வந்தான் வென்றான் (கவிண்டான் விழுந்தான்) - திரைப்பார்வை
என்னைபொறுத்தவரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிச்சயமாக சொதப்பாது என்று கணிக்கப்பட்ட படம்தான் இந்த ”வந்தான் வென்றான்”. அதற்கு முக்கிய காரணமாக இருப்பார் என கணிக்கப்பட்டவர் படத்தின் இயக்குனர் ”கண்ணன்”தான். இயக்குனர் மணிரத்தினத்தின் சிஷ்யப்பிள்ளையான இவர் தனது முதல் படமாக கொடுத்த ”ஜெயம் கொண்டான்” வர்த்தகரீதியாக ஹிட் இல்லாவிடினும் பல மக்களின் பாராட்டைப்பெற்றிருந்தது. அதற்கு பின் இவர் "கண்டேன் காதலை" எனும் Re-Make படத்தை இயக்கினார். இந்தப்படம் வர்த்தகரீதியில் நல்ல வெற்றியை பெற்றது. இவர் இரண்டு படங்களை கொடுத்திருந்தாலும் ”வந்தான் வென்றான்” படத்தின் எதிர்பார்ப்பு ”ஜெயம் கொண்டான்” படத்தின்மூலமாக எனக்கு அதிகரித்திருந்தது.
இயக்குனரை தவிரவும் அண்மைக்காலத்தில் மிகப்பிரகாசமான தமிழ் சினிமாவின் நாயகனாக மாறிவரும் ஜீவா [கோ படத்திற்கு பின் இவர் சங்கரின் நண்பன், கௌதமின் நீதானே என் பொன் வசந்தம் என்று இப்பவே எதிர்பார்ப்புள்ள படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது], ஆடுகளத்தின் பின் நாயகி தப்சி, ஈரத்திற்கு பின் மீண்டும் மாறுபட்ட பாத்திரத்தில் நந்தா, கலாய்க்க சந்தானம் என்று நடிகர்கள் ஆளுமையுள்ளவர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
ஜீவா கண்ணன் தப்சி |
ஆனால் வெளிவருவதற்கு முன்னதாக போதியதாக இந்தப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு மக்களிடம் போய் சேரவில்லை. ஏன் பலருக்கு இந்தப்படம் நேற்றுதான் (2011-09-16) திரையிடப்படுகின்றதென்பது கூட தெரிந்திருக்கவில்லை. எனினும் இந்தப்படம் தொடர்பான பேச்சு படம் வெளிவர முன் மக்களிடம் எழ முக்கிய காரணமாக இருந்தவர் படத்தின் இசையமைப்பாளர் ”தமன்”தான் என்பதில் மறுபேச்சுக்கே இடம் இல்லை.
இவரது திரையுலக பயணத்தின் முக்கிய மைல்கல் அல்பமாக இது இருந்துவிட்டது. ”காஞ்சனமாலா”, "அஞ்சனா”, ”திறந்தேன் திறந்தேன்” என மூன்று பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ரகமாக பாடல்கள் வெளிவந்து பலரை கொள்ளையடித்திருந்தது. எனவே படமும் எப்பிடியும் நல்லாயிருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தாலும் அதை அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டார் இயக்குனர். படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில் சந்தானம் "TRAILER பாத்திட்டு படம் நல்லாயிருக்குமெண்டு நினைச்சிருப்பியே. ஆனா அப்பிடி இல்லை” எண்டு வேறோர் விடயத்திற்கு சொல்வது இந்தப்படத்திற்கு 100% பொருந்திவிட்டது.
அப்பிடி இப்பிடி என்று சலிப்பூட்டும் காதல் காட்சிகளுடன் செல்லும் முதல்பாதி பின்னர் ஏனோதானோ என்று ஒரு யதார்த்தமே இன்றி காட்சிகள் ஒழுங்காக பின்னப்படாது சென்று ஏதோ முடிகின்றது. படத்தில் பாடல்களையும் சந்தானத்தின் நகைச்சுவையையும் தவிர சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. நிழல்கள்ரவி, மனோபாலா, ரகுமான் என்று நல்ல நடிகர்களுக்கு சிறுபாத்திரங்களை மட்டும் வழங்கி படத்தில் அவர்களும் இருந்தார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குனர். படத்தில் தப்சி ஒரு வேஸ்ட்டு சொப்சி. சும்மா வெள்ளையடிச்சுவிட்ட உருவ பொம்மை மாதிரி வந்து போகிறார். நடிக்கவும் தெரியவில்லை அழகாகவும் இல்லை. சும்மா அவிச்ச றால் மாதிரி மட்டும் இருக்கிறார்.
நந்தா கொடுத்தவேலையை செய்கிறார் ஆனால் படத்தில் ஒழுங்கான கதையோ at least சுவரஸ்யமான திரைக்கதையோ இல்லாமையால் சும்மா வீணடிக்கப்பட்டுவிட்டார். ரௌத்திரத்திற்கு பிறகு ஜீவாவிற்கு இது மீண்டும் ஒரு சறுக்கலாக இருக்கும். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ”காஞ்சனமாலா” பாடல் காட்சி எடுக்கப்பட்டவிதம் அழகாக ரசிக்ககூடியதாக இருக்கிறது. முதல் பாடலான ”ஏஞ்ஜோ” பாடலில் இசையமைப்பாளர் ”தமன்” டரம்ஸ் வாத்தியத்துடன வருகிறார். Base Guitar உடன் பாடகர் அலாப் ராஜுவே வந்தார் என நினைக்கிறேன். யாரும் தெரிந்தால் உறுதிப்படுத்துங்கள்.
நந்தா கொடுத்தவேலையை செய்கிறார் ஆனால் படத்தில் ஒழுங்கான கதையோ at least சுவரஸ்யமான திரைக்கதையோ இல்லாமையால் சும்மா வீணடிக்கப்பட்டுவிட்டார். ரௌத்திரத்திற்கு பிறகு ஜீவாவிற்கு இது மீண்டும் ஒரு சறுக்கலாக இருக்கும். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ”காஞ்சனமாலா” பாடல் காட்சி எடுக்கப்பட்டவிதம் அழகாக ரசிக்ககூடியதாக இருக்கிறது. முதல் பாடலான ”ஏஞ்ஜோ” பாடலில் இசையமைப்பாளர் ”தமன்” டரம்ஸ் வாத்தியத்துடன வருகிறார். Base Guitar உடன் பாடகர் அலாப் ராஜுவே வந்தார் என நினைக்கிறேன். யாரும் தெரிந்தால் உறுதிப்படுத்துங்கள்.
”வந்தான் வென்றான்” எனது குறைந்தளவு எதிர்பார்ப்பை கூட திருப்தி செய்யவில்லை. நேரம் கிடைத்தால் சும்மா பார்க்கலாம் ரகம் படம் அவ்வளவும்தான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
▼
2011
(29)
- ▼ செப்டம்பர் (2)
21 comments:
என்ன ஓய்... காப்பி பேஸ்ட் பண்ணி பின்னூட்டம் போட முடியாதா... அநியாயமா இருக்கே...
தமிழ் சினிமா ஹீரோயின்கள் எப்போதுமே லூசுப்பெண்கள் தானே...
சார் இப்பிடி கொப்பி பண்ணேலாம போட்டே கனக்கத்த கொப்பி பண்ணிட்டாங்கா!! கொஞ்சமாவது அத தடுக்கதான் இப்பிடி!! ஹிஹிஹி
அருமையான விமர்சனம் .படம் தியேட்டரில் பார்ப்பதை இல்லை
நம்ம பக்கமும் வரலாமே
தப்சி பற்றிய உங்கள் வர்ணனை அபாரம்! :-)
நீங்க ரொம்ப நல்லவர் கார்த்தி!
ஹஹஹஹஹ! ஜீ சொன்னது போல தப்சி குறித்த கார்த்தியின் வர்ணனை அற்புதம்.
வந்தான் வென்றான் பயங்கர மொக்கையாக? நான் தப்பிச்சேன் சார்!
இனிய காலை வணக்கம் சார்,
உங்களோட பதிவும், உவன் அஷ்வினோட பதிவும்
புதுப் படங்கள் எப்போ வருதோ...அப்போ மட்டும் தான் வருமா?
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
படிச்சிட்டு வாரேன்.
சும்மா வெள்ளையடிச்சுவிட்ட உருவ பொம்மை மாதிரி வந்து போகிறார். நடிக்கவும் தெரியவில்லை அழகாகவும் இல்லை. சும்மா அவிச்ச றால் மாதிரி மட்டும் இருக்கிறார்.//
மைந்தன் சிவாவைச் சூடேற்றத் தானே இந்த வசனம்..
அவ்....................வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
விமர்சனம் சூப்பர் பாஸ்..
நமக்காகப் படம் பார்த்த வள்ளல் நீங்கள் வாழ்க.
achacho..so sad :(
அப்போ படம் வேஸ்ட் என்று சொல்லுங்க
நேற்று உங்க பேஸ்புக் ஸ்ரேட்டஸிலேயே முன்னோட்டதை படிக்க முடிந்தது :)
தப்சி வேஸ்ட்.... அப்படியா?
நேற்று திரையரங்கின் பக்கம் வரை சென்றுவிட்டு ஒரு அவசர வேலை காரணமாக திரும்பி வந்த படம் இது . விமர்சனம் பகிர்ந்தமைக்கு நன்றி
அப்ப பல பேரை படம் பார்க்க முன்னம் எச்சரிக்கை செய்துவிட்டீர்கள் இந்த பதிவின் மூலம் ))
ஆகா.. :)
நீங்க ரொம்பவே எதிர்பார்த்திருந்த பாடல் மட்டும் கைவிடேல்லைப் போல..
Philosophy Prabhakaran கூறியது...
//
என்ன ஓய்... காப்பி பேஸ்ட் பண்ணி பின்னூட்டம் போட முடியாதா... அநியாயமா இருக்கே...
//
அதே.. :/
தபசி பற்றி சொன்னது, சந்தானத்தின் பஞ்ச், ஜீவா, நந்தா பற்றி சொன்னது என்று நான் நினைத்தது எல்லாம் சொன்னால் நான் என்னத்தை அய்யா எழுதறது?
அது ஆலாப் ராசுவே தான் :)
சுருக்கமான நச் விமர்சனம்
வந்தேன் பார்த்தேன் சென்றுவிட்டேன் சிறந்த பட விமர்சனத்தை .
நன்றி சகோ பகிர்வுக்கு ............
நச்சென்ற நல்ல விமர்சனம். . . .
தப்சி சொதப்பல்... சொன்ன சில வசனங்கள் அனுபவித்து இரசிக்கக்குடியவை....
ஜீவா வந்தான் அனால் வென்றனா என்றால்??? இல்லை...
மீண்டும் வருவான் ஜெயிப்பான்...
சந்தானம் தன்னால் முடிந்தவரை படத்தை தூக்கி நிறுத்துகிறார்....
ஏதோ படம் பாத்து நொந்திருக்கீங்கண்ணு மட்டும் தெரியுது...
சரி சரி யாழில் புது தியட்டர் வருகுது தானே அதில நல்ல படம் மட்டும் தான் ஓடும் அப்ப பாப்பம்..
அட போங்கப்பா கொப்பி பண்றவன் விசயம் தெரிஞ்சவன் தான் எப்படியாச்சும் எடுக்கிறான்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
கருத்துரையிடுக