தற்கால இசையமைப்பாளர்கள் – சிறுபார்வை
இப்போதைய காலப்பகுதியில் வெளிவரும் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கும் தென்னிந்திய தமிழ் சினிமாவில் உள்ள சில முக்கிய இசையமைப்பாளர்களை பற்றிய ஒரு சிறு அலசலை/ எனது பார்வையை தர இக்கட்டுரை முயல்கிறது . சின்ன வயசிலிருந்து ஒவ்வோர் பாடலை கேட்கின்றபோதும் அதை பாடியவர்கள், இசையமைத்தவர் யார் என்று அவர்களது பின்னணி பற்றி அறிந்து கொள்வதில் நான் காட்டிய ஆர்வம் இதை எழுத என்னை துாண்டியது. முதல் இரு இடங்களை பிடித்து முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்களான A.R.Rahman மற்றும் ஹாரிஷ் ஜெயராஜ் பற்றி ஏலவே அனைவருக்கும் பரீட்சயம் என்பதால் அவர்களை தவிர்த்து ஏனைய சிலரை பார்ப்போம்.
மிக இளவயதில்(16) திரைத்துறைக்கு நுழைந்து, பல இளவட்டங்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக இருக்கும் இவர், எனது கணிப்பின்படி திறமை அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இளையராஜாவின் வாரிசாகவே திரைத்துறைக்கு அறிமுகமானாலும் தனது திறமையால், முயற்சியால் படிப்படியாக உயர்ந்து தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளார். கைவசம் கூடுதலான படவாய்ப்புக்களை கொண்டவர்கள் வரிசையில் முதலிடத்திலிருக்கும் யுவன் தற்கால இளைஞர், யுவதிகளுக்கு பிடித்தவகையில் இசையமைப்பதில் கைதேர்ந்தவர்.
அதனால்தான் கூடுதலான இளவட்டங்கள் இவரின் ரசிகர்கள். ‘அரவிந்தன்‘ திரைப்படத்துடன் சறுக்கலாக 1996ல் ஆரம்பமான இசைப்பயணம். 1999ல் வெளிவந்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்‘ திரைப்படம் மூலமாக முற்றிலும் மாறியது. அதில் இடம்பெற்ற அனைத்துப்பாடல்களும் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து வாய்ப்புகள் குவியலானது. ‘7G Rainbow Colony‘, ‘காதல் கொண்டேன்‘ இவரது இசையில் வெளியான சில Box Office Hit திரை அல்பங்களாகும். அண்மையில் வெளியான ‘பையா‘ பாடல்களும் சந்து பொந்தெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இசையமைப்பதில் மட்டுமல்லாது தனது சொந்தக்குரலில் Stylishஆக பாடவல்ல திறமைபடைத்த, இவரது சொந்தக்குரல் பாடல்கள் எல்லாம் பாரிய வெற்றியை பெற்றுள்ளது.

G.V.பிரகாஷ்குமார்
இப்போதுள்ள இசையமைப்பாளர்களில் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் GVற்குதான் எனது கணிப்பில் முதல் இடம். திரைத்துறைக்கு செல்வாக்கால் சுலபமாக இளவயதில்(19) நுழைந்தவராக பார்க்கப்படுகின்ற போதிலும் குறுகிய காலத்தில் பலர் மத்தியில் பிரபலமடைந்தவராக இருக்கிறார் GV.பிரகாஷ். Mozart of Madras என செல்லமாக அழைக்கப்படும் A.R.Rahmanனின் மருமகனான இவர் மிகவும் சிறுவயதிலேயே பல பாடல்களை மாமனின் இசையில் பாடியுள்ளார்.
‘வெயில்‘ படம் மூலமாக பலரும் வியக்கும் வகையில் தனது திரை அறிமுகத்தை ஆணித்தரமாக பதித்தார். வேற்றுமொழிகளில் உள்ள முன்னணி பாடகர்கள் பலரை தனது இசையில் பயன்படுத்தும் இயல்பை கொண்டவர். இவர் பயன்படத்திய பிறமொழிபாடகர்களாக கைலாஷ்கர், அல்க்னா யாக்கீட், சோனு நிகம், டலர் மெஹந்தி, றுாப்குமார் ரதோட் போன்றோரை குறிப்பிடலாம். ரஜினியின் ‘குசேலன்‘ படத்தில் இசையமைக்க கிடைத்த வாய்ப்பானது இவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். Remake பாடல்களுக்கு இசையமைக்ககூடாது என்ற கொள்கையை கொண்ட இவர், இயக்குனரின் வேண்டுகோளிற்கு பணிந்தே ‘ஆயிரத்தில ஒருவன்‘ படத்தில் ‘அதோ அந்த பறவை‘ பாடலை Remake செய்யாது Original பாடலின் Sound trackற்கு மேலதிகமாக இசைச்சேர்க்கை செய்து பழைய பாடலின் சிறப்பு மங்காது தனது இசையால் அந்த பாடலை மெருகேற்றினார். பின்னணி இசையில் இவரது தேர்ச்சியை ‘ஆயிரத்தில ஒருவன்‘ படம் மூலம் நீங்கள் உணரலாம். A.R.Rahmanனின் சாயலில் அல்லது அவரது மெட்டுக்கள் சிலவற்றை இவர் சுட்டு பயன்படுத்துவதாகவும், சில ஆங்கில பாடல்களை ஆட்டையை போடுவதாகவும் இவரை சிலர் குறைகூறுவது மறுக்கமுடியாத உண்மையாகும். பாடகராகவும் விளங்கும் இவர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் கிட்டத்தட்ட 5பாடல்கள் வரை பாடியுள்ளார். யுவன்சங்கர்ராஜாவின் நேரடி போட்டியாளராக இவரை கருதலாம்.

யாருடைய செல்வாக்குமின்றி திரைத்துறைக்கு நுழைந்தவர்களில் இவரும் ஒருவர். குத்துப்பாட்டுக்களின் தனிக்காட்டு ராஜாவாக திகழும் இவரது இசையில் முதலாவதாக ‘சுக்ரன்‘ படப்பாடல்கள் வெளியாகியது. அந்தகாலத்தில் ‘Suppose’ பாடலை வாயில் முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதல் அல்பம் மூலமாக தனெக்கென தனிமுத்திரையை பதி்த்த விஜய் அன்ரனி பல புதிய இளைய பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவரது இசையில் வெளிவரும் படங்களில் ஒரு குத்துப்பாடலாவது இருப்பதும் அது ஹிட் ஆவதும் தவிர்க்க முடியாதவொன்று. ‘நாக்க முக்க‘ பாடல் இவரது fast beat பாடல்களில் ஒரு மைல்கல்லாகும். இப்படியான பாடல்களுக்கு பாடலை எழுதுவதும் இவரே. ‘சுக்ரன்‘, ‘டிஷ்யும்‘, ‘நான் அவனில்லை‘, ‘நினைத்தாலே இனிக்கும்‘ இவரது இசையில வெளியாகி பலராலும் பேசப்பட்ட பாடல்கள். குத்துப்பாடல் மட்டுமல்லாது இவரது மெலடி பாடல்களும் மிகவும் இனிமையானவை, தனித்தன்மையானவை. ‘அங்காடித்தெரு‘ படத்தில் ‘அவள் அப்படி ஒன்றும்‘ பாடல் அதற்கு மிகச்சிறந்த எடுத்தக்காட்டு.

இமான்
தற்போது இருப்பவர்களில் சிறந்த Remake இசையமைப்பளராக என்னால் பார்க்கப்படும் இசையமைப்பாளராக இமான் காணப்படுகிறார். இவரது பாடல்களை கேட்கும் இசையறிவுள்ள எவரும் இது இமானுடையதென்று இலகுவாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில் ஒரே ஸ்டைலில் வழமையான instrumentsகளை பயன்படுத்தியே இவர் இசையமைக்கிறார். பெரும்பாலும் வர்த்தகரீதியான மசாலா படங்களுக்கே இவருக்கு வாய்ப்புக்கள் கூடுதலாக கிடைக்கிறது. அண்மையில் வெளியான "மைனா" இதிலிருந்து மாறுபட்டது. விஜயின் ‘தமிழன்‘ படத்தில் இசையமைப்பாளராக இவர் அறிமுகமானார். சொந்த குரலில் நெளிவு, சுளிவுகளுடன் பாடல்களை பாடுவதில் இமான் வல்லவர். இவரும் பல புதுமுகங்களை தனது இசை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இமானின் பாடல்கள் ஒரு போதும் சகிக்கமுடியாமல் இருக்காது (சிறிகாந் தேவாவின் தற்போதைய பாடல்கள் போல்) என்று அறியப்படும் Minimum guaranty இசையமைப்பாளர் இவர்.
Vijay TV, Sun TVகளிலும் இவர் ஆரம்பத்தில் பணிபுரிந்திருந்தாலும், இவரை நான் முதலில் கண்டது பொதிகை TVயிலாகும். ஆரம்பகால பொதிகை TVஐ பார்த்தவராயின் நீங்களும் நிச்சயம் இவரை கண்டிருப்பீர்கள். தொலைக்காட்சி அறிவிப்பாளராக அறியப்பட்ட ஜேம்ஸ் 2008ல் இவரது மாணவரான சசிக்குமாரால் ‘சுப்பிரமணியபுரம்‘ற்கு இசையமைக்க அழைக்கப்பட்டார். அந்தப்பட்த்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால்‘ பாடல் மூலமாகவும், படத்தின் பெருவெற்றியின் மூலமாகவும் உலகம் பூராகவும் இவரது பெயர் பேசப்பட்டது. இவரது எழுச்சி அதன்பின் திரையிசைப்பக்கமாக மாறியது. இவரின் இசையில் வெளியான 4பட பாடல்களும் இனிமையானவையாகும். எனது தெரிவில் இவரது அல்பங்களில் ‘யாதுமாகி‘ முதல் இடம் பெறுகிறது. எனினும் படத்தின் சொதப்பலாலயோ என்னவோ இப்படப்பாடல்கள் வானொலியில் ஒலித்து நான் கேட்டது மிகக்குறைவு. 4படங்களிலும் ஒவ்வோர் Maximum Duet Melody பாடல் இருக்கின்றமை சிறப்பாகும்.
வித்யாசாகர்
தற்காலத்தில் இசையமைத்துக்கொண்டிருக்கும் மூத்த இசையமைப்பாளர்களில் வித்யாசாகர் முதன்மையானவர். இப்போதும் திறமையாக இசையமைத்துவரும் இவருக்கு வாய்ப்புக்கள் தற்போது குறைவாகியுள்ளமைக்கான சரியான காரணத்தை என்னால் அறிய முடியாதுள்ளது. தற்போதைய முதல்தர நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசைவழங்கிய பெருமையுடைய இவர் ஆரம்பகாலங்களில் தனது இசையில் பாடல்களை பாடியும் வந்துள்ளார். அண்மையில் குருவியில் இடம்பெற்ற ‘பலானது‘ பாடலை பாடியவரும் இவரே. S.P.பாலசுப்ரமணியம், இளையராஜாவிற்கு அடுத்த சிறந்த இசையமைப்பாளராக இவரை தான் கருதுவதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். 1989இலேயே தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் கர்ணா படத்தில் ‘மலரே மௌனமா‘ பாடல் மூலமாவே தனது இருப்பை வெளி உலகிற்கு உணர்த்தினார். எனினும் 2001ற்கு பிறகே ஸ்திரமாக தமிழ்மொழிப்படங்களில் இவரால் கால்பதிக்க முடிந்தது. ‘அன்பே சிவம்’, ‘கில்லி’, ‘சந்திரமுகி’, ‘மொழி’, ‘பிரிவோம் சந்திப்போம்’ போன்ற படங்கள் இவரது புலமையை எடுத்தியம்பும் ஒருசில படங்கள். பாடகர் மதுபாலகிருஷ்ணரை தனது ஆஸ்தான பாடகராக உபயோகிக்கிறார்.
தேவிசிறி பிரசாத் (DSP)
மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இசைஇயக்குனராக விளங்கும் DSP தனது அறிமுகத்தை தெலுங்கு படத்திலேயே மேற்கொண்டார். ‘ICE’ மூலம் தமிழில் அறிமுகமானாலும் ‘மாயாவி’ படத்தின் மூலமாகவே தமிழில் பேசப்பட்டார். அரைச்ச மாவையே திருப்பி திருப்பி அரைக்கும் ஒரு கம்போஸராகவும், மேடை நிகழ்ச்சிகளுக்கே (Stage Performer) லாயக்கானவராகவுமே இவரை நான் பார்க்கிறேன். (நல்லா டான்ஸ் பண்ணுவார்). அதாவது இசைச்சரக்கு தீர்ந்துவிட்டது இவருக்கு. இவரது இசையில் இப்போது வரும் பாடல்கள் அனேகமானவை இவரின் பழைய பாடல்களை ஞாபகப்படுத்தும். ஆனாலும் DSPக்கு படவாய்ப்புக்களுக்கு குறைவில்லை. ஏனொ தெரியவில்லை. எனினும் ‘கந்தசாமி‘ பாடல்கள் இதிலிருந்து மாறுபட்டவை. ‘மாயாவி’, ’ஆறு’, ‘உனக்கும் எனக்கும்’ போன்றன இவரின் இசையில் பிரபலமானவை.
ஜோஷ்வாசிறீதர் தீனா தரன் தமன் போன்ற ஏனைய இசையமைப்பாளர்கள் பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
15 comments:
அருமையான பதிவு.....சுயவிபரத் தேடல்....
வித்தியாசாகர்...பாடகர் மதுபாலகிருஷ்ணரை தனது ஆஸ்தான பாடகராக உபயோகிக்கிறார்ஃஃஃஃ
காவலனில் இவரைக் காணலயே....!!
நல்லதோர் ஆய்வு..ஏன் DSP ல் மட்டும் இந்தக் கொலைவெறி..?? பல இசையமைப்பாளர்கள் இப்போது அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கிறார்கள் தானே ;)
நல்ல இடுகை...
நல்லாயிருக்கு அவர்களை அப்படியெ அப்பட்டமாகக் காட்டியுள்ளீர்கள் அதிலும் டிஎஸ்பி 100 வீதம் உண்மை...
ஜிவிபிரகாஸ் தனது குழப்படித் தனத்தால் இயக்குனர்களிடம் இருந்த நன்மதிப்பை கெடுத்ததாகவும் ஒரு கதை இருக்கிறது உண்மை தெரியல...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception
அருமையான தகவல்கள். ஆனால் சீனியரான வித்யாசாகரை இந்தப் பட்டியலில் சேர்த்தது முறையற்றது.வேதனை.
இசை ரசிகர்கள் சார்பாகக் கண்டிக்கிறேன்.
//பாடகர் மதுபாலகிருஷ்ணரை தனது ஆஸ்தான பாடகராக உபயோகிக்கிறார்//
இதுவும் தவறு. முன்பு இவ்வாறு உதித் இருந்தார். இப்போது காவலனில் உதித் பாடவில்லை.
DSP ஒரு அருமையான Entertainer.அவர் தன் அரைத்த மாவையே அரைத்தாலும் ரசனையாக செய்கிறார். அது தான் காரணம் என் நினைக்கிறேன்.
LOSHAN
www.arvloshan.com
ஜனகன் மந்திரப்புன்னகையில் மதுபாலக்கிருஸ்ணன் இருக்கிறாரே. ஹிஹி...
Sinmajan: ஆனாலும் அவர்கள் கொஞ்சமாவது வித்தியாசம் காட்டுறார்கள். இவரைப்போல் இல்லை.
நன்றி யோகா.
// ஜிவிபிரகாஸ் தனது குழப்படித் தனத்தால் இயக்குனர்களிடம் இருந்த நன்மதிப்பை கெடுத்ததாகவும் ஒரு கதை இருக்கிறது உண்மை தெரியல...
சுதா நான் இதைக்கேள்விப்படவில்லை.
ஆனால் இப்போதும் திரையில் பிரபலமாக இருப்போர் வரிசையில் வித்தியாசாகர் இருப்பதால்தான் அவரை சேர்த்தேன். இது பெருமைக்குரியது. இவரின் ரசிகர்களில் நானும் ஒருவன்தான்.
// S.P.பாலசுப்ரமணியம், இளையராஜாவிற்கு அடுத்த சிறந்த இசையமைப்பாளராக இவரை தான் கருதுவதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
லோசன் அண்ணா இந்தவரிகளை நீங்கள் கவனிக்கவில்லைபபோலும்.
//பாடகர் மதுபாலகிருஷ்ணரை தனது ஆஸ்தான பாடகராக உபயோகிக்கிறார்.
ஆனால் மதுபாலக்கிருஷ்ணருக்கு வாய்ப்புக்கள் 75%ற்கு மேல் கொடுத்தவர் வித்தியாசாகரே.
DSP பற்றி சொன்னது சரிதான்.
உங்கள் பதிவை இணைத்ததற்கு நன்றி...
தமிழ் வலைப்பூக்களுக்கு இணைப்புக்கொடுக்க விரும்பினால்..
http://tamilblogscorank.blogspot.com/
Nice Carthi!!!
நல்லா பார்வை பாத்திருக்கீங்க..
உங்கள தான் பாக்க முடியாம போய்ட்டுது பாப்பம்..
அருமையான பதிவு.
நன்றிகள் sanjeevan sivatharisan!
தம்பி Cool Boy கிருத்திகன் நாங்க எல்லாம் சுப்பர் ஸ்டார் மாதிரி இப்ப வராட்டி பாக்கிறது ரொம்ப கஸ்டம்!
//S.P.பாலசுப்ரமணியம், இளையராஜாவிற்கு அடுத்த சிறந்த இசையமைப்பாளராக இவரை தான் கருதுவதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். //
நானும் இதை அவதானித்துள்ளேன், எனக்கும் இளையராஜாவுக்கப்புறம் பிடித்த இசையமைப்பாளர் வித்யாசாகர்தான், இதை உங்கள் பதிவுக்காக சொல்லவில்லை. ஏனையவர்களில் யுவனையும் சில நேரங்களில் ஜி.வியையும் பிடிக்கும் இமான்,விஜய் அன்டனி, உங்க DSP மீது எனக்கு அவளவு ஈடுபாடு இல்லை.
வித்யாசாகர் பற்றிய எனது பார்வை
http://eppoodi.blogspot.com/2010/11/221110.html
உங்கள் வலைப்பூவிற்கு வருவது இதுதான் முதல் தடவை
பதிவு அருமை
எங்கே பதிவு ஒன்றையும் காணல... புது வருட வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக