தினகரன் பத்திரிகையால் சுடப்பட்ட எனது பதிவு!


போன வாரம் எனது தளத்தில் "உலகத்தரத்தில் தமிழர்கள் - NetBall வீராங்கனை தர்ஜினியுடன் நேர்காணல்" எனும் தலைப்பில் பிரசுரித்த பதிவொன்று (பேட்டியொன்று) அப்படியே அச்சொட்டாக களவாடப்பட்டு, ஒரு அறிவறுத்தலும் எனக்கு தரப்படாது நேற்று 2011 Augus 11ல் ”தினகரன்” பத்திரிகையில் ஒரு பகுதி பிரசுரிக்கப்பட்டிருந்தது.  (அடுத்த பகுதி எப்போதோ தெரியவில்லை. தொடரும் என்று போடப்படிருந்தது). உண்மையில் அந்த பதிவை, தர்ஜினி என்னும் திறமை மிக்க தமிழ் வீராங்கனையை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பதிந்திருந்தேன். உண்மையில் அதை மீள தினகரன் பத்திரிகையில் பிரசுரித்தமை நல்ல ஒரு விடயம்தான்.

தினகரன் பத்திரிகையில் மீள் பிரசுரமாக்கப்பட்ட எனது பதிவு! படத்தின்  இடதுகை கீழ் மூலையில் ”View Full Image” பகுதியை கிளிக்கி பெரிதாக்கி பாருங்கள். புதிதாக தோன்றும் சிறிய Windowஐ வலது மேல் மூலையில் "X" கிளிக்கியோ இல்லது scroll செய்து எனது தளத்தை மெதுவாக press செய்தோ பழைய viewற்கு வாருங்கள்.


எனினும் அந்த பதிவை கஸ்டப்பட்டு இட்ட உரிமையாளரான எனக்கு ஒரு அறிவித்தல் கூட தராமல், நன்றி என்று கூட போடாமல் தாங்களே எடுத்தது போல் போடுவது ஊடகதர்மத்திற்கு உகந்ததோ என்று எனக்கு தெரியவில்லை. உண்மையில் பல பதிவுகளை பதிவர்களாகிய நாங்கள் கஸ்டப்பட்டு போடும்போது, அவர்களிற்குரிய உரிய கௌரவம் தராது அப்படியே கொப்பி செய்து போடுவது எம்மை வருத்தத்திற்குள்ளாகும் செயல். நாங்கள் இதற்காக பொருளா பண்டமா கேட்கிறோம்? ஒரு மூலையிலாவது நன்றி என்றாவது எங்கள் பெயரையும் போடலாம்தானே! சரி அவ்வாறு கூட வேண்டாம் போட முதல் ஒரு வார்த்தையாவது e-mail மூலமாக சொல்லலாம்தானே! பத்திரிகை நண்பர்களே இனியாவது இதை கொஞ்சம் கவனியுங்கள்.
எனது அசல் ஆக்கம்  
http://vidivu-carthi.blogspot.com/2011/08/netball.html

தினகரன் பத்திரிகையால் சுடப்பட்டு வந்தது

பிற்சேர்க்கை: நேற்று இந்த தகவல் அறிந்ததும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு அவர்களின் பிழையை தெரிவித்திருந்தேன்.  அதற்கு அவர்களின் பதில் வரவில்லை. ஆனால் இன்றைய பதிப்பில் (http://www.thinakaran.lk/jaffna/?id=06&tday=2011/08/16) மீதி பேட்டி வந்திருந்தது. அதில் நன்றி பொட்டலம் வலைப்பூ எனப்போடப்பட்டிருந்தது! இறுதியிலாவது அதன் மூலத்தை போட்டமை பராட்டுதற்குரியது. நன்றிகள்



20 comments:

ஆமினா சொன்னது…

வருத்தத்திற்குரிய விசயம் தான்

விளக்கம் கேட்டு அவர்களை தொடர்பு கொண்டீர்களா?

ப.கந்தசாமி சொன்னது…

வருத்தமான செய்திதான். இருந்தாலும் ஒரு பதிவு போட உதவியது அல்லவா?

இதுதான் "இடுக்கண் வருங்கால் நகுக" என்று வள்ளுவர் சொன்னதின் பொருள்.

Admin சொன்னது…

அரசுக்கு சொந்தமான பத்திரிகை ஒன்றே திருடுகின்றது என்றால்... கவலையான செய்திதான்..

இறுதியில் பிழை அறிந்து நன்றி சொன்னார்களே.. அது கொஞ்சம் பரவாயில்லை.

இருந்தும், மின்னஞ்சலில் நீங்கள் தெரிவிக்காமல் இருந்திருந்தால், அவர்களது சொந்த ஆக்கம் போல வெளிவந்திருக்கும்..

என்கும் திருட்டு. எதிலும் திருட்டு ((((((((

நிரூபன் சொன்னது…

பாஸ் இவர்கள் திருந்தமாட்டார்கள்., இதனால் தான் நானும் பதிவிற்கு நடுவே, என் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்வோர் சிரம்மப்படும் வண்ணம் பல கோடிங்குகளைச் சேர்த்துள்ளேன்,

மனவருத்தம் தரும் விடயம் பாஸ்.

நிகழ்வுகள் சொன்னது…

நோகாம நொங்கு குடிக்கிற ஆக்கள் இவர்கள்...

Yoga.s.FR சொன்னது…

காப்பி பேஸ்ட் செய்யாதிருக்க பல வழிகள் இருக்கின்றனவே?நிரூபனைக் கேட்டு தெரிந்து கொள்ளலாமே?

ARV Loshan சொன்னது…

என்ன கொடுமை இது?
ஆனால் இது எனக்கென்றால் ஆச்சரியமே இல்லை கார்த்தி..
நன்றி இணையம் என்று போடும் பத்திரிகை உலகம் தானே?

இன்றாவது போட்டார்களே எனத் திருப்தி கொள்ளுங்கள்..

உங்களால் அந்த வீராங்கனை தினகரன் பத்திரிகையிலும் வந்திட்டார்...

// நிகழ்வுகள் கூறியது...
நோகாம நொங்கு குடிக்கிற ஆக்கள் இவர்கள்...
//

hahaha true

கார்த்தி சொன்னது…

நண்பர்களே அனைவருக்கும் தனித்தனியே பிறகு பதில் கூறுகிறேன். ஆனால் இவர்கள் copy பண்ணியதில் ஒரு பிழையும் இல்லை. என்னிடம் கேட்டிருக்கவும் தேவையில்லை. ஏனென்றால் அந்த உலகப்புகழ் வீராங்கனையின் புகழ் அனைவருக்கும் போய் சேரவேண்டும். அதுதான் முக்கியம். ஆனால் அவர்கள் முதல் பதிவிலேயே நன்றி இணையம் என்றாவது சொல்லியிருக்கலாம். பரவாயில்லை இன்றாவது உணர்ந்திருக்கிறார்களே நன்றிகள் பல!

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

இதே பிரச்சினை எனக்கும் ஒரு சஞ்சிகையால் ஏற்பட்டுள்ளது கார்த்தி, அதை நான் கேட்க போய் பட்ட பாடு இலங்கை பதிவர்கள் பலருக்கு தெரியும்.

பதிவர்களது ஆக்கங்களை திருடி பயன்படுத்தும் பல ஊடகங்கள் பதிவர்களை கண்டு கொள்வதில்லை என்பது வருந்தத்தக்கதே...

கவி அழகன் சொன்னது…

பத்திரிகையில் வானொலி தொலைக்காட்ச்சி நிகழ்வுகள் சமந்தமாக வாசகர் கடிதங்கள் ஆக்கங்கள் விமர்சனங்கள் போடுகிறார்கள் ஆனால் வானொலி தொலைக்கட்ச்சியில் பத்திரிகை சமந்தமான விமர்சனம் போடுவதில்லை போட்டால் தான் பத்திரிகை உலகம் திருந்தும்

அன்புடன் நான் சொன்னது…

அடுத்தவரின் உழைப்பை திருடுவது கண்டிக்கதக்கது.... கடைசியிலாவது நன்றி போட்டார்களே!

Thameez சொன்னது…

ஆணவம். வேறு என்னவாக இருக்கும்? என்ன தான் கேசு போடுங்க இவங்க மேல சின்ன ஆளு தானே கேட்கவா போறான் அப்படின்னு செய்றது இவனுங்க இன்னும் விட்ட பாடில்லை. எனக்கு என்னவா சட்ட ரீதியாக எதாவது செய்ய முடியுமா? அப்படின்னு உங்கள்ளுக்கு தெரிஞ்ச வக்கீலுக்கு 'சும்மா' கேட்டு வைங்க.

Unknown சொன்னது…

பத்திரிகைகள் இப்போது தங்கள் பக்கத்தினை நிரப்பிக் கொள்ளுவதற்கு.. பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை, வலைப்பதிவுகளில் இருந்து சுடுகிறன..
சுடுவதற்கு முன்னம் சுடப்பட்ட மூலத்தினை குறிப்பிட்டால்.. பதிவர்கள் மிகவும் சந்தோசமடைவார்களே...

பெயரில்லா சொன்னது…

உங்கள் அணுகுமுறை மிகத் தவறானது. குருவியிடம் 10 பைசா கடன் வாங்கிய மகாராஜா கதைதான் தினகரனுடையது.

இந்த வலைப்பூவைப் பார்த்து அந்த குறிப்பிட்ட உதவி ஆசிரியர் எழுதியது தினகரன் ஆசிரியருக்கு / நிர்வாகத்தினருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் உங்கள் ஆதங்கத்தை நீங்கள் குறிப்பிடதும் அவர்கள் தவறை திருத்திக் கொண்டார்கள் அல்லவா... வேறு என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள்?

உங்களைப் போன்றவர்கள் காலமெல்லாம் தினகரன் போன்ற பிரபல பத்திரிகைகளை காப்பி பேஸ்ட் செய்துதானே பிழைப்பை ஓட்டுகிறீர்கள்?

தினகரன் பெயரை வைத்து இந்த இரு தினங்களும் உங்களை பிரபலப்படுத்திக் கொண்டீர்களே தவிர, உங்களால் அவர்களுக்கு பைசா பிரயோசனமில்லை. நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு பெரிய பத்திரிகை இப்படி சின்னத்தனமான வேலையைச் செய்து, சின்னத்தனமான மனிதர்களிடம் அசிங்கப்பட்டிருக்க வேண்டாம்.

தர்ஷன் சொன்னது…

அந்த வீராங்கணையைப் பற்றி வெளீயுலகு அறிய வேண்டும் என்ற உங்கள் எண்ணம் ஈடேறியிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால் கண்டிப்பாக உங்கள் பெயரையும் வலைப்பதிவையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
என்னுடைய ஒரு பதிவும் ஒரு சஞ்சிகையில் வெளியானது.நாம கண்டுக்கவே இல்லையே. பவனின் போட்டோ பதிவுகளை மெட்ரோ நீயூஸில் பார்த்திருக்கிறேன். அவரது அனுமதி பெற்றார்களா? தெரியவில்லை.

Mathuran சொன்னது…

எவ்வளவு சொல்லியும் இவர்களை திருத்த முடியாது கார்த்தி..

Mathuran சொன்னது…

அந்த அனோனியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. நான் நினைக்கிறேன் அவரும் இதுபோன்ற திருட்டு கூட்டத்தை சேர்ந்தவர்தான் என்று.

அவர்கள் உங்கள் பதிவை பிரசுரித்தது தவறில்லைத்தான். ஆனால் அதை கடினப்பட்டு எழுதிய உங்களை ஆரம்பத்திலேயே அடையாளப்படுத்த தவறியது தப்பு

Unknown சொன்னது…

இறுதியில் பெயர் போட்டது மகிழ்ச்சி..
மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள் பாஸ்!

Kiruthigan சொன்னது…

mmm... உங்களுக்காவது இறுதியில் வலைப்பூவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்...!
நான் ஓர் இணையத்துக்காக எடுத்த இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணியிலிருக்கும் நண்பன் வாகீசனது பேட்டியை இவர்கள் சுட்டதை அவனே சொல்லி தான் அறிந்தேன். அங்கு யாருக்கும் நன்றி கூட தெரிவிக்கவில்லை.
தினகரன் வாழ்க வளமுடன்.

மாலதி சொன்னது…

வருத்தத்திற்குரிய விசயம் தான்

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்