அண்ணே நீங்கதான் கு.ரங்காவோ?
நவம
12
-இந்தப்பதிவில் வரும் நபர்கள் சம்பவங்கள் அனைத்தும் முற்றிலும் கற்பனையே நடைமுறை வாழ்க்கையுடனோ பழைய சம்பவங்களுடனோ ஒத்துப்போனால் அது தற்செயலானதே!!! Strong-Shakthi, யன்னல்-மின்னல், உயரமானஇடம்-மலையகம், குதிரை-யானை, சண்டிஇலை-வெற்றிலை, வாத்து-Duck போன்றமுதல் சொற்களுக்கு பதில் இரண்டாவதைப்போட்டு யோசிப்பீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பாளி இல்லை-
காலம் காலமாக அரசியல்வாதிகளை நம்பி நாங்கள் ஏமாந்து கொண்டிருக்கும் படலம் தொடர்கிறது. இது எங்களமாதிரி சூடு சுறணை அற்ற எருமைமாடுகளுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்றாலும், இப்படியான நம்பிக்கை துரோகங்களை தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ள எங்களால் முடிவதில்லை. கொஞ்ச நாட்கள் இப்படி கத்திப்போட்டு அடுத்த தேர்தலில் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் நாம். அப்படியான ஒரு சொக்கதங்கத்தைப் பற்றித்தான் இப்ப கதை.
இதுவரை காலமும் ”யன்னல்” நிகழ்ச்சியை ”Strong TV”யில் தொகுத்தளித்து முழு தமிழ் மக்களையும் முட்டாளாக்கியவர் மன்னிக்கவும் முழு மக்களுக்கும் அரசியல் அறிவை வளர்த்தவர் இவர். அந்தக்காலத்தில் பல கோமாளி அரசியல்வாதிகளையும், சந்தர்ப்பவாத நரிகளையும் TVயில் மக்கள்முன் கூட்டிவந்து நாறடிச்சவர் இவர். மக்கள் பிரச்சனைகள் பலவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மக்களின் தலைவன் இவர். முன்மாதிரியான , எடுத்துக்காட்டான சிறந்த செய்தியாளர் இவர்.
இப்படி வருசக்கணக்கா பிளான் பண்ணி எங்களை மாதிரி ஏமாளிகளை எல்லாம் ஏமாற்றி; நல்லவர், வல்லவர், எல்லாம் தெரிஞ்சவர் என்று அனைவரையும் நம்பவைத்து அரசியலுக்கு நுழைஞ்சார். நாங்களும் எங்களைப்போல சாதாரண, பொதுமக்களின் மனங்கள், துன்பங்கள், துயரங்களை அறிந்த ஒருவர் அரசியலிற்கு வருகின்றார் எல்லோருக்கும் நன்மைதான் என்று எண்ணினோம்.
இவர் அரசியலுக்கு நுழைந்து தேர்தலில் போட்டியிட்ட முறையும் மற்றவர்களைப்போல "பழைய குருடி கதவைத் திறடி” என்ற பாணியில்தான் இருந்தது". அப்போதே யோசித்திருக்க வேண்டும் நாங்கள். கையிலிருந்த ஊடகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி செய்தி அறிக்கைகளின்போது தன்னைப்பற்றிய புகழுரைகளை, தொண்டுகளை மக்கள் மூலமாக சொல்லச்செய்து தன்னுடைய வாக்கு வங்கிகளைப் பலப்படுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ஆகி மக்களுக்கு சேவை செய்யத்தான் இவ்வாறு கஸ்டப்படுகிறார் என்று நம்பிய பல முட்டாள்களில் நானும் ஒருவன்.
எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவன் (அந்தக்கால பழைய வரலாறுகள் தொடங்கி இந்தக்கால புதிய அரசியல் கோணங்கி கூத்துக்கள் வரை நன்கு அறிந்த, பாண்டித்தியம் பெற்ற ஒருவன் ) தேர்தல் காலத்திலேயே "டேய் இவன் அவன்ர ஆளாடா! இவனை நம்பாயுங்கோ, கொஞ்ச நாளிலேயே அங்கால மாறாட்டி பாருங்கோ" என்று கட்டியம் கூறினான். இவரைப்பற்றி அப்போதே அரசல் புரசலாக செய்திகள் பரப்பப்பட்டாலும் "யன்னல்" நிகழ்ச்சி மூலம் நன்றாக ஏமாற்றப்பட்ட நான் அதை அப்போது நம்ப தயாராக இருக்கவில்லை.
தலைப்பை பார்த்தே ஊகித்திருப்பீர்கள் யார் அந்த கனவான் என்று? So அவரது பெயர் இங்கே தேவையில்லை. உயரமான இடத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு "குதிரை"யில் மக்களின் ஆமோக ஆதரவில் அனுப்பப்பட்ட இவர் பதவியேற்று கொஞ்சகாலத்திலேயே தனது வேலையை காட்டினார். குதிரை சவாரி அலுத்ததோ, இல்லை குதிரைப்பாகன் கொடுத்தது காணாதோ தெரியவில்லை முறையான நேரத்தில் 2/3 பெரும்பான்மையை உறுதிப்படுத்த , மக்கள் சமைக்க போட "சண்டிஇலை"தான் கேட்கிறாங்கள் என்று அப்பாவி மக்கள் தலையில் பழியப்போட்டு அங்காலப்பக்கம் நைசாக நழுவினார் நம்ம கதாநாயகன்! மக்கள் சேவையே மகேசன் சேவையாச்சே.
இவர் அங்க இருந்தார், இங்க தாவீனார் என்பதெல்ல பிரச்சனை. தான் அரசியலுக்கு வர முன்னர் எத்தனை அரசியல்வாதிகளை இவ்வாறு ஒரு கட்சியிலிருந்து மற்ற கட்சிக்கு போவதிற்கும், அரசாங்க பக்கம் திடீரென சாய்வதற்கும் தாறுமாறாக கேள்விகளை கேட்டு அவர்களை சந்தி சிரிக்க செய்திருப்பார்! இப்ப தான் செய்யும்போது மட்டும் மக்களின் வேண்டுகோளா? யாரை பேப்பட்டம் கட்டுகிறார்கள் இவர்கள். அரசனுக்கு ஒரு நியாயம் ஆண்டிக்கு ஒரு நியாயமோ.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! முட்டையில மயிர் பிடுங்ககூடாது, என்று விட்டுவிடக்கூடிய விடயம் இல்லை இது. உண்மையில் அரசியல்வாதியின் categoryக்குள் இவரை நாங்கள் அடக்கிவிட முடியாது. எங்களோடு இவ்வளவு காலம் இருந்து நல்ல பிள்ளைக்கு நாடகமாடிவிட்டு இப்போது மட்டும் இப்படியான களவாணி வேலைகளை செய்பவர்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க என்னால் முடியாது. என்னைப்போல புலம்பிய பலரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். இவர்களைப்போன்றோரைவிட தேர்தலுக்கு முன்பே தங்களது கொள்கைகளை அறிவித்துவிட்டு ஒரே பக்கமாக இருக்கும் ‘வாத்து மாமா‘ எவ்வளவோ மேல்.
யோசியுங்கள் மோட்டு மக்களே! ஒருதரையும் நம்பாயுங்கோ.சுயநலமா இருங்கோ. உங்களைப்பற்றி கவனிக்க நீங்கள் ஒருவர் மட்டுமே!
எனக்கு தெரிஞ்சவரை குரங்குதான் இப்பிடி ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு அப்பிடி இப்பிடி எல்லாம் பாயும் அப்ப நீங்க கு.ரங்கேதான்!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
19 comments:
ஆமாங்க.. குரங்கு தானுங்க... இதில என்ன சந்தேகம்.. அருமையான சாடல் பகிர்வு... நன்றி.
நீண்ட காலத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழ் அரசியல் பற்றி நான் வாசித்த ஒரு “உண்மைக் கட்டுரை”
பாராட்டுக்கள்!!!
தமிழர்கள் இன்னும் நிறைய விடயங்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது. காலம் உண்மைகளை உணர்த்தும்!
நான் கு.ரங்காவையோ, யன்னல் நிகழ்ச்சியையோ ஒருபோதும் நம்பியிராததால் பெரியளவுக்கு ஏமாற்றமேதும் இல்லை.
யன்னல் நிகழ்ச்சி இவரின் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறி என்று புரிந்து கொண்டேன்.
இப்போதும் Strong TV இல் இவர் புராணம் அதிகமாக உள்ளதே?
நல்ல பதிவு, தேவையானதும் கூட.
பாராட்டுக்கள்.
அருமை. நெத்தியடி.
ஆனால் ஏமாறியது உங்கள் குற்றம்.
இப்படியானவர்கள் பற்றித் தான் உலகுக்கே தெரியுமே..
அருமை. நெத்தியடி.
ஆனால் ஏமாறியது உங்கள் குற்றம்.
இப்படியானவர்கள் பற்றித் தான் உலகுக்கே தெரியுமே..
குட்டக் குட்டக் குனிபவன் இருக்க மட்டும் குட்டிக் கொண்டே இருப்பான்..நாங்க தான் கவனமா இருக்கோணும்.நம்ம மக்களுக்கும் யோசிக்கமாட்டாங்க!!அடுத்த முற வந்து கொஞ்ச சல்லிய காட்டினா எல்லாத்தையும் திறந்து அவன் பின்னால போயிடுவினம்.கவனம் நண்பர்களே!!எல்லாரும் இப்படித் தான்(அரசியல் வாதிகள்)
நெத்தியடி பதிவு நண்பரே!!
பாராட்டுக்கள்!!!.
நான் என் வலைப் பதிவில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.பாருங்கோவ்!!!
log on to my blog-www.thou-seef.blogspot.com (
நல்ல கட்டுரை. இவரின் உண்மை முகம் மலையக மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் மேல்மாகாணத்தில் பரவலாக இவரைப் பற்றி தெரியும்.
சொத்தி ரீவியின் நிர்வாக அதிகாரியாக வருவதற்காகவே சொத்திரீவியின் முகாமையளர் ஒருவருடைய மருமகனாக மாறினவர் இந்த குனா ரங்கர். அது அவரது தனிப்பட்ட விடையம். ஆனால் இந்த விடயங்கள் அனேகமாக மேல்மாகாணத்தில் தெரியும். அத்தோடு மகிந்தவோடான கூட்டும் அதன் பின்னணியில் இயங்கிய சொத்தி ரீவியும்.. ஏமாறக்கூடியது மலையக மக்கள் என்றுதான் அங்கே போய் நின்றவர் இந்த குனா ரங்கர்.
நன்றிகள் மதுரை சரவணன் இந்தியாவலிருந்து கொண்டும் குரல் கொடுத்ததுக்கு!
நன்றிகள் என்.கே.அஷோக்பரன். ஆமாம் நாங்கள் இன்னும் முட்டாள்களாக இருக்கிறோமோ? அல்லது முட்டாள்களாக்கப்படுகிறோமோ ஒன்றும் புரியவில்லை.
கன்கொன் நிங்கள் புத்திசாலி. ஆனால் எங்களைப்போல் 2ம் கிளாஸ்வரைதான் படித்த பாமரர்களால் எவ்வாறு அனைத்தையும் ஊகிக்க முடியும்.
அவர் ஜனாதிபதி ஆக maximum tryஒன்று கொடுக்கிறாராம் அதனால்தான் பிரசாரங்கள் தொடர்கிறது!!
ஆமாம் LOSHAN அண்ணா ஏமாறியுது எங்கள் குற்றந்தான். அப்ப யாரைதான் நம்புவது.???
நன்றிகள் மாயனின் எண்ணங்கள். எங்கட மோட்டுச்சனத்துக்கு என்னதான் விளங்குது. இப்பிடியான ஆக்களால ஓட்டுப்போடவும் இப்ப சனத்துக்கு விருப்பமில்லை.
உங்கள் கருத்துக்கள் சரிதான் சுபானு. யோசித்துதான் மலையகத்தில் நிண்டிருக்கிறார். அதுசரி நான்குறிப்பிட்டது StrongTV (பலம்)தானே? நீங்கள் என்ன புதிதாக சொத்தீ டீவி எண்டு ஏதையோ சொல்கிறீர்கள்.
ஹாஹா நல்ல நக்கல், அந்த வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கவே உறைக்காது. நம்ம தலை கவுண்டரின் பாணியில் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!!!!!!!!!!
நல்லதொரு பதிவு..
நல்லதொரு தோலுரிப்பு கார்த்தி,வாழ்த்துக்கள்.ஆனாலும் எந்தளவுக்கு இதைக் கண்டு எவ்வளவு வேகமாகா துள்ளி எழுகிறோமோ அதைவிட மிக் வேகமாக அவற்றை மறந்துவிடுவதால் தான் இந்தக் கு.ரங்கா போன்றவர்களால் எங்கள் சனத்தை பெப்.பு...மக்கள் ஆக்கிக்கொண்டிருக்கமுடிகிறது.
கார்த்தி, உனக்கும் வளமான எதிர்காலம் இருக்கு...
இப்பிடித்தான் ‘அவரும்’ மற்றாக்களைச் சாடி மற்றாக்களைக் கேவலமா காட்ட வெளிக்கிட்டு உசந்தவர். அதுக்கு ஆமாம் போட ஒரு கூட்டமும் இருந்திச்சு.
அதே வழியை நீயும் பின்பற்றத் தொடங்கீட்டாய். (அவர வச்சே நீ தொடங்கியிருக்கிறாய் - உன்ர கெட்டித்தனத்தை மெய் மறந்து பாராட்டுறன்) ஆமாம் போட கூட்டமும் வந்திடிச்சு.
வெற்றி(lie) உனக்கே...
நன்றிகள் ஆதிரரை, வந்தியத்தேவன். என்ன தலைக்கு அமைச்சுப்பதவியாம்.
வடலியூரான் உண்மையில் இப்பசுத்தோல் போர்த்திய புலிகளை முதலே கண்டுபிடிப்பது கடினம்.
முதலில இந்த பால்குடிய அடிச்சுக்கலைக்கோணும். முளைச்சு மூணு இலை விடேல அதுக்குள்ள கதைவேற. இப்பிடி மோட்டு கூட்டம் இருக்குமட்டும் என்னைப்போல ஆக்களும் பீடா போட விரும்புவது தவிர்க்க முடியாதது. நீங்கள்தான் என்னைப்பற்றி புரிந்தவர்.
பால்குடி இது நான் சேர்த்த கூட்டமில்ல தானா சேர்ந்த கூட்டம். இவங்களுக்கு எதாவது செய்ய விரும்பிறன் பாப்பம் காலம் என்ன சொல்லுதெண்டு.
சாட்டையடி கார்த்தி..
20 வருடங்களுக்கு முந்திய கவிதையொன்று..எங்கோ வாசித்தது..
ஏமம் சாமம் பாராது
கூவிக் கூவி எழுப்பிவிட்டு..
தூங்குமாம் சேவல்
தமிழ்த் தலைமைகள் போல்..
//என்னைப்போல புலம்பிய பலரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.//
நிச்சயமாக...தேவையான பதிவு...மந்திரியாகப்பேறாராம்...பிறகு தமிழ் மக்களின்ர மனதை மாத்துவாராம்..
இப்ப டக்கர் எல்லாம் எவ்வளவோ பெட்டர் பாருங்கோ ....
Excellent article about black sheep. I think now our people can identify that black sheep...
நல்ல பதிவு கார்த்தி, தொடர்ந்து எழுதுங்கோ! வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக