ராஜபாட்டை(போடா சொட்டை :P) - திரைப்பார்வை
ட&#
23
வெண்ணிலா கபடிக்குழு, "நான் மகான் அல்ல", "அழகர்சாமியின் குதிரை" என்று முதல் மூன்று நல்ல படங்களை தந்த இயக்குனர் சுசீந்திரனிடமிருந்து இப்பிடியொரு படத்தை நான் எதிர்பாக்கவில்லை. நல்ல இயக்குனர், தமிழ்சினிமாவின் முதன்மையான திறமையான நடிகர் விக்ரம் இணையும் படம் என்பதால் நல்லவொரு சுவாரஸ்யமான பக்கா மசாலா படத்தை (என்னதான் கமெர்ஷியல் படமென்றாலும்) எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததுக்கு படத்தில ஒண்ணுமே இல்லை. இப்பிடியொரு சாட்டர் படத்தை நல்ல படமெடுத்த சுசீந்திரனே தரேக்க இந்த திரைப்பார்வையும் நான் எழுதினதுக்குள் சின்னனாதான் இருக்கும்.
பெரிதாக விளம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் வெளிவந்த இந்தப்படத்தில் வெறுமன 4பாட்டுதான் என்றாலும், யுவனின் இசையில் பாடல்கள் முதலில் வரவேற்பை பெற்றிருந்தன. "பனியே பனிப்பூவே", "பொடிப்பையன் போலவே" பாடல்கள் நன்றாக இருந்தன. முதல் பாதியில் கலகலப்பாக நன்றாக சென்றபடம் இரண்டாவது பாதியில் பெரும் சொதப்பலுடன் முடியும் எண்டு எதிர்பாக்கமுதல் திடீரென முடிந்து விட்டது. தியேட்டரில் படம்முடிந்தமாதிரி தெரிந்தாலும் இன்னும் இருக்குமோ என்ற எண்ணமே இருந்தது. பெரிய்ய டுவிஸ்டுகள் ஒண்ணுமே இல்லாமல் முடிக்கோணும் எண்ட மாதிரி முடிச்சே மாதிரி இருந்திச்சு. படம்முடிஞ்ச பிறகுதான் "லட்டு லட்டு" பாட்டை போட்டு ஸ்ரேயா, றீமாசென்னுடன் விக்ரத்தை ஆட வைத்தார்கள்.
சுசீந்திரன் எடுக்கும் முதலாவது பெரிய்ய பட்ஜெட் படம் எண்டு சொன்னதுக்கு படத்தில பிரமாண்ட காட்சிகளென்று ஒண்டையும் காண முடியல. ஆனா இந்தபடத்தில பாராட்ட வேண்டிய முக்கிய கண்டுபிடிப்புதான் ஹீரோயின் தீக்சாசேத். கத்ரினா கைப்பை போல முகவெட்டை கொண்ட இந்த நடிகைக்கு நல்ல வாய்ப்புக்கள் வரும். அழகாக அம்சமாக அடக்கமாக இருக்கிறார். (கார்த்தி ஜெனிலியா போனலென்ன தீக்சா உனக்குதான்). இந்த படத்தில் இவருக்கு காட்சிகள் மிகக்குறைவுதான். எண்டாலும் அப்பிடியே கண்ணில நிக்கிறா. சிம்புவின் வேட்டை மன்னனிலும் இவ இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. விக்ரமும் நல்ல Stylish ஆகதான் வாறார். இறுதிக்கட்டங்களில் பல வேடங்களில் வரும் காட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருக்கு. (தசாவதாரத்தையும் விட கூட வேடம் போடலாம் எண்டு காட்டவோ தெரியல.)
யாரடி நீ மோகினியில் வந்த அந்த வயதுபோன நடிகர் விஸ்வநாத் முதல்பாதியில் விக்ரமுடன் சேர்ந்து நன்றாக நடித்திருந்தார். இளவட்டங்களுக்கு ஈடுகொடுக்கமுடியும் என்று காட்டியிருந்தார். இந்தபடத்திற்கென்று தனியான நகைச்சுவை நடிகர் இல்லை என்றாலும் விக்ரமோடு திரியும் அடியாடக்களும் தம்பிராமையா செய்யும் சேஷ்டைகளும் ரசிக்க முடிகிறது. வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விக்ரத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு காமெர்ஷியல் ஹிட் கொடுக்கவேண்டிய கடப்பாடு இந்தப்படத்தில் நிறையவே இருந்தது. ஆனால் மீண்டும் விக்ரமிற்கு ஒரு சொதப்பல் படமே கிடைத்திருக்கு.
![]() |
Director Suseenthiran |
மொத்தத்தில் என்னதான் வித்தியாசமான கதைக்களங்களில் சுசீந்திரன் தன்னை நிரூபித்திருந்தாலும் இதில் முதன்முதலில் சொதப்பியிருக்கிறார். முதல்பாதிய மட்டும் சும்மா பாக்கலாம். இரண்டாம் பாதி ஏனோதானோ. விக்ரமின் சொதப்பல் படங்களில் இதற்கும் முக்கிய ஒரு இடம்கிடைக்கபோவது தவிர்க்கமுடியாதது.
பி.கு: இந்தப்படத்திற்கு நிறைய எழுத என்னால முடியல. அந்தளவிற்கு படம்சொல்லக்கூடியதாக இல்லங்க. நீண்டகாலத்துக்கு பிறகு இன்றுதான் யாழ்ப்பாணத்தில் படம் பார்த்தேன் (செல்லா திரையரங்கில் பதிவர் எப்பூடியும் வந்திருந்தார்)
திரைதகவல் பெட்டகம்-VII (தமன், SolarSai, சத்யா)
ட&#
21
![]() |
Composer Vidyasakar |
![]() |
Composer Thaman |
------------------------------------------------------------------------------
இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் மூலமாக அறியப்பட்டவர்தான் பாடகர் Solar சாய். வேட்டையாடுவிளையாடுவில் இவரும் பிராங்கோவும் சேர்ந்து பாடிய ”நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே” பாடல் அந்தக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. அதன்பின்னர் சோலர்சாய் சில பாடல்களை பாடியபோதும் அந்தப்பாடல்கள் ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் D.இமானின் இசையில் மைனாவிற்காக ”ஜிங்கு சிக்கு” என்று பெரிய்ய ஹிட் பாடலை பாடினார். ஆயினும் மற்ற பாடகர்கள் போல் ஒரு ஹிட் கொடுத்த பிறகு கிடைக்கும் பிரபல்யம் இவருக்கு கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடலாம். பலருக்கு இவரை பாடகரென்றே தெரியாது கவலைக்குரிய விடயம்தான்.
Singer Solar Sai |
------------------------------------------------------------------------------
”எங்கேயும் எப்போதும்” படம்தான் இசையமைப்பாளர் சத்யாவின் முதல்படம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறுசிலரோ ”சேவற்கோடி”தான் முதல்படம் என்கிறார்கள். ஆனால் இரண்டும் பிழை. சத்யாவின் இசையமைப்பில் முதலில் வெளிவந்த படம்தான் ”எங்கேயும் எப்போதும்”. சேவற்கொடி பாடல்கள் வந்து பிரபல்யம் அடைந்ததோ தவிர படம் இன்னும் வெளியாகவில்லை. இவை எல்லாத்துக்கும் முன்னதாக சத்யாவிற்கு இவ்விரண்டு வாய்ப்புக்களை வழங்கியது ”சில்லென்று ஒரு காதல்” புகழ் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இன்னும் வெளிவராமல் இருக்கும் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படபாடல்கள்தான்.
பரத்வாஜ், சிற்பி, பாலபாரதி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக உருவாகியது இயக்குனர் கிருஷ்ணாவின் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படம்மூலமாகதானாம். அண்மையில் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் இதை நான் அறிந்துகொண்டேன். இந்தபாடல்களை கேட்டுத்தான் ”சேவற்கொடி” ”எங்கேயும் எப்போதும்” வாய்ப்புக்களை இவருக்கு வழங்கியுள்ளார்கள். இவரின் 3வது படம்தான் எங்கேயும் எப்போதும். ஆனால் மற்றபடங்கள் இன்னும் வராததால் Debutant Composer and MovieDirectorன் படம் எங்கேயும் எப்போதும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அது பிழை.
முந்தைய பாகங்களுக்கு
I II III IV V VI
![]() |
Composer Sathya |
முந்தைய பாகங்களுக்கு
I II III IV V VI
ஒஸ்தி-திரைப்பார்வை
ட&#
09
ஒஸ்தி: இயக்குனர் தரணியின் இயக்கத்தில் குருவியின் சொதப்பலுக்கு பிறகு நீண்டகால இடைவெளிவிட்டு வரும் படம். மசாலா அக்சன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான தரணி இயக்கிய தில், தூள், கில்லி படங்கள் பெற்ற பாரிய வெற்றி அவரை முக்கிய இயக்குனராக நிலை நிறுத்தியிருந்தது. ஆனால் அதன்பின்னர் கடைசியாக வந்த ”குருவி” அவரது பெயரை கெடுக்கும்விதமா செம மொக்கையாக வந்திருந்தது. விஜயுடன் கில்லி கொடுத்த மெஹா ஹிட்டுக்கு பிறகு பலத்த எதிர்பார்ப்புடன் மீண்டும் இணைந்திருந்தனர் இருவரும் குருவிக்காக. ஆனால் எதிர்பார்ப்புக்கு தலைகீழாகவந்து, விஜயின் தொடர்ச்சியான புளொப்படங்களில் ஒன்றாக இருந்து விட்டிருந்தது.
அதன்பின் 3வருட இடைவெளிக்கு பிறகு வரும் படம்தான் இந்த ஒஸ்தி. குருவியில் வீழ்ந்த தனது மதிப்பை நிலைநிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்தது. அத்துடன் ”விண்ணை தாண்டி வருவாயா” ”வானம்” என்று தனது இறுதி இரண்டு வெற்றிகரமான, வரவேற்பு கிடைத்த படங்களில் நடித்திருந்த சிம்புவும் இணைவது படத்திற்கு பலமாக இருந்தது. மேலும் வெளிவந்திருந்த ஒஸ்தி படத்தின் Trailer இளவட்டங்களிடையேயும், அக்சன் மசாலா படவிரும்பிகளிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்பை கூட்டியிருந்தது.
அதன்பின் 3வருட இடைவெளிக்கு பிறகு வரும் படம்தான் இந்த ஒஸ்தி. குருவியில் வீழ்ந்த தனது மதிப்பை நிலைநிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்தது. அத்துடன் ”விண்ணை தாண்டி வருவாயா” ”வானம்” என்று தனது இறுதி இரண்டு வெற்றிகரமான, வரவேற்பு கிடைத்த படங்களில் நடித்திருந்த சிம்புவும் இணைவது படத்திற்கு பலமாக இருந்தது. மேலும் வெளிவந்திருந்த ஒஸ்தி படத்தின் Trailer இளவட்டங்களிடையேயும், அக்சன் மசாலா படவிரும்பிகளிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்பை கூட்டியிருந்தது.
எனினும் தனது ஆஸ்தான இசையமைப்பாளராகிய ”வித்யாசாகரை” இந்தப்படத்தில் முதன்முறையாக தரணி கழற்றிவிட்டு தமனை பயன்படுத்தியமை பலருக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் தற்காலத்தில் வேகமாக முன்னேறிவரும் இசையமைப்பாளர் தமன் பொறுப்பறிந்து போட்ட மெட்டுக்கள் அனைவரையும் குத்தாட்டம் போட வைந்திருந்தது. ஒரு பாடலும் மெலடி என்றில்லாமல் அனைத்தும் fastbeat பாடல்களாக வந்திருந்தமை இந்த அலபத்தின் சிறப்பாக இருந்தது.
மேலும் ஹிந்திபடமான ”தபாங்”ன் றீமெக்கான இந்த ஒஸ்தி படத்திற்கு ஒறிஜினல் படத்தில் வந்து பிரபலமானதைபோல் ஒரு டப்பாங்கூத்து பாடல் தேவைப்பட்டதாம். அதற்காக நீண்டடடடடடடடட காலத்திற்கு பிறகு பழம்பெரும் பாடகி LR.ஈஸ்வரி, Solar சாய், TR.ராஜேந்தருடன் சேர்ந்து ”கலாசலா கலசலா” என்று தொடங்கும் ITEM SONGஐ பாடியிருந்தார். இந்தப்பாடல் காட்சியை மேலும் பிரபலபடுத்தும் நோக்குடன் ஹிந்தி கவர்ச்சி நடிகை ”மல்லிகா செரவாத்” இந்தப்பாடலிற்கு மட்டும் ஆட அழைக்கப்பட்டார். அதனால் இந்தப்பாடலில் ”மைடியர் டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிட்றா. மல்லிகா மை டார்லிங் வாம்மா கலாய்க்கலாம்!” போன்ற வரிகள் பயன்படுத்தப்பட்டன. பாடலும் நல்ல ஹிட்டானது.
இந்தப்பாடல்கள் நன்றாக வந்திருந்ததை போல வரிகளும் அதிரடியாக அமர்க்களமாகவே அமைக்கப்பட்டிருந்தது. வாலியின் வரிகளில் வந்த ”கலாசலா”, ”தமிழ்நாட்டு Copதான்” யுகபாரதியின் வரிகளில் "நெடுவாலி” பாடல்களும் வரிகளிலும் அதிரடியை வெளிப்படுத்தியிருந்தது. மொத்தத்தில் படத்தின் எதிர்பார்ப்பை பாடல்கள் மேலும் அதிகரித்திருந்தன. அத்துடன் வித்தியாசாகரை விட்டுட்டு தனக்கு கொடுத்த நம்பிக்கையை தமன் பாடல்கள் மூலம் காப்பாற்றியிருந்தார்.
இப்படி நல்ல எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களை ஓரளவு திருப்தி செய்திருக்கிறார் இயக்குனர் தரணி. படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே படம் பயணிக்கபோகும் பாதையை நீங்கள் இலகுவில் ஊகித்துவிடக்கூடிய வழமையான பாணியிலான கதை இருப்பது ஒஸ்தியின் பலவீனமே. படம் றீமெக்காக இருப்பதால் (தபாங் நான் பாக்கல) கதையில் பெரிசா மாற்றத்தை எதிர்பாத்திருக்க முடியாதென்றாலும் எதாவது டுவிஸ்டுகளை வைச்சாவது நல்லவொரு வேகமான அக்சன் படமாக சிங்கம் மாதிரி கொடுத்திருக்கலாம். குருவி மாதிரியான ஒரு படத்துக்கு இது எவ்வளவோ பெட்டர்.
Trailerல பாத்த மாதிரியே சிம்பு பஞ்சுகளை அள்ளி விசிறுகிறார். சிம்புவின் ஓவர்பில்டப்புகள் பிடிக்காதவர்களுக்கு சரியான சலிப்புகளை இக்காட்சிகள் ஏற்படுத்தகூடும். மற்றப்படி பொலீஸ் கெட்ப்பில் நல்ல ஸ்மாட்டாக தெரிகிறார் ஆரவாரமாக எடுப்பாக தனது அக்சன்களை போடுகிறார். பாடல்களில் வழமைபோல உடலைவருத்தி லாவகமாக நடனமாடுகிறார். ”குருவி” படத்தில் வருவது போல், சிம்பு கட்டிடத்துக்கு கட்டிடம் பாயும் காட்சிகளை இதிலும் புகுத்தி சலிப்பூட்ட வைக்கிறார் தரணி. சிக்ஸ்பக் வைத்த காட்சி இருக்கு என்று சொன்னபடியா இறுதிக்காட்சியில் 6பக் என்று உணரமுடிகிறதே தவிர பெரிதாக சிம்புவிற்கு சிக்ஸ்பக் வந்ததாக காண முடியில்லை.
ஆனால் ரிச்சா இந்தப்படத்தில் சும்மா ஹீரோயின் இருக்கோணும் என்பதற்காக சேர்க்கப்பட்டவர் போலவே வந்து போகிறார். முக்கியமி்லாத நடிப்பு திறமையை காட்ட முடியாத காட்சிகள். ஒஸ்தி, மயக்கம்என்ன விற்கு முதல் வந்திருந்தால் ரிச்சாவிற்கு நடிக்கவே தெரியாது என்று கருத்து அனைவரிடமும் ஏற்பட்டிருக்ககூடும். இந்த படத்திலும் கொஞ்சம் தைரியமுள்ள பெண்ணாக காட்டப்படுவதாலோ என்னவே பெரும்பாலும் முறைச்சபடிதான் தெரிகிறார். (இல்லாட்டி சாதாரணமாவே டெரர் லுக்குதானோ தெரியேல?).
பெரிசா ஹீரோயினுக்குரிய அழகுமில்லை. ஏன் மினக்கெட்டு தெலுங்கில நடிச்சவவ இங்க கொண்டுவந்தாங்களோ? தமிழ்நாட்டில வடிவான பெண்கள் இல்லையா? புதுஆக்கள்தான் வேணுமெண்டா யாரையும் ஒண்ட தூக்கி போடலாம்தானே? ஒரு மசாலா அக்சன் படத்தில நல்ல கலர்புள்ளான ஹீரோயின எதிர்பார்த்தம் தரணி சார்.
சந்தானம் மயில்சாமி வையாபுரி தம்பிராமையா போன்றோர்தான் படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதில் முக்கியபங்கு. வழமைபோலவே சந்தானம் இந்த கூட்டத்தோடு சேர்ந்து கலாய்க்கிறார். டுமிலுதான் டுமிலுதான் பாடலில் சிம்பு ஆடினதுபோலவே ஆடுவதற்கு நாலு பேரை தனது கை காலை தூக்கச்சொல்லி ஆட வெளிக்கிட்டது காமெடியின் உச்சமாக இருந்தது. சிம்புவின் இறுதி 3படங்களிலும் கணேஷ்(இங்க என்ன சொல்லுது? ஜெசி ஜெசின்னு சொல்லுதா?) இருக்கிறமை குறிப்பிடவேண்டிய விடயம்.
![]() |
மல்லிகா, சோனுசூட் |
வில்லானாக வரும் சோனு சூட்டை நீங்கள் பல தமிழ்படத்தில் பாத்திருக்கலாம். ஹிந்தி ஒறிஜினல் தபாங்கிலயும் இவர்தான் வில்லனாம். நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு போன்ற தமிழ் படங்களில் தீவிரவாதியாக வந்தவர். இந்தபடத்திலும் நல்ல திடகாத்திரமாக வருகிறார். சிக்ஸ்பக் சிம்புவைவிட இவரின் கட்டுமஸ்தான உடற்கட்டு நல்ல ஒரு ஹீரோக்குரிய லுக்கை தருவதுடன் 6பக்கையும் இலகுவாக காட்டிவிடுகிறது.
மேலும் ஜித்தன் ரமேஷ், சரண்யா மோகன், நாசர், ரேவதி, நிழல்கள் ரவி என முக்கிய நடிக நடிகைகளும் இதில் தரணியால் உபயோகப்பட்டிருக்கின்றனர். ஹீரோவாக தொடர்ச்சியாக தோல்விப்படங்களையே கொடுத்த ரமேஷ் தனது தனிஹீரோ பாதையிலிருந்து விலத்தி குணச்சித்திர வேடங்களையும் இந்த படத்தின் பின் தாராளமாக எடுப்பார் போலதான் தெரிகிறது.
படத்தில் பாடல்கள் நன்றாக வந்ததைபோல அதை அழகாக, நல்ல அதிரடியாக, ஆட்டம், செட் மூலம் படமாக்கியிருக்கிறார் தரணி. இதற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் பங்கும் முக்கியமானது. ”தமிழ் நாட்டு copதான்” எடுக்கப்பட்ட காட்சியமைப்பும் ”நெடுவாலி” பாடலுக்கான சிம்புவின் ஆட்டமும். ”கலாசலா”வில் மல்லிகாசெரவாத்தின் குத்தாட்டமும் படத்தில் பாடல்களுக்கு மெருகூட்டும் பிளஸ் பாயிண்டுகள். ”வாடி வாடி Cute பெண்டாட்டி” பாடலுக்கு மட்டும் வெளிநாடு சென்று வந்திருக்கிறார்கள்.
தரணி குருவியில் விட்ட பெயரை நிலைநாட்ட இதில் சரியாக கஸ்டப்பட்டிருப்பது தெரிந்தாலும், படத்தை ஓரளவு நல்லாக தனது இயக்கும் திறனால் கொண்டு சென்றிருந்தாலும், நல்ல வித்தியாசமான கதை இல்லாத குறையினால் இது பலரிடையே தாக்கத்தையோ சூப்பர் படமென்ற ஒரு பிரமையையோ ”ஒஸ்தி” ஏற்படுத்தமாட்டாது.
மொத்தத்தில் ஒஸ்தி ”பரவாயில்லை & பாக்கலாம்” ரகமே.
ஒஸ்தி - அஸ்திவாரம் சரியில்லைங்கோ!
மயக்கம் என்ன (உணர்ச்சிப்பெருக்கு) - திரைப்பார்வை
ட&#
03
டிஸ்கி: முதலில் நேரம் கிடைக்காததால் மயக்கம் என்ன-திரைப்பார்வை எழுதுவதி்ல்லையென்றே நினைத்திருந்தாலும், நல்ல படத்தை பற்றி கொஞ்சமாவது சொல்லோணும் என்கிறதால நல்லா பிந்தியும் எனது பதிவையும் வரவு வைக்கிறேன்.
தனது முந்தைய படமான ஆயிரத்தில் ஒருவனில், தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றசெல்வராகனின் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் (முதலில் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது) காலம் தாழ்த்தி வந்த படம்தான் இந்த ”மயக்கம் என்ன”. தூள்ளுவதோ இளமை மூலம் திரைத்துறைக்கு செல்வராகவன் காலடி எடு்த்து வைத்திருந்தாலும் ”காதல் கொண்டேன்” மூலம்தான் இயக்குனராக உலகறியப்பட்டார்.
பின்னர் 7G Rainbow Colony, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று தொடராக வித்தியாசமான படங்களால் தனக்கான இடத்தை உறுதியாக பிடித்த இவர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர் என்று இலகுவாக கூறிவிடலாம். இவரின் படைப்புகளில் எனக்கு பிடித்ததும் இதுவரை (என்னைப்பாறுத்தவரை) தமிழ்சினிமாவை வேறுகோணத்தில் உலகசினிமாக்களுக்கு ஒப்பாக காட்டிய, ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அதகளப்படுத்திய ”ஆயிரத்தில் ஒருவன்”ஐதான் குறிப்பிடமுடியும்.
தனது முந்தைய படமான ஆயிரத்தில் ஒருவனில், தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றசெல்வராகனின் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் (முதலில் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது) காலம் தாழ்த்தி வந்த படம்தான் இந்த ”மயக்கம் என்ன”. தூள்ளுவதோ இளமை மூலம் திரைத்துறைக்கு செல்வராகவன் காலடி எடு்த்து வைத்திருந்தாலும் ”காதல் கொண்டேன்” மூலம்தான் இயக்குனராக உலகறியப்பட்டார்.
பின்னர் 7G Rainbow Colony, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று தொடராக வித்தியாசமான படங்களால் தனக்கான இடத்தை உறுதியாக பிடித்த இவர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர் என்று இலகுவாக கூறிவிடலாம். இவரின் படைப்புகளில் எனக்கு பிடித்ததும் இதுவரை (என்னைப்பாறுத்தவரை) தமிழ்சினிமாவை வேறுகோணத்தில் உலகசினிமாக்களுக்கு ஒப்பாக காட்டிய, ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அதகளப்படுத்திய ”ஆயிரத்தில் ஒருவன்”ஐதான் குறிப்பிடமுடியும்.
தீபாவளிக்கு வந்த இரண்டு திரைப்படமும் பொதுவான சினிமா ரசிகர்களிடைய பலத்த வரவேற்பை பெற்றிராத நிலையிலும், போதியளவு தியட்டர்களை பெறமுடியாத நிலையிலேயே தீபாவளிப்போட்டியிலிருந்து ”மயக்கம் என்ன” தானாக விலகிப்போயிருந்தது. பின்னர் தீபாவளிக்கு வெளியான படங்கள் தியட்டர்களிலிருந்து ஓரளவு தூக்கப்பட்ட நிலையில் November25அன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. செல்வராகவன் இயக்கம் என்பதுதான் படத்தின் பெரிய்யயயயய பிளஸ் பொயின்ற் என்பது மறுபேச்சில்லாத உண்மை. (தனுஷ் படத்தில் இருந்தாலும் கூட)
அதற்கு மேலதிகமாக இந்த படத்தின்பாடல்கள் முன்னமே வெளிவந்து அனைத்து தரப்பையும் நன்றாக திருப்திப்படுத்தியிருந்தது. ”ஓட ஓட தூரம் குறையல”, ”அடிடா அவள உதைடா அவள” பாடல்கள் இளைஞர்களையும் + டப்பாங்குத்து பாடல் விரும்புவோரையும் ”நான் சொன்னதும் மழை வந்துச்சா”, "பிறைதேடும் இரவிலே உயிரே” பாடல்கள் பெண்கள் + மெலடி ரசிகர்களையும் கவர்ந்து மயக்கம் என்னவை ஆகா ஓகோ என எதிர்பார்க்க வைத்திருந்தன.
செல்வராகவன் கதையாசிரியராக இருந்த ”துள்ளுவதோ இளமை” முதல் பின்னர் அவர் இயக்கத்தில் வந்த படங்களில் புதுப்பேட்டை வரை செல்வாவின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த யுவன்சங்கர்ராஜா ”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் விலகியதால் (செல்வாவுடன் ஏற்பட்ட ஏற்பட்ட பிரச்சனை காரணம் என்று அப்போது கூறப்பட்டது. உண்மை தெரியவில்லை. தெரிந்தால் யாராவது உறுதிப்படுத்துங்கள்) அந்தப்பட வாய்ப்பு அப்போது ஜீவி.பிரகாஸ்குமாருக்கு வந்தது.
அதில் ஜீவி.பிரகாஸ்குமார் தனது பின்னணி இசையில் பின்னிப்பெடலெடுத்திருந்தார். அந்த Theme Music வெகுவாக பாராட்டப்பட்டிருந்தது. பாடல்களும் நல்லா வந்திருந்தாலும் 3 பாடல்கள் மட்டுமே அந்த படத்தில் பயன்பட்டிருந்தது. அதன் பின் அப்படியே ”மயக்கம் என்ன”விலும் GV.PrakashKumarயையே அழைத்தார் செல்வா. அந்த நம்பிக்கையை பாடல் மூலம் 100க்கு 200% ஜீவீ.பிரகாஸ் திருப்திபடுத்தியிருக்கார் என்று சொல்லலாம். வழமையாக செல்வராகவன் படங்களில் பாடல்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சிறப்பாக அந்தப்படத்திற்குரிய Theme Music இருக்கும். மயக்கம் என்னவிலேயும் அதற்கு ஒரு குறையுமில்லாமல் GV.Prakash நல்லவொரு இசைக்கலவையை வழங்கியிருக்கிறார்.
செல்வராகவன் கதையாசிரியராக இருந்த ”துள்ளுவதோ இளமை” முதல் பின்னர் அவர் இயக்கத்தில் வந்த படங்களில் புதுப்பேட்டை வரை செல்வாவின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த யுவன்சங்கர்ராஜா ”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் விலகியதால் (செல்வாவுடன் ஏற்பட்ட ஏற்பட்ட பிரச்சனை காரணம் என்று அப்போது கூறப்பட்டது. உண்மை தெரியவில்லை. தெரிந்தால் யாராவது உறுதிப்படுத்துங்கள்) அந்தப்பட வாய்ப்பு அப்போது ஜீவி.பிரகாஸ்குமாருக்கு வந்தது.
![]() |
Rich, GV, Dhanush, Selva, Selva's Wife |
மயக்கம் என்ன எதிர்பார்ப்பை திருப்தி செய்ததா இல்லையா? என்ற கேள்விக்குமுன் வழமைபோல் அரைச்ச மாவையே அரைக்கும் இயக்குனர்கள் போலல்லாது வித்தியசமாக ஒரு யதார்த்தமான சினிமாவை தந்ததில் இந்தமுறையும் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம். தனது 5வது படத்தில் 3வது முறையாக இணையும் செல்வராகவன் பலரை ”மயக்கம் என்ன” மூலம் திருப்திப்படுத்தியிருந்தாலும் கூட மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதையால்; கலர்புள், வேகமாக நகரும் அக்சன் படவிரும்பிகளை இப்படம் திருப்திப்படுத்தவில்லை.அதற்காக ”மயக்கம் என்ன” சரியில்லாத படமி்லை. அவர்களின் ரசனைக்கு ஏற்ற படம் இது இல்லை. அவ்வளவும்தான்.
கதையின் கருவின் மூலம் படத்தை இதைவிட வேகமாக நகர்த்த முடியாதென்பது கண்கூடு. அத்துடன் படத்தை உயிரோட்டமாக தருவதில் படத்தின் காணப்பட்ட தொய்வுநிலை தவிர்க்க முடியாததொன்றாகியிருக்கலாம். அத்துடன் முதல்பாதியில் பல காட்சிகளில் Background score தவிர்க்கப்ட்டிருந்தது. படத்தில் ஒரு Natural flowஏற்படுத்த இது கையாளப்பட்டிருந்தாலும் பலருக்கு இது படம் சரியான இழுவை போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்ககூடும்.
இந்தப்படத்தில் தனுஷ், குணச்சித்திர நடிகர் ரவிப்பிரகாஸ் தவிர மிச்ச அனைவரும் பெரும்பாலும் புதுமுக நடிகர்கள்தான். தனுஷ் நடிப்பில் அசத்தல்+கலக்கல். படத்தில் பாத்திரமாகவே மாறி வாழ்ந்திருந்தார். முதல் தமிழ்படத்திலேயே நடிகை ரிச்சாவிடம் நல்ல முதிர்ச்சி. படத்தில் துணிச்சலான பெண்ணாக வருவதால் எப்பவும் சற்று முறைச்சபடியே நன்றாக நடித்திருந்தார். படத்தின் 2வது பாதியில்தான் ரிச்சாவின் நடிப்பு பளிச்சிடுகிறது. ரவிப்பிரகாஸ்வழமைபோல இந்தப்படத்திலும் HiFiயாக வந்து பலரது எரிச்சலை தனது பாத்திரம்மூலமாக பெற்றுவிடுகிறார்.
இந்தப்படத்தில் ஆரம்பத்தில் இடம்பெறும் ஹீரோயினின் காதல் தொடர்பான முடிவுகள் பலருக்கு (காதல் செய்யும் பெரும்பாலானோருக்கு) பிடிக்காமலும், ”எமது கலாச்சாரத்தில இப்பிடியா காட்டுவது கேவலம்” என்று சொல்வோரும் தற்காலத்தில் இப்படி இடம்பெற்ற எத்தனை நிகழ்வுகளை பார்க்கவில்லையோ? அல்லது உண்மையை படமா எடுத்தா ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லையா? என்றுதான் கேட்க தோன்றுகிறது. என்னதான் முதலில் உண்மைகள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் வந்தாலும் பின்னர் அதேபோல் கணவன்-மனைவி உறவின் சிறப்பை வெளிச்சம்போட்டு காட்டி பலரின் கைதட்டல்களை பெற்றுள்ளார் செல்வா.
”என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி.
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி” பிறைதேடும் இரவிலே பாடலில் வரும் இந்த வரிகள் இதற்கு சான்று பகர்கின்றது.
படத்தில் வரும் ”காதல் என் காதல் அது கண்ணீரில” பாடல் படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாமல் வேண்டுமென்று புகுத்தப்பட்ட இடைச்செருகலாக வருகிறது. இந்தப்பாடல் "Why This Kolaveri" பாடல் பாணியில் முதலே வந்த fast beat காதல்தோல்வி பாடலாகும். "Why This Kolaveri"யைவிட இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்துடன் ஹாரிஸ்ராகவேந்திரா பாடிய ”என்னென்ன செய்தும் இனி” பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை.
படம் மிகவும் மெதுவாக நகருவது போல தோன்றுவது படத்தின் பலவீனம்தான் என்றாலும் அனைவரும் பாக்கவேண்டிய உணர்ச்சி ததும்பும் நல்ல படம்தான் இந்த ”மயக்கம் என்ன”. தொடர்ந்தும் வித்தியசமான படங்களை தரும் செல்வராகவனுக்கு பாராட்டுக்களும் பொட்டலத்தின் கைதட்டல்களும். மயக்கம் என்ன - உணர்ச்சிப்பெருக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)