மாற்றப்படும் வரலாறுகள்!

அனைவருக்கும் பொட்டலத்தின் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!

நான் இங்க சொல்ல வருவது சிறியதொரு தகவல்தான். ஆனால் இவை ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள், இப்போது அற்பசுகங்களில் திளைத்திருக்கும் எமக்கு தெரிவதில் நியாயம் இல்லை. இதை மாதிரி இன்னும் எத்தனையோ எனக்கும் உங்களுக்கும் தெரியாமல் மாற்றப்பட்ட வரலாறுகள் பல இருக்கின்றன. எம்மண்ணை பற்றி மற்றவர்கள் சொல்லும் வரலாறுகளை கேட்டபடி இருக்க நாங்கள் ஒன்றும் கிளிப்பிள்ளைகள் இல்லைதானே. யார்யாரோ எப்பிடியெல்லாம் மாற்றினாலும் பிரச்சினையில்லை. நீங்கள் உங்கள் வாரிசுகளிற்கு வருங்கால சந்ததிக்கு சரியானதை சொல்லுங்கள் அதுவே பெரிய விசயம்.அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் கந்தரோடையில் உள்ள பிரசித்தமான புராதன சிதைவுகள் உள்ள இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எவ்வளவோ காலம் யாழ்ப்பாணத்தில் இருந்து குப்பை கொட்டியிருந்தாலும் மிகவும் அண்மையில்தான் கந்தோரடையில் உள்ள அந்த பிரசித்தம் பெற்ற இடத்திற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ‘கதுறுகொட்ட புராதன விகாரை‘ எனப்பெயரிடப்பட்ட அந்த இடத்தில் விகாரைகள் போன்ற உருவமைப்பில் ஏறாத்தாழ 20 தொடக்கம் 30 வரையிலான புராதன கட்டிட அமைப்புக்கள் காணப்பட்டன.ஆனால் வழமையான, ஏன் சிறிய அளவிலான விகாரைகளைவிடவே அளவில் சிறியனவாக காட்சியளித்தன அவ்உருவ அமைப்புக்கள். அதைப்பார்த்த கணமே என்மனத்தில் பல கேள்விகள்.  தமிழர் பகுதியிலே விகாரைகள் எவ்வாறு முளைத்தன? மிகப்பழைய காலத்திலே பொதுவாக 50mஐயும் விட உயரமான விகாரைகளே அமைக்கப்பட்டன. இதெப்படி 5mலும் குறைவான உயரத்தில் விகாரைகள்? இந்த அளவு விகாரைகளை இதைவிட வேறஇடத்தில் பார்த்ததுண்டா?


எனது கேள்விகளுக்கான பதில்கள் உரியவரிடமிருந்தே கிடைத்தது. அந்த இடத்திற்கு பொறுப்பாக அரசாங்கத்தால் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். கவனிக்கவும் அவர் ஒரு தமிழர். அவரிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்துப்பார்த்தேன். அவர் 40வருடங்களுக்கு மேலாக தொல்பொருட் திணைக்களத்தில் வேலை பார்க்கிறாராம். வேலைக்கு சேர்ந்த காலத்தில் 300/= சம்பளமாம் இப்போ 20 000/=  வரை கிடைக்கிறதாம். அவர் கூறியது இதுதான் "1965 ம் ஆண்டுவரை இது வெறும் அத்திவார அடித்தளங்களாகதான் இருந்தது. பின்புதான் இவ்வாறு விகாரை வடிவமைப்பில் கட்டப்பட்டது. எறாத்தாழ 60அளவான அடித்தளங்களில் 30 வரையிலானவை இப்படி விகாரை அமைப்பில் கட்டப்பட்டது. ஏனையவை அவ்வாறே இருக்கின்றது"இப்படங்களை முகப்புத்தகத்தில் தரவேற்றியபோது பதிவர் பால்குடி போட்ட கருத்து "கந்தரோடையில் புத்த விகாரை இருந்ததுக்கான சான்றல்ல இது. உண்மையில் வட்ட வடிவில் காணப்படும் அடித்தளங்களே இங்கு அகழ்வாராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கப்பட்டன. 1960 ஆம் ஆண்டளவிலேயே விகாரை போன்று வடிவமைக்கப்பட்டது. பழங்காலத்தில் மனிதர்களை புதைக்கப் பயன்பட்ட இடமே இது என்ற முடிவே உண்மையானது."

எனது நண்பர் ஆதி கூறிய கருத்து "பழங்கால நாகர்களின் "முதுமக்கள் தாழி" என்ற இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படும் மிக பெரிய கோள வடிவ மண்பாண்டங்களின் அரை மேற்புறமே இவ்வாறு விகாரைகளாக சொற்திரிபுபடுத்தப்பட்டன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்பதே உண்மை!"

இவர்களின் கருத்திலிருந்து நீங்கள் எது உண்மை என்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறாக வரலாறுகள் மாற்றப்படுவதும் திரிவுபடுத்தப்படுவதும் ஏன் என்று என் போன்ற பாமரர்களுக்கு புரிவதில்லை. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

பிற்குறிப்பு:அண்மையில் தேரர் ஒருவர் கூறியிருந்தார் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்தது சிங்களவர்தான் என்று. வழமைபோல் இச்செய்தி எல்லா தமிழ் பத்திரிகைகள் வழியேயும் பிரதான செய்தியாக ஆரவாரமாக வந்து கடைசியில் பிசுபிசுத்துப்போனது. அதற்கும் இப்பதிவிற்கும் எதுவிதமான சம்பந்தமம் இல்லை.

16 comments:

sakthistudycentre.blogspot.com சொன்னது…

நல்வொரு ஆராய்ச்சி..

மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

Wish You Happy New Year

நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.

http://sakthistudycentre.blogspot.com

என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

“நிலவின்” ஜனகன் சொன்னது…

நல்ல தேடல்.....வாழ்த்துகள்......


புத்தாண்டு வாழ்த்துகள்

ஜீ... சொன்னது…

Good job!
புத்தாண்டு வாழ்த்துக்களை!:-)

எப்பூடி.. சொன்னது…

நான் அடிக்கடி கந்தரோடைவழியா செல்வதுண்டு, ஆனால் இதை பார்த்ததில்லை, கந்தரோடையில் எங்கு இருக்கிறது ?

நீங்கள் கூறும் விடயங்கள் உண்மைதான், நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் இனிமேல் அரசியல் பேசும்போது யாக்கிரதையாக பேசுங்கள். கள்வர்கள் என்கின்ற பெயரில் வீடுகளுக்குள் புகுந்து கொலை செய்துவிட்டு புனர்வாழ்வில் வெளிவந்த யாரவது ஒரு 'முன்னாள்' உறுப்பினரை காட்டி இவர்தான் செய்தது என்று சொல்லும் புதிய கலாச்சாரம் இங்கு ஆரம்பித்திருக்கிறது:-(((

ம.தி.சுதா சொன்னது…

ஜீ மற்றும் ஜீவதர்சன் சொல்வதை ஆமோதிக்கிறேன்..

தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்

பெயர் சொல்ல பயமாய் இருக்கு சொன்னது…

தேரரை எதிர்த்து பேசினதுக்கு தான் சங்கானை குருக்களுக்காம் ... சிங்களத்தில பாடுறதுக்கு எதிர்ததுக்கு தான் பிரதி கல்வி பணிப்பாளருக்காம்... கார்த்திக்கு எப்பவோ தெரியலை ... சும்மா இருடா ...

Jana சொன்னது…

கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம். தோல்விகண்ட ஒரு சமுதாயம் என்ற முத்திரை எமக்கு குத்தப்படாது எம்மையும், எமதுகளையும் சாதுர்யமாக பாதுகாக்க வேண்டியதே இப்போதைய எமது தேவை.

Jana சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

new information for us.

பெயரில்லா சொன்னது…

ஒழுங்கா ஏதாவது எழுதலாமே????

தர்ஷன் சொன்னது…

ம்ம் தங்கள் தேடலும் ஆய்வும் துணிவும் பாராட்டத்தக்கது எனினும் அவதானம் தேவை நண்பரே

கார்த்தி சொன்னது…

நன்றி sakthistudycentre.blogspot.com. உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்!
ஜனகன் ஜீ மதிசுதா உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எப்பூடி நானும் அன்றுதான் முதலாவதாக சென்றேன். நீங்கள் KKSவீதி வழியே சென்று சுன்னாகம் கடந்து வரும் நாற்சந்தியில் புத்துருக்கு செல்லும் வழிக்கு எதிராக சென்றால் பிடிக்கலாம். சந்தியிலிருந்து ஏறாத்தாழ 2Kmல் இருக்கிறது. கந்தரோடை விகாரைலேன் என்று கிட்ட பெயரும் போட்டிருந்தது என நினைக்கிறேன்.

கார்த்தி சொன்னது…

@ பெயர் சொல்ல பயமாய் இருக்கு நான் ஒன்றையும் ஒருவரையும் எதிர்க்கவில்லையே ஒரு உண்மை தகவலைதானே சொன்னேன்,
Jana அண்ணா நன்றிகள்.
நன்றி யோ வோய்ஸ்

ஏய் பெயரில்லாதவனே முடியாது. இப்பிடி மொக்கையாதான் எழுதுவன். என்ன செய்வீங்க??? lol

நன்றிகள் தர்ஷன்..

வடலியூரான் சொன்னது…

ம்ம்ம் கார்த்தி,காலத்திற்கேற்றதொரு பதிவு...!!! அங்கு காணப்படும் வெண்கலத்திலான புத்தர் சிலை வேறொங்கோவிருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டு இப்போது அங்கு வருபவர்களிடம் அதுவும் இங்கேயே(கந்தரோடை)எடுக்கப்பட்டதாக கூறப்படுவதாக அந்த ஊழியர் எங்களிடம் தெரிவித்திருந்தார்

யாதவன் சொன்னது…

வென்றவன் தோற்றவனை பற்றி எழுதுவது தான் வரலாறு

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*