திரைதகவல் பெட்டகம்-VII (தமன், SolarSai, சத்யா)
ட&#
21
![]() |
Composer Vidyasakar |
![]() |
Composer Thaman |
------------------------------------------------------------------------------
இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் மூலமாக அறியப்பட்டவர்தான் பாடகர் Solar சாய். வேட்டையாடுவிளையாடுவில் இவரும் பிராங்கோவும் சேர்ந்து பாடிய ”நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே” பாடல் அந்தக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. அதன்பின்னர் சோலர்சாய் சில பாடல்களை பாடியபோதும் அந்தப்பாடல்கள் ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் D.இமானின் இசையில் மைனாவிற்காக ”ஜிங்கு சிக்கு” என்று பெரிய்ய ஹிட் பாடலை பாடினார். ஆயினும் மற்ற பாடகர்கள் போல் ஒரு ஹிட் கொடுத்த பிறகு கிடைக்கும் பிரபல்யம் இவருக்கு கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடலாம். பலருக்கு இவரை பாடகரென்றே தெரியாது கவலைக்குரிய விடயம்தான்.
Singer Solar Sai |
------------------------------------------------------------------------------
”எங்கேயும் எப்போதும்” படம்தான் இசையமைப்பாளர் சத்யாவின் முதல்படம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறுசிலரோ ”சேவற்கோடி”தான் முதல்படம் என்கிறார்கள். ஆனால் இரண்டும் பிழை. சத்யாவின் இசையமைப்பில் முதலில் வெளிவந்த படம்தான் ”எங்கேயும் எப்போதும்”. சேவற்கொடி பாடல்கள் வந்து பிரபல்யம் அடைந்ததோ தவிர படம் இன்னும் வெளியாகவில்லை. இவை எல்லாத்துக்கும் முன்னதாக சத்யாவிற்கு இவ்விரண்டு வாய்ப்புக்களை வழங்கியது ”சில்லென்று ஒரு காதல்” புகழ் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இன்னும் வெளிவராமல் இருக்கும் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படபாடல்கள்தான்.
பரத்வாஜ், சிற்பி, பாலபாரதி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக உருவாகியது இயக்குனர் கிருஷ்ணாவின் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படம்மூலமாகதானாம். அண்மையில் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் இதை நான் அறிந்துகொண்டேன். இந்தபாடல்களை கேட்டுத்தான் ”சேவற்கொடி” ”எங்கேயும் எப்போதும்” வாய்ப்புக்களை இவருக்கு வழங்கியுள்ளார்கள். இவரின் 3வது படம்தான் எங்கேயும் எப்போதும். ஆனால் மற்றபடங்கள் இன்னும் வராததால் Debutant Composer and MovieDirectorன் படம் எங்கேயும் எப்போதும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அது பிழை.
முந்தைய பாகங்களுக்கு
I II III IV V VI
![]() |
Composer Sathya |
முந்தைய பாகங்களுக்கு
I II III IV V VI
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
7 comments:
ம்ம்ம் தகவல்கள் புதுசு!
thullatha manamum thullum padatthil varum megamai vanthu pohiren paadalai paadiyathu yaarennru sollamudiyuma
ராஜேஷ் என்ற பாடகர் பாடியிருந்தார். அவர் விஜயின் தூரத்து சொந்தம் என்று யாரோ சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். உண்மையோ சரியாக தெரியாது.
வித்யாசாகர் பற்றி சொல்வதென்றால் நிறைய இருக்கு, இன்றைய இளைஞர்களில் பலருக்கு வித்யாவின் பாடல்களும், அவற்றின் இனிமையும் புரியாது, எனக்கு என்றைக்கு இளையராஜாவுக்கு அடுத்து வித்யாசாகர்தான். முன்னணி நாயகர்களில் கிட்டத்தட்ட எல்லோரது திரைப்படங்களுக்கும் இசையமைத்த வித்யாசாகர் சூர்யா, ஆரியா இருவருக்கும் இசையமைக்காதது ஒரு குறை போலவே எப்போதும் மனதில் தோன்றுகின்றது, அந்த குறை நிறைவேற சாத்தியமும் குறைவே........
எப்பூடி சொன்ன கருத்தோடு அப்பிடியே ஒத்துப் போய்கிறேன்..
கார்த்தி நீங்கள் சொன்ன படங்களிலும் வித்யாசாகர் தனது இசையிலும் பாடல்களிலும் குறை வைக்கவில்லை.
சிறுத்தையில் 'ஆராரோ' பாடலின் சாம்பிள் போதும்...
தாரணி வித்யாசாகரைக் கழற்றியது கவலையே..
சொலார்சாய் ஆதித்யனின் பல ரீமிக்ஸ் பாடல்கள் மூலமாகத் தான் பிரபலமானார். அவருக்குத் தொடர்ந்து இப்படித் துக்கடா வாய்ப்புக்கள் தான் வரப் போகின்றன. பாவம்
சத்யா பற்றிய தகவல் புதிது :)
கார்த்தி மிகவும் ரசித்துப் படிக்கும் தொடர் இது...
சத்யாவின் விசயம் எனக்கும் புதிசு தான்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
வித்தியாசகரின் டுயட் பாடல்களுக்கு எந்தக் காலத்திலும் தனி மாதிப்பு இருக்கும் என்பது என் கருத்து...
கருத்துரையிடுக