WorldCupCricket2011-Special

 உலகக்கிண்ண கிரிக்கெட் நேரத்தில் Pepsi நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒரே Conceptஇலான Advertisementகள், பிரபல கிரிக்கெட் வீரர்களின் தனித்துவமான ஆட்டநுணுக்கங்கள் or Actionகளை Imitate செய்து அமைக்கப்பட்டிருக்கிறது. இவை பலர் மத்தியிலும் அமோக வரவேற்பை  பெற்றுள்ளது.
இந்த Adல் எனக்கு ஞாபகமுள்ள வீரர்களும் அவர்களிற்குரிய Action பெயர்களும்
Dhoni - Helicopter Shot
Malinga - Slinging Bowling Action
Dilshan - Dillscoop
Kevin Peterson - Switch Hit
Virender Shewag - Uppercut shot
Harnbhajan Singh - Doosra 
கீழே உள்ள Videoல் அனைத்து Adகளும் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. பாருங்கள். உண்மையில் வித்தியாசமான சிந்தனைதான். 



இதில் HarnhajanSinghற்கு Doosraபந்துவீச்சுமுறை சொல்லியிருப்பது அதை அவர்தான் அறிமுகப்படுத்தியது போல் பலரையும் நினைக்க தூண்டியிருந்தது. ஆனால் தூஸ்ரா பாணியை உலக அரங்கில் அறிமுகப்படுத்தியவர் உண்மையில் பாக்கிஸ்தான் முன்னால்வீரர் "சக்லையின் முஸ்டாக்" ஆவார். அதேபோல் UpperCut shotம் சேவாக்கிற்கு முன்னரே பலவீரர்கள் அதே பாணியில் துடுப்பாடியுள்ளனர். 
 ----------------------------------------------------------------------------------
 Again Afridi giving Advices to Razzaq

Pakistan அணி தலைவர் சாஹிட் அப்றிடி ஒவ்வொரு பந்துவீச்சின் பின்பும் பந்துவீச்சாளர்களுக்கு Idea or Instructions வழங்க அவர்களுக்கு கிட்டே சென்று அடிக்கடி கதைப்பதை, பாகிஸ்தான் அணியின் முன்னால் அணித்தலைவர் WasimAkram கடுமையாக சாடியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் அந்த பந்துவீச்சாளர்களுக்கு வீணான Pressureஐ கொடுத்து அவர்களை குழப்பக் கூடியதென்றும் அத்துடன் அப்றிடியும்  10 முழு ஓவர்களையும் வீசவேண்டி இருப்பதால் அது அவருக்கு மேலதிக சக்தி இழப்பை ஏற்படுத்தி அவரால் ஒழுங்காக பந்துவீச முடியாது போய்விடும் என்றும் நகைச்சுவைபாணி கலந்து கடுமையாக கூறியுள்ளார்.   மேலும் தனக்கு bowling போடும்போது இப்பிடி யாரும் Instructions கூறுவது பிடிக்காமல் இருந்ததாகவும் தனக்கு, தான் என்ன செய்யவேண்டும் என்பது தெரியும் என்றும் கூறியுள்ளார்.
 ----------------------------------------------------------------------------------
 SanjayManjrekar மற்றும் NassierHussain

நெதர்லாந்து இங்கிலாந்து அணிகளிற்கிடையிலான போட்டியில் முதலில்  துடுப்பாடி நெதர்லாந்து அணியினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து 294எனும் நல்ல ஓட்டஎண்ணிக்கையை பெற்றது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து மட்டைவீசும் ஒரு சந்தர்ப்பத்தில் Commentators ஆக பழைய இந்திய வீரர் SanjayManjrekar மற்றும் பழைய இங்கிலாந்து வீரர் NassierHussain கடமையாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது இங்கிலாந்து மெதுமெதுவாக ஆரவாரமின்றி பொறுமையாகவும் பொறுப்பாகவும் ஓட்டங்களை சேர்த்துக்கொண்டிருந்தது. இங்கிலாந்து 2விக்கெட் இழப்பில் இருந்த அந்த நேரத்தில் SanjayManjerkar  சொன்னார் Dutch அணியினர் இன்னும் Attacking fielding setசெய்து 2விக்கெட்டுக்களை quick periodல் எடுப்பார்களெனின் அவர்கள் இந்த போட்டியில் வெற்றிபெற வாய்ப்புள்ளதென சொல்லிவிட்டார். பக்கத்தில் இருந்தவர் (NassierHussain) இங்கிலாந்துகாரர் ஆச்சே சும்மா இருப்பாரா? அவரும் கடுப்பாகி அது தென்னாபிரிக்கா இலங்கை போன்ற பந்துவீ்ச்சு, களத்தடுப்பு சிறப்பாக உள்ள அணிகளால்தான் மூடியும் இவர்களால் (நெதர்லாந்து) முடியாது என்று அவரின் மூகத்திலடித்து போல் கூறிவிட்டார். இது பெரிய சச்சரவாக இல்லாது அமைதியான கருத்தாடல் போல காணப்பட்டாலும்  Commentator இருவரும் சற்று மூறுகல்நிலையில் இருந்தது போல் அது எனக்கு பட்டது.
 ----------------------------------------------------------------------------------

 Ball pitching Outside the leg stump

கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும் பலர் இன்னும் சில அடிப்படையான போட்டிவிதிமுறுகள் கூட தெரியாமல் பார்ப்பது மட்டுமல்லாது மத்தியஸ்தரின் தீர்ப்புகளை தேவையில்லாமல் கேலி செய்து, விதிமுறைகள் தெரிந்தவர்கள் போல காட்டமுயன்று தங்களை தாங்களே மற்றவர்கள் முன் கேவலமாக்கி கொள்கின்றனர். பந்து Out side the leg stumpல் pitchபண்ணி எவ்வாறாக வந்து கால்காப்பை (Pad) தாக்கினாலும் அது ஆட்டமிழப்பாகாது. ஆனால் எம்மில் பலரோ விக்கெட்டுக்கு நேரா பந்துபோனது அவுட் குடுக்கேல எண்டு கத்திக்கொண்டு இருப்பார்கள். இது கூட தெரியாமல் போட்டிகளை பார்ப்பது கேவலம். தெரியாதவர்கள் இப்பவாவது தெரிந்து கொள்ளுங்கள்.
இதை Animationல் பார்க்க இங்கே கிளிக்குங்கள்!
 ----------------------------------------------------------------------------------
அடுத்தது இந்தமுறை உலககிண்ணத்தை வெல்லப்போவது ஆவுஸ்திரேலியா/ தென்னாபிரிக்கா/ பாகிஸ்தான் மூன்றில் ஒன்றுதான் இருந்து பாருங்கள். ஹிஹிஹி........

காதலர் தினம்- 2011


காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள்! உண்மைக்காதல் ஜெயிக்கும். பொறுத்திருங்கள்.
காதலர்தினத்துக்காக ஒரு சிலவரிகள்...


உனைக்கண்ட நாளிலிருந்து 
முழுப்போதைதான் எனக்கு
பிறகெதற்கு VODKA போத்தல்!
-------------------------------------------------------

 தொலைத்ததை தேடுகிறேன்
அவளிடம் மட்டும் - அது
விரும்பியவளிடம் இருந்துவிடவேண்டுமென
-------------------------------------------------------

  உன் தரிசனமும் ரகுமான் Albumபோலதான்
எப்போதென்பது புரியாத புதிர்
கிடைத்தால் கொண்டாட்டம்தான் 
-------------------------------------------------------

 உன் கண்ணை பார்த்தே
பலருக்கு இதயம் துடிக்கவில்லையாம்
உன் கண் என்ன GUNஆ? 

திரைதகவல் பெட்டகம்-III

இதன் முந்தய பதிப்புக்களுக்கு கீழே கிளிக்குங்கள்
இந்த பதிவு இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஸ் தொடர்பான சிறப்பு பதிவெனலாம். அவர் தொடர்பான, அவர் பயன்படுத்தும் பாடகர்கள் தொடர்பான தகவல்களை தர இப்பதிவு முயல்கிறது.

Aalaap Raju ஆலாப் ராஜு
நான் அண்மைக்காலத்தில் வியந்து அடிக்கடி, ஒரு நாளுக்கு சராசரியாக 10தடவைக்கு மேல் கேட்கும் பாடல் (சிலநாட்கள் 50தடவைக்கு மேலும் கேட்டிருக்கிறேன்) ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் எங்கேயும் காதல் படத்திற்காக வந்த ”எங்கேயும் காதல்” என்று ஆரம்பிக்கும் பாடல். காதல் வரிகள் சொட்டும், அலட்டலில்லாத அளவான, அற்புதமான மெலடியில் உள்ள இந்தப்பாடலை தனியே மிகவும் சத்தமாக Wooferல் கேட்கும் சுகமே ஒரு தனிசுகம். இந்த பாடல், கேட்கும் எல்லோரையும் வானத்தில் பறக்கும் உணர்வை தரும். காலையில் இப்பாடலை ஒரு தடவைகேட்டுவிட்டு உங்கள் காரியங்களை தொடக்குங்கள். அந்தநாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.

இதைவிட இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால் இதை பாடியவர் ஒரு புதுமுகம் ”ஆலாப் ராஜு (Aalaap Raju)”. ஒரு Bass Guitar வாத்தியக்காரர் இவர். "அய்யனார்" படத்தில் முதலில் பாடகராக அறிமுகமாகினபோதும் இந்த எங்கேயும் காதல் பாடலே இவருக்கு சிறப்பான அறிமுகத்தை வழங்கியிருக்கிறது எனகூறலாம். இந்த வாய்ப்புக்கு அடுத்ததாக ”கோ” படத்தில் ”என்னமோ ஏதோ” என தொடங்கும் பாடலை பாட வாய்ப்பளித்துள்ளார் ஹாரிஷ். மற்றைய இசையமைப்பாளர்களும் இவரை இனி துரத்துவார்கள் இல்லையாஎன பாருங்கள்.
இதை டைப்பும்போது கூட அதே பாடல்தான். ”பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட”
-----------------------------------------------------------------------

”கோ” படப்பாடல்கள் வந்து எல்லோர் மனதையும் கொள்ளயடித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இருபடப்பாடல்கள் குறுகிய காலஇடைவெளிகளில் வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். பலர் கோ படப்பாடல்களை பற்றி நன்றாக கிலாகித்தாலும் என்னை பொறுத்தவரை ”எங்கேயும் காதல்” பாடல்கள்தான் கோ பாடல்களை விட இருபடி முன்நிற்கின்றன. கோ படப்பாடல்களை முதலில் கேட்டபோதே அந்த திப்பு, ஹரிசரன் சேர்ந்து பாடும்பாடலான "Gala Gala காலா Gang" பாடல், சரோஜா பட ”தோஸ்துபடா தோஸ்து” பாடலின் அதே Beatஎன உடனேயே பிடித்துவிட்டேன். இதை உணர்ந்தவுடனேயே நண்பர்களுக்கு CHATல் வெளிப்படுத்தியிருந்தேன். (ஆனால் பாடல் வந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆவதால் பலர் இதைபற்றி  குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் இதுவரை நான் அப்படி ஒரிடமும் வாசிக்காதமையால் இதை இங்கே பதிகிறேன்).
Copy அடித்து உருவான கோ பட பாடல்
<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Ko.html?e">Listen to Ko Audio Songs at MusicMazaa.com</a></p>

ஆனால் அந்தப்பாடலே யுவன் சங்கர்ராஜா ஆங்கில பாடலொன்றிலிருந்து சுட்டதுதான் என்பது பலரும் அறிந்ததே. பொதுவாக ஹாரிஷின் பாடல்கள் பல ஆங்கில பாடல்களின் சுட்டவடிவம்தான். ஆனால் அதையே மெருகூட்டி அதைவிட சிறப்பாக தருவதில் இவருக்கு நிகர் இவர்தான். உண்மையில் இந்த Original பாடலை யுவன் காப்பி பண்ணியது ஹாரிஸிற்கு தெரிந்திருக்காது. சரோஜா பாடல்களை அவர் கேட்டிராமையால் இது மீண்டும் காப்பி பண்ணப்பட்டிருக்கிறது. முதலே கேட்டிருந்தால் நிச்சயம் மீண்டும் அந்தபாடலையே காப்பி பண்ணாது வேறொரு பாடலை FRESHஆக காப்பி பண்ணியிருப்பார்.
அந்த Original ஆங்கில பாடல் கீழே

-------------------------------------------------------------------------------------

எங்கேயும் காதல் படத்தில் நான் அதிகம் ரசித்த (மற்றவர்கள் வெறுத்த) ஒரு FastBeat பாடல் ”நங்கை நிலாவின் தங்கை” பாடல். (இந்தப்பாடல் Michael Jacksonனிடமிருந்து சுட்ட பாடல் என்கின்றனர் பலரும்). இந்தபாடலின் வரிகளை கேட்டால் நகைச்சுவையாக இருப்பதோடு பாடலின் துள்ளளிசைக்கு மேலும் பலம் சேர்க்கிறது இந்த வரிகள். இந்தப்பாடலை பாடகர் Western Styleல் அழகாக பாடியிருப்பார். உண்மையில் பாடகர் யார் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. பிறகுதான் அறிந்தேன் அவர்பெயர் Richard(றிச்சாட்). Googling செய்தபோது இன்னோர் அதிர்ச்சி அது வேற யாருமில்ல காதல் வைரஸ், யுகா, நாளை போன்றவற்றில் நடித்த பேபி சாலினியின் தம்பி றிச்சாட்தானாம் அவர். நம்பவே முடியவில்லையே!!!
---------------------------------------------------------------------------------------

Bombay ஜெயசிறி
ஹாரிஸ் ஜெயராஜின் ஆஸ்தான பாடகியாக மின்னலே திரையிலிருந்து இருந்து வந்த "Bombay ஜெயசிறி" Dhaam Dhoom படத்தில் ”சகியே” பாடலின்பின் நீண்டகாலம் காணமல் போயிருந்தார். அவரிற்கு பதில் ஜெயசிறியைபோல் கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கும் சுதா ரகுநாதனை வாரணம் ஆயிரத்தில் ”அனல் மேலே பனித்துளி” ஆதவனில் ”ஏதோ ஏதோ பனித்துளி” போன்ற பாடல்களுக்கு ஹாரிஸ் பயன்படுத்தியிருந்தார். ஆனால் கோ படத்தில் ”வெண்பனியே” பாடலுக்கு மீண்டும்  Bombay ஜெயசிறியை பயன்படுத்தியது மகிழ்வான விடயம். என்னை பொறுத்தவரை திரைப்பாடல்களுக்கு சுதா ரகுநாதனை காட்டிலும் பொருத்தமானவர் Bombay ஜெயசிறிதான். --------------------------------------------------------------------------------------

VijayPiragash
நான் திரைதகவல் பெட்டகம்-IIல் சொன்னதுபோல் பென்னிடயலின் வாய்ப்பொன்று விஜய்பிரகாஷால் தட்டிப்பறிக்கப்பட்டிருக்கிறது ஹாரிஷின் இசையிலேயே. கோ படத்தில் ”அக நக நக” பாடலில் பென்னி டயல்இல்லாது முதலாவது முறையாக ஹாரிஸின் இசையில் விஜய்பிரகாஷின் அறிமுகம் பென்னிடயலை பொறுத்தவரை ஒரு இடிதான். எதிர்வரும் காலத்திலும் பென்னிடயல் புறக்கணிக்கப்படலாம்.

 
மீண்டும் இன்னோர் பாகத்தில் சந்திப்போம்!

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்