ராஜபாட்டை(போடா சொட்டை :P) - திரைப்பார்வை

வெண்ணிலா கபடிக்குழு, "நான் மகான் அல்ல", "அழகர்சாமியின் குதிரை" என்று முதல் மூன்று நல்ல படங்களை தந்த இயக்குனர் சுசீந்திரனிடமிருந்து இப்பிடியொரு படத்தை நான் எதிர்பாக்கவில்லை. நல்ல இயக்குனர், தமிழ்சினிமாவின் முதன்மையான திறமையான நடிகர் விக்ரம் இணையும் படம் என்பதால் நல்லவொரு சுவாரஸ்யமான பக்கா மசாலா படத்தை (என்னதான் கமெர்ஷியல் படமென்றாலும்) எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததுக்கு படத்தில ஒண்ணுமே இல்லை. இப்பிடியொரு சாட்டர் படத்தை நல்ல படமெடுத்த சுசீந்திரனே தரேக்க இந்த திரைப்பார்வையும் நான் எழுதினதுக்குள் சின்னனாதான் இருக்கும்.


பெரிதாக விளம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் வெளிவந்த இந்தப்படத்தில் வெறுமன 4பாட்டுதான் என்றாலும், யுவனின் இசையில் பாடல்கள் முதலில் வரவேற்பை பெற்றிருந்தன. "பனியே பனிப்பூவே", "பொடிப்பையன் போலவே" பாடல்கள் நன்றாக இருந்தன. முதல் பாதியில் கலகலப்பாக நன்றாக சென்றபடம் இரண்டாவது பாதியில் பெரும் சொதப்பலுடன் முடியும் எண்டு எதிர்பாக்கமுதல் திடீரென முடிந்து விட்டது. தியேட்டரில் படம்முடிந்தமாதிரி தெரிந்தாலும் இன்னும் இருக்குமோ என்ற எண்ணமே இருந்தது. பெரிய்ய டுவிஸ்டுகள் ஒண்ணுமே இல்லாமல் முடிக்கோணும் எண்ட மாதிரி முடிச்சே மாதிரி இருந்திச்சு. படம்முடிஞ்ச பிறகுதான் "லட்டு லட்டு" பாட்டை போட்டு ஸ்ரேயா, றீமாசென்னுடன் விக்ரத்தை ஆட வைத்தார்கள்.


சுசீந்திரன் எடுக்கும் முதலாவது பெரிய்ய பட்ஜெட் படம் எண்டு சொன்னதுக்கு படத்தில பிரமாண்ட காட்சிகளென்று ஒண்டையும் காண முடியல. ஆனா இந்தபடத்தில பாராட்ட வேண்டிய முக்கிய கண்டுபிடிப்புதான் ஹீரோயின் தீக்சாசேத். கத்ரினா கைப்பை போல முகவெட்டை கொண்ட இந்த நடிகைக்கு நல்ல வாய்ப்புக்கள் வரும். அழகாக அம்சமாக அடக்கமாக இருக்கிறார். (கார்த்தி ஜெனிலியா போனலென்ன தீக்சா உனக்குதான்). இந்த படத்தில் இவருக்கு காட்சிகள் மிகக்குறைவுதான். எண்டாலும் அப்பிடியே கண்ணில நிக்கிறா. சிம்புவின் வேட்டை மன்னனிலும் இவ இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. விக்ரமும் நல்ல Stylish ஆகதான் வாறார். இறுதிக்கட்டங்களில் பல வேடங்களில் வரும் காட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருக்கு. (தசாவதாரத்தையும் விட கூட வேடம் போடலாம் எண்டு காட்டவோ தெரியல.)



யாரடி நீ மோகினியில் வந்த அந்த வயதுபோன நடிகர் விஸ்வநாத் முதல்பாதியில் விக்ரமுடன் சேர்ந்து நன்றாக நடித்திருந்தார். இளவட்டங்களுக்கு ஈடுகொடுக்கமுடியும் என்று காட்டியிருந்தார். இந்தபடத்திற்கென்று தனியான நகைச்சுவை நடிகர் இல்லை என்றாலும் விக்ரமோடு திரியும் அடியாடக்களும் தம்பிராமையா செய்யும் சேஷ்டைகளும் ரசிக்க முடிகிறது. வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விக்ரத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு காமெர்ஷியல் ஹிட் கொடுக்கவேண்டிய கடப்பாடு இந்தப்படத்தில் நிறையவே இருந்தது. ஆனால் மீண்டும் விக்ரமிற்கு ஒரு சொதப்பல் படமே கிடைத்திருக்கு. 

Director Suseenthiran
மொத்தத்தில் என்னதான் வித்தியாசமான கதைக்களங்களில் சுசீந்திரன் தன்னை நிரூபித்திருந்தாலும் இதில் முதன்முதலில் சொதப்பியிருக்கிறார். முதல்பாதிய மட்டும் சும்மா பாக்கலாம். இரண்டாம் பாதி ஏனோதானோ. விக்ரமின் சொதப்பல் படங்களில் இதற்கும் முக்கிய ஒரு இடம்கிடைக்கபோவது தவிர்க்கமுடியாதது.

பி.கு: இந்தப்படத்திற்கு நிறைய எழுத என்னால முடியல. அந்தளவிற்கு படம்சொல்லக்கூடியதாக இல்லங்க. நீண்டகாலத்துக்கு பிறகு இன்றுதான் யாழ்ப்பாணத்தில் படம் பார்த்தேன் (செல்லா திரையரங்கில் பதிவர் எப்பூடியும் வந்திருந்தார்)

5 comments:

Mathuran சொன்னது…

அவ்வ்.. விக்ரம் & சுசீந்திரனிட்ட இருந்து ரொம்ப எதிர்பார்த்தனே! அம்போவா

Mathuran சொன்னது…

//கார்த்தி ஜெனிலியா போனலென்ன தீக்சா உனக்குதான்//
இந்த விசயம் மைந்தனுக்கு தெரியுமா?

எப்பூடி.. சொன்னது…

இடைவேளைக்கு அப்புறமா சுசீந்திரனது இயக்கம் மிக மிக சாதரணமாக இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது! கிளைமாக்ஸ் சொதப்பலோ சொதப்பல்....... பட்ஜெட்டை படத்தின் இறுதி இரு நிமிடங்களில்த்தான் கூட்டியிருந்தார்கள்; ரீமாவும், சிரேயாவும் எதுக்கு? தயாரிப்பாளர் காசில........?????

விக்ரம் - வெரி சாரி.......

எப்பூடி.. சொன்னது…

உங்காளு (டுப்பிளிகேட் கத்தரீனா) பாக்க நல்லாத்தான் இருக்காங்க, ஆனால் எனக்கென்னமோ இந்த ரவுண்டு, ஸ்க்குயாரு எல்லாம் வருவாங்கென்னு நம்பிக்கை இல்லை.

அப்புறம் எதுக்கிந்த // செல்லா திரையரங்கில் பதிவர் எப்பூடியும் வந்திருந்தார்// வசனம்?? :p நீங்க சொல்ற அளவுக்கு அவர் வேர்த் இல்லை, அதிலும் 'பதிவர்' அடைமொழி ஏதோ நாய் சேகர், கொக்கி குமாரு, பட்டாசு பாலு, பான்பராக் ரவி போல கேவலமா இருக்கு :p

Unknown சொன்னது…

ஆமா யார் அந்த எப்பூடி?சொல்லவே இல்ல?
விமர்சனம் கொடுத்த காசு கரியான கவலைல எழுதின பீலிங் அடிக்குது :P

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்