தமிழ்திரையில் பிறமொழி பாடகர்-அட்னன் சாமி(Adnan Sami)
ஜ&#
20
தமிழ்திரையில் அவ்வளவாக பிரபலமாகாத திறமையான வேற்று மொழி பாடகர்களை பற்றி சில தகவல்களை அறியத்தருதல் இப்பதிவின் நோக்கம். இன்று நாங்கள் பார்க்கப்போவது மொழு மொழு என்று குண்டு பூசணிக்காய் போன்று இருந்த ஒரு சிறந்த திறமையான பாடகர் அட்னன் சாமியை பற்றி.
தமிழ்திரையுலகை பொறுத்தவரை இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் தமிழில் இவர் பாடியது மொத்தம் 6 பாடல்கள்தான். ஆனால் ஹிந்தியிலோ இவரது அல்பங்களுக்கு மிகவும் கிராக்கி.
இங்கிலாந்தில் 1973 ஆகஸட் 15 பிறந்த இவர் பொலிவூட்டின் பிரபல பாடகரும் இசையமைப்பாளரும் ஆவார். Sargam(1995) படத்தில் தன்னை நடிகராக வெளிக்காட்டினார். இவரது அப்பா பாகிஸ்தானியர் அம்மா இந்தியர்.
மிகவும் பருத்த தோற்றத்தை கொண்டிருந்த இவர் முன்பு அதாவது 2006 அளவில் 200kg ற்கும் மேற்பட்ட நிறையை கொண்டிருந்தார். பின்பு டாக்டர்கள் கொடுத்த கடுமையான எச்சரிக்கையின் பின்(உயிரோடு இன்னும் 6 மாதம்தான் இருக்க முடியும் என), ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 117kg அளவில் எடையை குறைத்து அழகான திடகாத்திரமிக்க ஒருவராக மாறினார் இவர். பருத்த உடலை கொண்டு நடக்ககூட முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாய் அமைந்தது. ”முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை“.

இவர் நீண்டகாமாக பொலிவூட்டின் கனவுகன்னியான அமீஷா பட்டேலுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த வதந்திக்கு ஒரு முடிவுகட்டப்பட்டது. தன்னை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி இவரது மனைவி சபா கலதாரி தாக்கல் செய்த வழக்கால் அட்னன் சாமி முன்பு பரபரப்பாக பேசப்பட்டார். இவர்கள் இருவருக்குமான விவாகரத்திற்கான வழக்கு 2009ல் இன்னும் தீர்ப்பு கொடுபடாமல் குடும்ப நீதிமன்றத்தில் இருந்தது. நாங்கள் இப்ப கதைச்சுக்கொண்டிருக்கிறது இவரது 2வது மனைவியை பற்றி. இவரது முதலாவது மனைவி ஷிபா பாக்தியரை ஏற்கனவே 1997ல் விவாகரத்து செய்திருந்தார்.
Indian Classical Musicஐ Electric Pianoல் முதன்முதலில் இசைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் தமிழ் பாடிய பாடல்கள் மிகவும் சொற்பமாக இருந்ததனாலேயோ என்னவோ இவரால் தமிழில் பிரபலமாக முடியவில்லை. ஆனால் இவரின் குரலில் ஒரு காந்தத்தன்மையை இவரின் பாடலை கேட்பதன் முலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். இவர் தமிழில் பாடும்போது தமிழை கொலை செய்துபாடுவது போல உணரப்பட்டாலும் (பெரிசுகளுக்கு நிச்சயம் பிடிக்காது) இவரது உச்சரிப்பில் ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கிறது.

தமிழிற்கு பாடகராக இவரை A.R.Rahman, BOYS படம் மூலம் கூட்டிவந்தார். பின்னர் ஆயுத எழுத்து படத்தில் இன்னோர் பாடலுக்கு வாய்பு கொடுத்தார். பின்னர் வித்தியாசாகர் Sullan படத்தில் ஒரு பாடலுக்காக இவரை பயன்படுத்தினார். இவர்களை தொடர்ந்து யுவன்சங்கர் ராஜா சத்தம் போடாதே, சிவா மனசுல சக்தி படங்களில் சந்தர்ப்பம் வழங்கினார். அண்மையில் Colonial Cousins (லெஸ்லி லூயிஸ் + ஹரிகரன்)ன் இசையமைப்பில் சிக்குபுக்குவில் ஒரு மெலடி பாடல் பாடினார்.
அட்னன் சாமி தொடர்ச்சியாக பொலிவூட்டின் பிரபலங்களை கொண்டு அல்பங்களை சிறப்பாக தயாரித்து வருகிறார்.
தமிழில் இவர் பாடிய பாடல்கள்
A.R.Rahman ன் இசையில்
ஆயுத எழுத்து திரையில் ”நெஞ்சம் எல்லாம் ..” சுஜாதாவுடன்
Boys ல் ”பூம் பூம் BooM BooM " சாதனா சர்கத்துடன்
வித்தியாசாகரின் இசையில்
சுள்ளான் திரையில் ”கிளுகிளுப்பான காதலியே” பிரேம்ஜி அமரன் மற்றும் சாலினி சிங்குடன்
யுவன்சங்கர் ராஜா இசையில்
சத்தம் போடாதேயில் ”ஓஇந்த காதல் எனும் பூதம்” யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியிருந்தார்
சிவா மனசுல சக்தியில் “ஒரு கல் ஒரு கண்ணாடி..”
இந்த கடைசி பாடலில் இரு Versionகள் இசைதட்டுகளில் வெளியாகியது. ஒன்று அட்னன் சாமி பாடியது மற்றது யுவன்சங்கர் ராஜா பாடியது. பாவம் திரைப்படத்தில் வெளியாகியது என்னவோ யுவன்சங்கர் ராஜா பாடியதுதான். ஆனால் இரண்டும் ஒரே பாடல் என்ற போதும் எனக்கு பிடித்திருந்தது அட்னன் சாமி பாடியதுதான்.
Colonial Cousins (லெஸ்லி லூயிஸ் + ஹரிகரன்)ன் இசையமைப்பில்
சிக்குபுக்கு திரையில் "விழிஒரு பாதி"பாடல் சுஜாதாவுடன்
இதோ கீழே உங்களுக்காக இவர் பாடி தோன்றிய ஹிந்தி பாடல் ஒன்றின் Video

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
5 comments:
அட்னான் சாமி பிரபலமில்லாதவர் என்று யார் சொன்னது? தமிழில் சில பாடல்களே பாடியிருந்தாலும் அவர் பிரபலம்தான். அவர் பாடிய Tera Chehra என்ற பாடலை (அர்த்தம் புரியாதபோதும்) எத்தனை தரம் கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது. முடிந்தால் கேட்டுப்பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=ZQHnzaLf8oc
கிருஷ்ணா அண்ணா அவர்களே அட்னான் சாமி பிரபலமில்லாதவர் என்று கூறவேயில்லையே...
தமிழ்திரையில் மட்டுமே அவ்வளவாக பிரபலமாகாவர் என்றுதானே கூறினேன்.
உங்கள் கருத்துக்கும் Linkற்கும் நன்றி.
உங்களின் நேற்றைய காற்று நிகழ்ச்சியின் தீவிர ரசிகனாக இருந்தவன் நான்...
நல்ல தொகுப்பு நண்பரே. இயக்குனர் சமுத்திரக்கனி அவர்களின் மற்ற இரண்டு படங்கள் இங்கே.
1.பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயாரிப்பில் 'உன்னைச் சரணடைந்தேன்.
2.விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு
மிகவும் நன்றி எட்வின் உங்கள் தகவலுக்கும் கருத்துரைக்கும்!
நான் முதல் முறையாக இவரை பற்றி அறிந்துகொள்கிறேன், தகவலுக்கு நன்றி பாஸ் ...
கருத்துரையிடுக