ஈரம்=தரம் (பிந்திய திரைப்பார்வை)
ஈரம் படத்தைப்பற்றிய மிகவும் பிந்திய என்னுடைய பார்வை/விமர்சனம் இது. படம் வந்து ஏறாத்தாழ 2மாதம் ஆன பிறகு இதை பற்றி கதைப்பது அர்த்தமற்றதனமாக இருந்தாலும் கூட, இந்தப்படத்தை பற்றி போதிய அளவு கருத்துக்களோ, விமர்சனங்களோ இலங்கை பதிவர்களிடமிருந்து வந்ததாக தெரியவில்லை. (ஆதவன், வேட்டைக்காரன் படங்களை பற்றி கடும்போக்கான விமர்சனத்தையும், எதிர்வு கூறல்களையும் தந்த பதிவர்களுக்கு இதற்கு மட்டும் ஏனோ நேரம் கிடைக்கவில்லை போலிருக்கிறது).
அந்த குறையை தீர்க்குமுகமாகதான் இந்த பதிவு. இத்திரைப்படத்தை பற்றி முழுமையான அலசலை தரமுடியாவிடினும் ஏதோ என்னால் முடிந்தவாறு சில அம்சங்களை மட்டும் சுட்டிகாட்ட முயல்கிறேன்.
நடிகர்கள்: ஆதி, சிந்துமேனன், நந்தா, சரண்யாமோகன் etc...
இயக்கம்: அறிவழகன்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா
இசை: தமன்
தயாரிப்பு: இயக்குனர் சங்கர்
அறைஎண் 305ல் கடவுளின் சறுக்கலுக்கு பின்னர் சங்கரின் தயாரிப்பில் வந்த Qualityயான சூப்பர் படம் என்று இதை அடித்து சொல்லலாம். ஒரு ஹிட் படத்திற்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்தும் கூட, போதிய விளம்பரப்படுத்தல்கள், பிரபலங்கள் இல்லாமையினாலோ என்னவோ Behindwoods இணையத்தளத்தில் இதன் நிலவரசுட்டி Above Average என்றே காட்டப்படுகின்றது. அதாவது படம் ஹிட் ஆகவில்லை. படத்தின் கரு பேயைப்பற்றியதெனினும், இடைவேளைவரை யாராலும் என்ன நடக்கின்றது என ஊகித்து கொள்ள முடியாது.
காதல், மர்மம் இரண்டையும் கலந்து விறுவிறுப்பாக வேகமாக ஒரு திரைக்கதையை தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அறிவழகன். ஊகிக்க முடியாத மர்மங்கள், அந்தாதி பாணியிலான பிளாஷ்பக் சொல்லும் பாங்கு (எந்த வசனத்தில் காட்சி முடிந்ததோ அந்த வசனத்தோடு தொடர்புபட்டதிலிருந்து பிளாஷ்பாக் தொடங்கி செல்லுதல்), நீரையும் சிவப்பையும் மரணத்தையும் தொடர்புபடுத்தல், அலட்டலில்லாத அளவான நச்சென்ற வசனங்கள், சிறப்பான ஒளிப்பதிவு, ரசிக்கும் வகையிலான பாடல்கள், திகில்படத்திற்கேற்ற பிரமாண்டமான பின்னணி இசை என்பன ஈரத்திலுள்ள பிளஸ் பாயிண்டுகள்.
பின்னணி இசை இடையிடையே ஹாரிஷ் ஜெயராஜை ஞாபகப்படுத்தினாலும் படத்தின் வேகத்திற்கு தமனின் இசையும் பக்கபலம். தமிழில் "சிந்தனை செய்" இற்கு பின்னர் இவரின் 2வது படம் இது. இவரை உங்களுக்கு முதலே தெரிந்திருக்கும். Boys பாய்ஸ் படத்தில் வந்த ஐவரில் இவரும் ஒருவர் ”கிருஷ்ணா”.
மிருகத்தில் வந்த ஆதிதானா இது? என்று கேட்குமளவிற்கு மிடுக்கான குரலிலும் , கட்டுமஸ்தான தோற்றத்திலும் வந்து ஒரு கலக்கு கலக்கியுள்ளார் ஆதி. படத்தின் நாயகி சிந்துமேனன் (இதற்கு முன் சமுத்திரம், கடல்பூக்கள், யூத் படங்களில் தோன்றியிருப்பினும்) இப்படத்தின் பின் ரசிகர்கள் கூடியிருக்கும் என்பது உறுதி. குடும்பபாங்காக அழகாக காட்டியிருக்கிறார்கள் திரையில். பச்சையா சொன்னா "சூப்பர் பிகர்". நந்தா வித்தியாசமான கதாபாத்திரத்தில் வந்து திறமையை நிரூபித்திருக்கிறார். சரண்யா மோகன் வழமைபோல சுட்டித்தனமாக.
மொத்தத்தில் ஈரம் ஹொலிவுட் பாணியிலான, திரில்லான ஒரு தமிழ் திரைப்படம். எனினும் படத்தின் கரு சிலருக்கு பிடிக்காதிருக்கலாம். படத்திலுள்ள காட்சியமைப்புக்களை ஆங்கிலப்படத்திற்கு இணையாக செதுக்கியுள்ளார் இயக்குனர். (ஹொலிவுட் தரத்திலான படம் என்று சொல்லிக்கொண்டு டுபாக்கூர் படங்களை தந்த இயக்குனர்கள் இப்படத்தை பார்த்து தங்களை திருத்தி கொள்ள வேண்டும் உதாரணம் சரத்குமாரின் 1977)
இதையொத்த கதையம்சங்கள்(100% அல்ல) கொண்ட ஆங்கில படங்கள் வெளிவந்திருந்தாலும் கூட, தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பான ஒரு திரைப்படத்தை தந்துள்ள, இந்த படத்திற்காக உழைத்த கலைஞர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். திரில் படவிரும்பிகளா நீங்கள்? சற்றும் தாமதியாது உடனே பாருங்கள் ஈரம்.
சுருங்ககூறின் ஈரம்===தரம்
பி.கு: யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்ட பதிவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
11 comments:
அழைத்தமைக்கு நன்றி!! விரைவில் தொடருகின்றேன் :)
உங்கள் பாணி விமர்சனம்... :) நன்று.
உண்மையைச் சொன்னால், இந்தப் படம் எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. அதிக எதிர்பார்ப்புக்களுடன் எதிர்பார்த்திருக்க, இன்னமும் நான் நம்ப மறுக்கின்ற பேய்களின் கதைகளை ஆதாரமாக்கினதுதான் அதற்கு காரணம் எனலாம்.
ஆனால், முன்பாதி திரில் பிடித்திருக்கிறது... கதை நகர்த்தலும் நன்று.
நன்றிகள் ஆதிரை.
// இந்தப் படம் எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. அதிக எதிர்பார்ப்புக்களுடன் எதிர்பார்த்திருக்க, இன்னமும் நான் நம்ப மறுக்கின்ற பேய்களின் கதைகளை ஆதாரமாக்கினதுதான் அதற்கு காரணம் எனலாம்.
அதுதான் நான் ”படத்தின் கரு சிலருக்கு பிடிக்காதிருக்கலாம்.” என சொன்னேன். பேய் என்று இல்லாது வேறு மாதிரி கதையை கொண்டு சென்றிருக்கலாம்தான்..
ஈரம் படம் விமர்சனம் பலர் எழுதாதது எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. விமர்சனத்துக்குப் பாராட்டுக்கள். படத்தின் விறுவிறுப்பு பொருத்தமான பாத்திரங்கள் பிடித்திருக்கின்றன. எனக்கும் ஆவிகள் பற்றிய கதைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அண்மைக்கால படங்கள் சிலவற்றில் ஆவிகள் இருக்கின்றன அவை தங்களின் செயற்பாடுகளுக்காக ஒரு ஊடகத்தைப் பயன்படுத்துகின்றன என்ற தொனிப்பொருள் இருப்பதை உணர்கிறேன். ஏதேனும் ஆராய்ச்சியின் முடிவாக இவை பயன்படுத்தப்படுகின்றனவோ அல்லது பிழையான எண்ணக்கருவை விதைக்கும் முகமாக இவை பாவிக்கப்படுகின்றனவோ தெரியவில்லை.
i planned to watch ds weekend after watch da movie i will read mate:)
கருத்துக்கு நன்றிகள் பால்குடி.
ஆவிகள் தொடர்பாக ஆராய்சிகள் இன்னும் நடந்து வருகின்றமை, அது உண்மையிலேயே இருக்ககூடிய சந்தேகத்தை எம்மிடத்தே தருகின்றது. இதைவிட இன்னோர் கதை உலவுகிறதுஇ தேவகணத்தில் பிறந்தோருக்கு பேயை காணமுடியுமாம். அப்படியான ஒருவரை எனக்கு தெரியும். அவர் தான் உண்மையில் பேயை காண்பதாக கூறுகிறார். பால்குடிக்கும் அவரை தெரியும். என்னதான் இருந்தாலும் இப்ப நாட்டில பேயைவிட மோசமான ஆக்கள் இருப்பதால பேயால பெரிசா ஒன்றும் செய்யமுடியாது என்பது வெளிப்படை.
Ok Sanjeevan! It's a good film. You should watch it :)
தரம் மிகவும் தரம்; அதிக வார்த்தை பிரயோகம் தேவையில்லை; கோடி பராட்டுக்கள்;... :)
விமர்சனம் என்ற பெயரில் ஒரு படைப்பாளின் பிரசவிப்பைத் தட்டிப்பிழியாமல் ஆக்கபூர்வமாக அலசிய உங்கள் பாணி அருமை.
நன்றிகள் நிருத்திகன், கைப்பிள்ளை.
இந்த பிரசவம் குறைபிரசவம் இல்லை. அதான் பிரச்சனை இல்லாம போனது.
என்ன அழகான ஒரு விமர்சனம்....ம்....தொடரட்டும்.....
கருத்துரையிடுக