரச்சனையின்றி உயிரோடிருந்தால் அடுத்த நாள் நானும் தங்கலாம் என யோசித்து இருந்தேன். அன்றிரவே போன் பண்ணி அவர்களின் குசலம் விசாரித்தேன். அப்போது அவர்களின் குரலின் தொனியை கொண்டு அவர்கள் எப்படி பயந்து போய் இருந்தார்கள் என உணர முடிந்தது. பெரிதாக கதைக்காது, light போடாது இருப்பதாக கூறினார்கள். வீணாக வெட்டி கதைகதைத்து அவர்களை சிக்கலில் மாட்டாது உடனேயே நான் அழைப்பை துண்டித்தேன்.

அடுத்தநாள் நண்பர்களின் இருப்பை உறுதிப்படுத்தி கொண்டு நானும் அங்கேயே தங்க வீட்டில் அனுமதி பெற்றேன். இதிலே குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால் கம்பஸ் சுற்றாடலில் இருந்த பெருமளவான தமிழர்களில் எல்லோருமே அந்தகாலத்தில் மீளகுடியமர பயப்பட்டார்கள் அல்லது தடுக்கப்பட்டார்கள். முதலாவதாக தனியே துணிச்சலாக சென்ற பெருமையை அந்த அறையில் தங்கியிருந்த நாமே பெற்றுக்கொண்டோம்.

“மாலை என் வேதனை கூட்டுதடி” என்ற சேது பட பாடல் என் காதில் situation songஆக ஒலித்தபடி இருந்தது. இரவும் நெருங்கியபடி இருந்தது. காடையர்கள் யாரும் இங்கே தமிழர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு வந்தால் அப்பீல் இல்லை. தப்பிக்கவும் ஒரு வழியுமில்லை.


வேளைக்கே (5மணிக்கே) இரவு சாப்பாட்டை எடுத்து வந்து 5.30மணிக்கெல்லாம் அறையில் பதுங்கி கொண்டோம். இரவு நெருங்க நெருங்க கால்களும் தன்பாட்டிற்கு மெட்டிசைக்க தொடங்கியது. சத்தம் போடுவதில்லை, lightகளை போடுவதில்லை என்ற முடிவுகளை நாங்கள் முன்பே எடுத்திருந்தோம். அறைகளில் இரகசியம் பேசியபடியும் நாய்கள் குரைக்கும்போது பேயடித்தது போல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தபடியும் இருந்து நேரத்தை ஓட்டினோம். Table lambஐ கொண்டு ஒருவாறு அவசிய தேவைகளை பூர்த்தி செய்தோம்.


எனது அறையும், நண்பர்கள் இருவரினது அறையும் இருந்தது முதலாவது தளத்தில். எனவே 1க்கு போவதென்றால் கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து செல்லவேண்டும். ஏனெண்டா பாத்றூம் இருந்தது கீழே. முதலேயே பயந்து வேர்த்து விறுவிறுத்து போய் இருந்த எங்களுக்கு கீழே போவதென்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே முதலாவது தளத்தில் உள்ள பல்கணியை பயன்படுத்தி கீழே இறங்காது வேலையை முடித்துக்கொண்டோம்.

இவ்வாறு நிம்மதியின்றி கழிந்தன பல இரவுகள். இனியும் ஏதாவது வெடித்தால் பிரச்சனை ஆகிவிடுமென்பதாலும் தொடர்ச்சியாக பயந்து கொண்டு இருக்கேலாது என்பதாலும் கிட்டதட்ட 2கிழமையின் பின்னர் கஷ்டப்பட்டு வெள்ளவத்தையில் வீடு தேடி அங்கேயே குடியேறினோம். பின்னர் என்ன நாங்களும் வெள்ளவத்தையில் தமிழ்கலர்களை பார்த்து ஜொள்ளுவிட்டபடி தெருக்களில் அலைந்து திரிந்து படிப்பையும் கோட்டைவிட்டோம்.


இப்பிடிதான் பின்னால அலைஞ்சு திரிஞ்சம்

வீடுதேடின படலத்தையே இன்னொரு பதிவில சொல்லலாம் அந்தளவு கஷ்டப்பட்டோம். இதுக்குமேலேயும் இதை இழுத்துக்கொண்டு போகமுடியாது. எனவே முடிக்கிறேன். கஷ்டப்பட்டு பொறுமையா வாசிச்ச எல்லோருக்கும் ரொம்ப நன்றீங்கோ.

சுபம்

9 comments:

புல்லட் சொன்னது…

அருமையாக எழுதியுள்ளாய் தம்பி.. நல்லதோர் அனுபவத்தொகுப்பு :)

கார்த்தி சொன்னது…

நன்றி புல்லட் அண்ணா!!

சந்ரு சொன்னது…

அருமையான தொகுப்பு.. பகிர்வுக்கு நன்றிகள்...

கார்த்தி சொன்னது…

நன்றிகள். சந்துரு!!!

பொல்லாதவன் சொன்னது…

// எனவே 1க்கு போவதென்றால் கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து செல்லவேண்டும்.
அப்ப இரன்டுக்கு என்ன செய்திங்க? அதுவம் மேலதானா?

tamilcinema சொன்னது…

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க (யூசர் ஐடி பாஸ்வேர்டும் இணையத்திலேயே இருக்கிறது)

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

கார்த்தி சொன்னது…

@ பொல்லாதவன்
// அப்ப இரன்டுக்கு என்ன செய்திங்க? அதுவம் மேலதானா?

உங்களின்ர பெயரை போல ஏன் கேள்வியும் பொல்லாததாயிருக்கு!!

Nivethan சொன்னது…

Really nice!!!

கார்த்தி சொன்னது…

Thx Nivethan anna

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*