பாண்புட்டியும்(Barn Buddy) FaceBookம்
இண்டைக்கு விடிய நான் கத்தரிக்காயும் தக்காளியும் பயிரிட்டிருக்கன்டா Fertilizerம் கணக்கா போட்டிருக்கு பின்னேரம் போய் உடன யாரும் ஆட்டையை போட முதல் அறுவடை செய்திடணும். இன்னும் நாய் வாங்கேல அதுதான் பெரிய சிக்கல்” எனது நண்பனொருவன் தனது சக நண்பனொருவனுக்கு இவ்வாறு கூறிக்கொண்டிருந்தான். அதற்கு மற்ற நண்பன் கூறுகிறான் ”என்னட்ட நாய் இருக்கு அதால பெரிசா யாரும் களவெடுக்க மாட்டாங்க.நேற்று நான் Maximum எல்லாருட்டையும் களவெடுத்து கனக்க சம்பாதிச்சன்டா. இணடைக்கு புதிசா ஏதாவது பயிரிட்டா சரி.”
இவர்கள் கதைப்பதை கேட்டுக்கொண்டிருந்தா எனக்கோ தலை சுற்றியது. என்னடாப்பா இவங்கள் கம்பஸிற்கு வந்தும் வீட்டுத்தோட்டம் செய்யுற நல்ல முயற்சியுள்ள பயபுள்ளகளோ என்று யோசிச்சேன். அந்தளவு நல்லபழக்கம் எங்களோட படிக்கிற எந்த நாதாரிகளுக்கும் இல்லை என்று வடிவா தெரியும் என்பதால் அவர்களிடம் கதைவிட்டு பார்த்தேன்.
பிறகுதான் புரிஞ்சது. அவர்கள் கதைச்சுக்கொண்டது, FaceBookல் உள்ள ஒரு Game Application ஆனா பாண்புட்டி விளையாட்டைபற்றி. (BarnBuddy என்பதுதான் அதன் உச்சரிப்பென்றாலும் எங்களால் பாண்புட்டி என்று செல்லமாக இந்த வியையாட்டு கூறப்படுகிறது)
அந்த நேரத்தில் எனக்கு இதை பற்றி சற்றும் தெரியாதபோதும் எல்லோரும் இதைபற்றி பெரிசாக சொன்னதால் இதில என்னவோ நல்ல சுவாரஷ்யம் இருக்கு என்பதை புரிந்து கொண்டு அவர்கள் சிலர் விளையாடும்போது பார்த்தேன். சும்மா சொல்லகூடாது சுப்பராகதான் இருந்தது.
இந்த விளையாட்டின் theme, தோட்டம் செய்து points பெறுவது. FaceBookல பல Game Applications(Vampire, WereWolves, MouseHunt, KickMania..etc) இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் திடீரெண்டு எல்லோர் மத்தியிலும் பிரபல்யம் அடைந்து வெற்றிநடை போடுகிறது இந்த பாண்புட்டி மன்னிக்கவும் பான்படி(BarnBuddy).
இந்தவிளையாட்டில் reallity என்பது சிற்பம்சம். உங்களுக்காக ஒதுக்கப்பட்ட விதைநிலத்தில் கொத்தி விதைத்து நீர் ஊற்றி உரமிட்டு பயிரிடலாம். அதைவிட வேறு நண்பர்களின் தோட்டத்திற்கு சென்று அவர்கள் பயிரிட்டதையும் களவெடுத்து காசு உளைப்பது மட்டுமன்றி அவர்களின் தோட்டத்திற்கு களைகளையும் பூச்சிகளையும் பிடித்து விடலாம். சுருக்கமாக சொல்ல போனால் சொந்தமாக தோட்டம் செய்யும் உணர்வை பெறலாம்.
விளையாடுவோர் எடுத்துள்ள Coints அடிப்படையில் உரங்களையும் விதைகளையும் வாங்கிபயிரிடலாம். இதுலுள்ள இன்னுமொரு காமடி என்னெண்டால் தோட்டத்துக்கு சொந்தமா நாயை வாங்கினா மாத்திரமே களவு போவதை கட்டுப்படுத்தலாமாம். இதற்கு குறிப்பிட்ட Credits இருக்கணும் இல்லாவிடில் அவரது Barn Buddy requestஐ 10பேர் accept பண்ண வேண்டும். இந்த requestகளை acceptபண்ண வைப்பதற்காகவே சிலர் நண்பர்களுக்கு Milk packet சிற்றுண்டிகள் போன்றவற்றை வேண்டி கொடுக்கின்றனர். இதைவிட மேலே சென்று இதுக்காகவே mail create பண்ணி Facebook account open பண்ணி அதற்கு requst அனுப்பி நாய் வாங்குகிறார்கள் சிலர்.
இந்த விளையாட்டில் Credit Cardம் Acccept பண்ணபடுகிறது. நல்ல காசுள்ளவரா நீங்கள்? அப்படிஎன்றால் உங்களுக்கு பாண்புட்டியில் ஒரு கலக்கு கலக்க முடியும் உங்களுக்கு தேவையான coints இல்லாவிடின் cerdit card பயன்படுத்தி தேவையானதை வாங்கி கொள்ளலாம்.
இதை விளையாடுவோர் சொல்கிறார்கள்: இதை விளையாடுவதால் மனதில் திருப்தியும், முகத்தில் ஒருவித பொலிவும் ஏற்படுகிறதாம். ஏனென்றால் சொந்தமாக தோட்டம் வைத்து பயிரிட்டு பணம் சம்பாதிக்கும் உணர்வை தருகின்றதாம் இது. Facebookல் இதை ஒத்த விளையாட்டுக்களான FarmVille, Farmpals, FarmTown இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி நம்பர்1 நிலையில் இருப்பது பாண்புட்டிதான். மற்றையதைவிட இதில் GUI(Graphical User Interface) சுப்பராகும்.
நீங்கள் இதுவரை இன்னும் பாண்புட்டி விளையாடாதவரெனின் இன்றே தொடங்குங்கள் உங்கள் தோட்டத்தில் பயிரிட...
தோட்டம் செய்வோம் பணம் சம்பாதிப்போம் சொந்த காலில் நிற்போம்.!!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
17 comments:
அடடா... இதுதானா சங்கதி.
என்னுடைய நண்பனொருத்தனும் எனக்கு Request அனுப்பிவிட்டு, அதை ஏற்றுக்கொள்ளுமாறு அடிக்கடி ஞாபகப்படுத்தல் மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் அனுப்பிக் கொண்டிருந்தான். பாவம்... அவன் நேற்றும் கேட்டான். இன்னமும் அது என்னால் ஏற்றுக்கொள்ளப்படாமலே இருக்கின்றது.
பாவம் போனால் போகுது Accept பண்ணுங்கோ!! நாயை வேண்டட்டும் அவர். தோட்டத்திலிருந்து மரக்கறிகளை கனக்கபேர் ஆட்டையை போடப்போகினம்.
இப்பிடி சுவாரசியமான விடயங்களும் மூஞ்சிப் புத்தகத்தில் இருக்குதோ? எனக்கும் எத்தினையோ அழைப்புகள் ஏற்றுக்கொள்ளும் படி வந்தது. சரி... இனி மற்றவர்களுக்கு நாய் வாங்கிக் குடுக்க முயற்சிக்கிறேன்.
Superb one annah. Nice article and it's ryly interesting to read ur article... I shud be thankful to u cox u have used my barn buddy pic as i am the #1 among ur friends. Thx. I love Barn Buddy either. Thx 4 posting an article ab dis application. Tc. Keep up the gud work Carthi annah. Congrats.
அதுசரி பால்குடி நீங்க எப்ப தோட்டம் தொடங்க போறிங்க???
Hi Akshy Nathan!
You are really playing well even in Barnbuddy. I know, you are very good sportsman in school days. In facebook also you are following the same track. No? Keep going. reach the no1 position in world rank. :)
கடவுளே !
தம்பி செமஸ்டர் கையில வரப்போகுது... முதல் உங்கட நோட்சுக்க இருக்கிற பூச்சியளை துரத்துற வழிய பாருங்க...
நல்லா செய்யுறாங்கய்யா அட்வடீஸ்மென்டு பாண்புட்டிக்கு..
அவனவன் கடுப்பேறிப்போயிருக்கான் பேஸ்புக்க ஓபன் பண்ணினாலே பாண்புட்டி றிகுவெஸ்ட் தொல்ல தாங்கேலாம...
அண்ணே புல்லட் அண்ணே உங்கட அட்வைசுக்கு ரொம்பநன்றி!!
முதலே 2பாடம் கையிலேயும் காலிலேயும் வந்துட்டு இன்னொரு வருசம் கூட படிக்கிந பிளான்.
நோட்ஸ் இருந்தாதானே பூச்சி இருக்கும்!!
பாண்புட்டி முதலாளி எனக்கு கையூட்டு தந்தவன் அதாலதான் இப்பிடி போட்டேன்
Not only requests, there are too many annoying posts in FB home page, Everyone says 'Yey, I sold a harvest and earned..' I have hidden Farm Pals, barn Buddy, Farm ville feeds now
Thanx 4 da wishes.... Tc annah.
Is it? Ramanan anna!!
Don't you like these stuffs?
anyhow thx for ur comments.
Akshy keep coming to my blog!!
I hate them buddy,
This sucks big time and I lose my concentration
உங்களை கொழும்பு வலைப்பதிவர் சந்திப்பு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். மேலதிக விபரங்களுக்கு என்னை அல்லது புல்லடை தொடர்பு கொள்ளவும்.
நன்றி வந்தியதேவன். உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி. இந்த மாதம் நடுப்பகுதியில் நான் யாழ் செல்வதால் வரமுடியுமோ தெரியவில்லை. முயற்சிக்கிறேன்!!!!
இப்படி எல்லாம் இருக்குதா சரி பார்ப்போமே...
ஓம் இருக்குது... நீங்களும் addict அதுக்கு ஆகாட்டி சரி.
என் பக்கத்துக்கும் வந்து கருத்துப்போட்டமைக்கு ரொம்ப நன்றி.
கோதாரி விழ.. இதுதான் அந்த விளையாட்டோ??? தகவலுக்கு நன்றி நண்பரே
Thx Mayooresan for ur comments!!!
கருத்துரையிடுக