கவுட்டுப்போட்டா... நிமித்திப்போடு!!!
புதுமையாக, புத்திசாலித்தனமாக, அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக நடைமுறைசாத்தியமாக சிந்திக்க சிலரால்தான் முடிகிறது. அதனால்தான் அவர்களின் பெயர்கள் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுகிறது.
அப்படியான ஒரு வராலாற்றுச்சாதனை, உலகத்திலே யாரும் செய்திராத புதுமை அண்மையில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. இதில் புதுமை யாதெனில் இச்சாதனைக்கு சொந்தக்காரர்கள் மாணவர்களோ , லெக்சரர்களோ இல்லை! உங்களைப்போல என்னைப்போல சாதரணமானவர்களே.
கிழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும் இது எவ்வளவு பெரிய சாதனை என்று!
அண்மையில் இலங்கையை உலுக்கிய பலத்த மழைக்கு இலக்காகி பல்கலைக்கழக வளாகத்திலிருந்த மிகவும் பழைய பெரிய மரம் 14ம் திகதியளவில் பாறி வீழ்ந்த்து. இது ஏறத்தாழ 10பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்ககூடிய குறுக்கு வெட்டுமுக அடியை கொண்ட பெரிய மரம். விழுந்த இந்த மரத்தால் எந்தவித சேதமும் எவருக்கும் ஏற்படவில்லை. எனினும் பல்கலைக்கழக வளாக்தில் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை பலரும் விந்தையுடன் பார்த்து தங்களது கமராக்களால் படம்பிடித்து கொண்டனர்.
கிழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும் இது எவ்வளவு பெரிய சாதனை என்று!
கவுண்டதும் நிமிர்ந்ததும்
முன்னரும்
பின்னரும்
வெட்டிஅகற்றிய மரக்கிளைகள்
அவ்வாறு படமாக்கப்பட்ட மொறட்டுவயின் கொரில்லா
சில வானரக்கூட்டங்கள் வீழந்துகிடந்த மரத்தில் ஏறி நின்று போஸ் கொடுத்து பேஸ்புக்கில் படங்களை போட்டுக்கொண்டனர். அந்த தருணத்தில் நண்பர் ஒருவர் வீழ்ந்த மரத்தை என்ன செய்யலாம் என்று கேட்க இன்னோர் புத்திசாலி சிவில் என்ஜினியரிங் படிக்கும் நண்பர் சொன்னார் ”அப்படியே நிமிர்த்தி திருப்பி வளர்க்கலாம்”. பலரும் கிண்டலடிச்ச அந்த கதை இப்ப உண்மையாகிவிட்டது இப்போது.
மரத்தை வெட்டிஅகற்றும் பணியும் ஆரம்பமாகியது. மேல்பாகங்களை மட்டும் வெட்டி அகற்றிவிட்டு கீழே உள்ள பெரிய தண்டுப்பாகத்தை அப்படியே மீண்டும் நிமிர்த்தி வைத்துவிட்டார்கள். திரும்பி வளர்வதற்காக(????????).
நிர்மாணத்துறையில் எவரும் செய்யாத, நினைத்து பார்க்க முடியாத புதிய சாதனை இது. இந்த ஐடியாவை கொடுத்த அந்த புத்திசாலி யார் (மேற்பார்வையாளரோ அல்லது வெட்டிய பணியாளரோ) என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறோம். விபரம் கிடைத்தவுடன் உடனே அறிய தருகிறோம். நண்பர்களே அந்த மரத்துக்கு கீழே செல்பவர்கள் உங்களை இன்சுரன்ஸ் செய்துவிட்டு செல்லுங்கள்!
இந்த பதிவுக்கு ஐடியா தந்த முகுந்தனுக்கும் படங்கள் தந்துதவிய நந்தனுக்கும் நன்றிகள்.!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
5 comments:
நல்லைதான் கட்டிரிங்க பொட்டலம். வாழ்த்துக்கள்.
ஹி ஹி...
நானும் சிரிச்சிருப்பன் திருப்பி அதே மாதிரி வளர்க்கிறதெண்டா.... :)))
நல்லா இருக்கு.... :)))
அரிய முயற்சி ;-)
ம்.....நல்லாதான் இருக்கு
நன்றிகள் நண்பர்களே!!!
கருத்துரையிடுக