கானல்நீர் கனவுகள்....

ஏறத்தாழ 5மாதங்களுக்கு பிறகு மீண்டும் வலைத்தளத்தில் அலுப்படிப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. படிக்கிறன், படிக்கிறன் எண்டு பந்தா காட்டி 4வருடங்கள் வெட்டியாக என்னையே நான் ஏமாற்றிக்கொண்ட படிப்புக்கு இனி முழுக்கு. 
மீண்டும் வெட்டியாக எனது வாழ்க்கை.! கவிதைக்கும் எனக்கும் எட்டா பொருத்தம் எண்டாலும் சில உணர்வுகளை கொட்ட...

கானல்நீர் கனவுகள்...


இருளின் சுவடுகளில் விட்டில் பூச்சி தேடும் தருணங்கள்
வன்னியில் வரிசையான மாற்றங்களில் சேர்க்கப்பட்ட 
                                           மானங்கள்
நதியின் ஒய்யார வளைவுகளில் முளைவிடும் பாசிக்கள்
நடுநெற்றிப்பொட்டில் பண்பாட்டுடன், மொறட்டுவ 
                                 கம்பஸில் தமிழச்சிகள்


கிராம மண்வாசனையுடன் தமிழில் கௌதம் மேனன் 
                                             மூவீஸ்
உச்சஸ்தாயி குத்துப்பாட்டற்ற விஜய் அன்ரனியின் இசை 
                                             அல்பம்
மூஞ்சிப் புத்தகத்தில் மூக்கை நுழைக்காத இளவட்டுக்கள்
சோமபான மணமறியா இறுதியாண்டு மாணவ பாலகர்கள்


அமாவாசை நடுநிசியில் முழுநிலவை தொட்டுமுத்தமிடும் 
                                             கரங்கள்
மாந்தர் தம் துயரில் மனம் பதைக்கும் அரசியல் தலைகள்
தமிழருக்காக தன்னை அர்ப்பணித்து உயிர்விடும்
                                   ‘கருணை செல்வம்‘
சேமநல பணிகளில் வெறுமையாயிருக்கும் கையூட்டப் 
                                           பெட்டிகள்


மணவறை ஏறும் காலிமுகத்திடல் ஒரு குடைசோடிகள்
பன்னீரில் குளித்து இரணிய கட்டிலில் சேரிப்புற சிறுவர்கள்
கலர்கல்வீடுகளில் யுத்த அங்கிதமற்று எம் அகதிகள் 
தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ நான் தேடிய நாடு!!!

பிற்குறிப்பு: மொறட்டுவை பல்கலைகழக தமிழ்மாணவர்களால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சங்கமம் சஞ்சிகையில் 2010ல் வெளியான ஆக்கம் இது.

8 comments:

Subankan சொன்னது…

அருமை :)

//நடுநெற்றிப்பொட்டில் பண்பாட்டுடன், மொறட்டுவ
கம்பஸில் தமிழச்சிகள்//

;-)

கருணையூரான் சொன்னது…

கார்த்தி ..நான் இதை புத்தகத்தில் பாத்தேன்...அருமையான தமிழ் சொற் கோர்ப்பு ... தேவையான பல விசயங்களை லாவகமாக சொல்லியிருக்கிறியள் ..வாழ்த்துக்கள்

கார்த்தி சொன்னது…

நன்றிகள் Subankan, கருணையுரான்...

Agash சொன்னது…

அங்கிதம் என்றால் என்ன??

செழியன் சொன்னது…

கார்த்தி! நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான கவிதை! பொட்டலத்தை பிரித்தாகி விட்டது போல் தெரிகிறது. இனியேன்ன அறுசுவை தான் ! பணி தொடர்க!!!

கார்த்தி சொன்னது…

அங்கிதம் என்றால் வடு,அடையாளம் என்று பொருள்.

Kiruthigan சொன்னது…

வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

மூஞ்சிப் புத்தகத்தில் மூக்கை நுழைக்காத இளவட்டுக்கள்//
சூப்பர் வரிகள்

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்