கனாக்காணும் காலங்கள்-2010
ஜனவ
28
இந்த பதிவுக்கு FaceBookஇலிருந்து தனித்தனியாக STATUSகளை அப்படியே தரவிறக்கி JPEG Image Formatல் மாற்றக்கூடிய, எனது சிறு முயற்சியில் உருவான அப்பிளிக்கேஸன் பயன்பட்டுள்ளது. (இந்த Application முன்பு நீங்கள் Facebookல் உள்ளதைபோல் English Statusக்கு மட்டும் உரியதல்ல. மேலும் நீங்கள் ஸ்டேடஸ் எவ்வாறு போட்டீர்களோ அவ்வாறே திகதியை கூட தரும்).
விரைவில் இது அனைவரும் பயன்படுத்தகூடிய வகையில் அறிமுகப்படுத்தப்படும். கட்டணமாக வெறும் 1$ அறவிட உத்தேசித்துள்ளேன்..
விரைவில் இது அனைவரும் பயன்படுத்தகூடிய வகையில் அறிமுகப்படுத்தப்படும். கட்டணமாக வெறும் 1$ அறவிட உத்தேசித்துள்ளேன்..
அடுத்தவிடயம்: உங்கள் ஆதரவுடன் இரண்டுவருடங்களை பதிவுலகில் கடந்த பொட்டலம், வெற்றிகரமாக மூன்றாம் வருடத்தில் இன்று (28ம் திகதி) காலடி எடுத்துவைக்கிறது.
சகபதிவர் Janaஅண்ணா ஏறாத்தாழ இரண்டு மாதத்திற்கு முன்னர் ”கானாக்காணும் காலங்கள்” என்னும் தலைப்பில் என்னை பதிவெழுத சொல்லியிருந்தார். நானும் அப்பிடி என்ன கானாக்காண கூடிய அளவில் இருக்கு எண்டு கடுமையா கனகாலம் யோசி்ச்சா ஒண்டுமா இருக்கிறமாதிரி எனக்கு படல. SO கொஞ்சம்வித்தியாசமா, கனக்கபேர் தங்களது டுவீட்டுக்களை போட்டது மாதிரி இல்லாம நான் எனது மூஞ்சிப்புத்தக 2010ன் சில ரசிக்ககூடிய ஸ்டேடசுகளை இங்க போடுறன். 2010ஐ மீண்டும் கனாக்காணுகிறேன்.
என்னை சின்னப்பொடியன் ஒருத்தன் போனில் Sirஎன்று விழித்தபோது
Dialog கார்த்தி என்று டைப்பி வாழ்த்தியபோது
ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர்
ஜனாதிபதி தேர்தலன்று யாழில் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கு பின்
கோவா பார்க்க செல்ல முன்
சில புத்தகங்களை அன்பளித்தபோது
விடுதிக்கு மீண்டும் பயணித்தபோது
சிலரிலுள்ள மனக்கடுப்பை வெளியிட்டபோது
நண்பனொருவனின் SMSலிருந்து அம்மாவின் பெருமை
MP Election முடிந்து யாழ் Voting Percentage அறிவித்தபோது
IPL இறுதிப்போட்டியில் Chennai வென்றபோது
தத்துவம்
தோல்விகளின் பின்
Interviewற்கு ஒருதரும் கூப்பிடுறாங்க இல்லை என்ற கடுப்பில்
அலட்டலில்லாத வாழ்க்கை விரும்பியபோது
திடிரென ஏற்பட்ட பிரச்சனையால் Hostel மூடியபோது
இராவணன் Themeஐ நானும் பின்பற்ற முயன்றபோது
பெரும் சிரமத்தின்பின் MoratuwaUniversityல் Nanthu Cup
தமிழ் இலக்கியமன்ற பொருளாளராக ViceChancellorரிடம் வாங்கிகட்டியபோது
முதல் எந்திரன் பாடல் வானொலியில்
எந்திரன் பாடல்கள் எனது பார்வையில்
இறுதிவருட குழுசெயல்திட்ட வெற்றியில்
கம்பஸ் இறுதிப்பரீட்சையில் FUN எடுக்கபோகும்போது
படிக்காம தூங்கி வழிஞ்சபோது
புதிராக இருக்க விரும்பியபோது
Campus Exam முடிஞ்சும் Hostelலிலிருந்து எழும்பாம அடம்பிடிச்சபோது
ஓவர்பில்டப்தான வாழ்க்கை என உணரும்போது
என்னை புரிவது எனக்கே கடினமானபோது
மக்களை கடுப்பேத்த வீட்டிலிருந்து
குழுவினரின் திறமையால் Merit Award கிடைத்தபோது
காலத்திற்கேற்ற பழமொழி
கெட்டப் Changeஎன்று நண்பன் கலாய்த்தபோது
Mentalஆ இருக்கேக்க
படம்பார்க்க அழைப்பு
தூறல் பாடல் உத்தமபுத்திரன் திரையில் இல்லாதபோது
FUSION கட்சியின் முதலாவது AGM
ஓவர்பில்டப்
புதுவருடத்திலும் காமடிபீஸாக இருக்க முடிவுசெய்தபோது
இந்த அப்பிளிகேசனை பெறவிரும்புவோர் என்னை தொடர்பு கொள்ளலாம். இதுபற்றிய மேலதிக விபரங்கள் கனாக்காணும் காலங்கள்-2009 பதிவில் வரும். வரட்டுமா.........
காவலன்-அதிரடி வெற்றி நோக்கி!!!
ஜனவ
23
மற்றைய பதிவர்கள் போல் திரைப்படம் ஒண்டு புதுசா வந்தவுடன் அப்படத்திற்கான விமர்சனத்தை நானும் எழுதவேண்டும் என நான் விரும்புகின்றபோதிலும்; எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு எழுதுவதால் ஒரு படத்திற்கே எக்கச்சக்கம் விமர்சனங்கள் வந்து பதிவுலகை நிறைத்துவிடும். அதில் நான் எழுதுவதை படிப்பவரை பொறுக்கித்தான் பிடிக்க வேண்டும். எனவே படம்பற்றி எழுதுவதிலிருந்து நானாகவே ஒதுங்கிவிடுவதுண்டு.
எனது பதிவுகளில் இதுவரை ஒரேயொரு படத்திற்க்குதான் விமர்சனம் எழுதினேன் (ஈரம்). அந்தப்படத்தை பார்த்து விமர்சனம் எழுதியோர் குறைவென்பதால் படம் வந்து இரண்டுமாதத்திற்கு பிறகும் ஜாலியாக அதை எழுதி போதிய வரவேற்பை பெற்றேன். ஆனாலும் ஒருமாறுதலுக்காக நான் ரசித்துப்பார்த்த காவலன் பற்றி எனது பார்வையை இதில்தர முயலகிறேன். முதலிலேயே சொல்கிறேன் நான் சூர்யாவின்ரசிகன்.
விஜயின் தொடர் சறுக்கல்களின்பின் பாரிய எதிர்பார்ப்பில்லாமல் வந்தபடம்தான் காவலன். ஆனாலும் BodyGuard என்ற மலையாளப்படத்தின் றீமேக் என்பதாலும், Guaranty இயக்குனர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள சித்திக்கின் இயக்கம் (தமிழில் Friends, எங்கள் அண்ணா, சாதுமிரண்டால்) என்பதாலும், அசினின் நீண்டகாலத்திற்கு பின்னரான தமிழ்மீள்வருகை இப்படத்தில் என்பதாலும் காவலனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இல்லாமல் இருக்கவில்லை. எதுஎப்படியிருப்பினும் திரையிடுவதற்கு ஆரம்பம் முதலே காணப்பட்ட எதிர்ப்புகளையெல்லாம் முறியடித்து, கடைசிகட்ட இழுத்தடிப்பு வேலைகளையெல்லாம் பொறுத்து கொண்டு காவலன் திரையரங்குகளில் ஒருவாறு திரையிடப்பட்டது.
முக்கியமான நடிக நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தாலும், கூடுதலான காட்சிகள் விஜய் அசின் வடிவேல் மித்ரா போன்றோரை சுற்றி சுற்றியே செல்கிறது. கனக்க காலத்திற்கு பிறகு திரையில் முகம்காட்டும் ரோஜவும் கூட சிறிய நேரத்திற்கே வந்து செல்கிறார். ஆனாலும் அனைவரும் தங்கள் பாத்திரமறிந்து நடித்திருப்பது சிறப்பு. அண்மைக்கால வழமையான வடிவேலுவின் காமடிக்காட்சிகள் போலல்லாது சித்தீக்கின் முத்திரை குத்தப்பட்ட காமடிக்கட்சிகளால் வடிவேல் ஜொலிக்கிறார். வடிவேலுவின் அண்மைக்கால படங்களில் உள்ளதுபோல் காமடி என்ற பெயரில் அரைச்சமாவையே அரைக்காது கொஞ்சம் வித்தியாசமாக தனது பாணியில் காட்சிகளை அமைத்து படத்திற்கு கூடுதல் மெருகு சேர்த்துள்ளார் இயக்குனர் சித்திக். சுருங்ககூறின் வடிவேல் படத்தின் சவாரஸ்யத்திற்கு மிகப்பெரிய பலம்.
நீண்டகாலத்தின் பின் வந்த கனவுக்கன்னி அசின் நடிப்பால் கவருகிறார். முதற்பாதியில் கலகலப்பாக வருவதோடு மட்டுமல்லாது பிற்பாதியில் கண்ணில் இளையோடும் சோகத்தோடும் வருகிறார். ஆனாலும் பழைய அசின் அழகை காவலனில் காணமுடியவில்லை. என்னவோ குறை தெரிகிறது. விஜய் தனது பங்கை செவ்வனே செய்துள்ளார். ஒரு கெட்டப் (உருவ) சேஞ்சும் இல்லை. ஆனால் கலக்குகிறார் நடிப்பில். மிக நீண்டகாலத்திற்கு பிறகு விஜயின் சிறப்பான நடிப்பை இப்படத்தில் பார்க்கலாம். ஒரு பாடல் காட்சிக்கு மாத்திரம் டோப் ஒன்றை போட்டுவந்து பயப்பிடுத்துகிறார். ஏன் ஒழுங்காகதானே படம் முழுவதும் இருந்தார். மாற்றம் என்ற பெயரில் ஏனோ இந்த வீண்முயற்சி. ???
விஜயின் நிறைய படங்களுக்கு (நிலவேவா, கில்லி, திருமலை, மதுர, ஆதி ) சூப்பர் ஹிட்பாடல்களை கொடுத்த வித்தியாசாகர்தான் குருவியிற்கு பிறகு இப்படத்திலும் இசை. பாடல்கள் அனைத்தும் நல்ல ரகம்தான். என்றாலும் வழமையான வித்தியாசாகரின் இசையுடன் ஒப்பிடும்போது இவை சிறிது தொய்வு என்றே கூறவேண்டியுள்ளது.
கலகல காமடியுடன் சுவாரஸ்யமாக செல்கிறது முதற்பாதி. அடுத்தபாதி காதல், உருக்கம், காமடி கலந்து முதற்பாதியின் சுவாரஸ்யத்தை குறைக்காது அற்புதமாக பயணிக்கிறது. இந்தப்படத்தின் ஆணிவேர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள்தான். யாரும் எதிர்பார்க்காதபடி வித்தியாசமாக திருப்பங்களுடன் கதைக்களத்தை கொண்டு சென்று சிறப்பாக முடிக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் சொதப்பியிருந்தால் படத்தின் இறுதியில் படம்பற்றிய மக்களின் நிலைவேறாக இருந்திருக்க கூடும். சிலவேளைகளில் இதமாதிரி முந்திவந்துட்டுதே என்று ரசிகர்கள் கூறி நிராகரித்திருக்கலாம். ஆனால் அந்த பேச்சுக்கே இங்கு இடம் இல்லை.
![]() |
சித்திக் |
படத்தில் காமடி அக்ஸன் காதல் செண்டிமெண்ட என்று அனைத்தையும் அளவாக கலந்து சுவாரஸ்யமாக படத்தை தந்த இயக்குனர் சித்திக்குக்கு ஒரு பாராட்டு கொடுக்கலாம். படத்தில் தொய்வேற்படமால் பார்த்ததில் எடிட்டர் கௌரி சங்கருக்கும் முக்கிய பங்குண்டு. பொங்கலுக்கு வெளிவந்த மற்ற படங்களான ஆடுகளம் சிறுத்தை போன்றனவற்றுடன் ஒப்பிடும்போது எந்தவித தொலைக்காட்சி விளம்பரங்களோ ஆர்ப்பாட்டஙகளோ இன்றி வெளிவரும்போதே தோன்றியிருக்க வேண்டும் இது ஒரு ஹிட் படம்தான் என்று. படத்தில் பாடுபட்டோருக்கு அது தெளிவாக விளங்கியிருக்கிறது. அதுதான் துணிவுடன் களமிறக்கியிருக்கிறார்கள் காவலனை.
மேலும் ஆடுகளம்: Seriousness கூடிய படமென்பதாலும், சிறுத்தை மசாலா முத்திரை குத்தப்பட்டிருப்பதாலும், குடும்பத்துடன் செல்வோர் விரும்பும் படமாக மாற சாத்தியம் கூடுதலாக இருப்பதாலும் இந்தமுறை RACEல் ஜெயிக்கும வாய்ப்பு காவலனுக்கு ஏராளம்.
காவலன் = உண்மைக்காத(வ)லன்.
பி.கு: விமர்சனம் என்ற பெயரில் படக்தையை திருப்பி சொல்ல எனக்கு தெரியாது. படத்தின் கதை இதில இல்லையே எனக்குறைபட்டு கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளி இல்லை. நிறைகுறைகள் எனது கருத்து மட்டுமே எனது விமர்சனத்தில் வரும்.
திரை தகவல் பெட்டகம்-II
ஜனவ
13
இதன் முதலாவது பாகத்திற்கு இங்கே கிளிக்குக.
திரை தகவல் பெட்டகம்-I
திரை தகவல் பெட்டகம்-I
அனைவருக்கும் பொட்டலத்தின் முற்கூட்டிய பொங்கல் வாழ்த்துக்கள்! இந்தபாகத்தில் முதல் பந்திதவிர்த்து கீழ்வரும் பந்திகளில் ஒருவரைபற்றிய விபரங்கள் சொல்லப்பட்டு அவரை ஊகிக்க உங்களை தூண்டியிருக்கிறேன். கண்டுபிடித்தவரை சரிபார்க்க பந்தியில் உள்ள பெயர் சொல்லவரும் இடைவெளிப்பகுதியை Mouse pointerஆல் select செய்யவும். அப்போது அந்த நபரின் பெயர் தெளிவாக தெரி்யும்.
![]() |
அன்வேஸா |
அண்மைக்காலத்தில் வெளிவந்த பாடல்களில் நான் வியந்து விரும்பிக்கேட்ட பாடல் மேலே பதிவேற்றப்பட்ட மந்திரப்புன்னகை படத்தில் இடம்பெற்ற ”மேகம் வந்து போகும்” பாடலாகும். (மந்திரப்புன்னகையா அப்பிடி ஒரு படமா? அதில பாட்டா? என்று திருப்பி கேட்கிறது விளங்குது. இதுகூட தெரியாம இசை ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு என்னபயன் சார்! முதலில அந்த படப்பாட்டுக்கள கேட்டுட்டு வாங்க). அற்புதமான இனிமையான இசையில் அமைந்த காதல் பாட்டு. அந்தபாடலின் குரல்களுக்கு சொந்தக்காரர்களை கேட்டவுடனே மதுபாலக்கிருஸ்ணன், ஸ்ரேயா கௌசால்தான் என்று நினைத்துவிட்டு அப்பிடியே இருந்துவிட்டேன். ஆனா தற்செயலாக பார்த்தபோதுதான் தெரிந்தது அந்த பெண் குரலுக்கு சொந்தக்காரி பெயர் ”அன்வேஸா”. வயது வெறும் 17தான். STAR PLUS தொலைக்காட்சி நடாத்திய Amul STAR Voice of India போட்டி நிகழ்ச்சி மூலமாக பிரபலாமான இவர் தமிழிற்கு வித்தியாசாகரால் மந்திரப்புன்னகைக்காக அழைக்கப்பட்டார். அப்படியே ஸ்ரேயா கௌசால் போன்ற குரல்வளம். அடித்துக்கூறுவேன் சிறப்பான எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------
![]() |
பென்னி டயால் |
-----------------------------------------------------------------------------------------------------
கீழேயுள்ள இந்த பாடல் அந்நியன் திரையில் வரும் சூப்பர்ஹிட் ”கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடலாகும். இந்தபாடலை பாடகி வசுந்தராதாஸூடன் சேர்ந்து பாடுபவர் ஒரு இசையமைப்பாளர். அண்மையில் தமிழில் இயக்குனர் சரணின் ஒரு படத்திற்கும் ஆர்யா நடித்து வெளிவந்த இறுதிப்படத்திற்கும் கரிகரனுடன் ஒன்று சேர்ந்து இசையமைத்தார். அவர் யார் தெரியுமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
▼
2011
(29)
- ► செப்டம்பர் (2)