பிரபலமாகாத நல்ல படங்கள்-I - சனிக்கிழமை சாயங்காலம் 5மணி

ஒவ்வொரு வருடமும் பெரிதாக ஆர்ப்பாட்டமில்லாமல், விளம்பரமில்லாம் வரும் படங்களில் நாலைந்து தரமான நல்ல படங்களாக இருப்பது வழமை. அப்படியான படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்படாமலே போய்விடுவது துரதிர்ஷ்டமே. அப்படியான பெரிதாக அறியப்படாத படங்களை பற்றி எனது பார்வையை சிறிதாக தருவதே இந்த தொடர் பதிவின் நோக்கமாகும். இதில் நான் பகிரப்போகும் படங்கள் கனக்க காலத்திற்கு முதல் வந்த படங்களாக இருக்கலாம். எனினும் நிறைய பேருக்கு போய் அந்த படங்களைப்பற்றிய தகவல்கள் போய் சேரவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த தொடர் பதிவை ஆரம்ப்பிக்கிறேன்.


பெரிதாக புறொமசன்கள் + ரசிகர்கள் மத்தியில் பெரிய்ய எதிர்பார்ப்புகளுடன் வரும் படங்கள் இப்போதெல்லாம் பெரும்பாலும் சொதப்பிவிடும் நிலையில் அறிமுகமேயில்லாத அறிமுக நடிக, நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் வரும் ஒரு சில படங்கள் எங்களை ஆகா ஓகோ போடச்சொல்லிவிடும். மனதில் லபக்கென்று பதிந்துவிடும். இப்படியான படங்களுக்கு முதலில் தியட்டரில் ஆட்களே இருக்காது. பின்னர் பார்த்தவர்களின் வாய் வழி தகவல்கள் மூலம் கவரப்பட்டு சனம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி சில நேரங்களில் அப்படம் நல்ல ஹிட் படமாக கூட மாறிவிடும். அப்படியான படங்களுக்கு உதாரணமாக மௌனகுரு, பசங்க, நாடோடிகள் போன்றனவற்றை குறிப்பிடலாம். ஆனால் பரிதாபமான விடயம் என்னவென்றால் இப்படியான சில படங்களளைப்பற்றிய கருத்துக்கள் மக்களுக்கு போய் சேரமுதல்லே தியட்டரிலிருந்து தூக்கப்பட்டு விடும். ஆரண்யகாண்டம், டூ, ஈரம் போன்ற படங்கள் இவற்றில் இரண்டாவது வகை.


இந்த தொடர் பதிவில் பெரும்பாலும் 2ம் வகைப்படங்கள் பற்றியே பேசப்படும். இப்படி 2010ன் இறுதியில்வந்த படம்தான் இந்த ”சனிக்கிழமை சாயங்காலம் 5மணி”. இப்பிடியொரு படம் வந்ததென்று எனக்கு படம் பாக்கும்வரை தெரியவே தெரியாது. ஒரு நண்பன் ”நல்ல படம் இரவில பாக்க இன்னும் நல்லா இருக்கும்” எண்டு  சொல்லி தந்தான். ஒரு 5 நிமிடம் கழிந்தபோதே விளங்கியது படம் மக்ஸிமமா போகப்போகுதெண்டு. கடந்த கிழமைகள் கடுமையான உடல் அலுப்பிலிருந்தபோதும் இரவு 10மணிக்கு தொடங்கிய படத்தை நிறுத்த மனமின்றி முழுவதும் பார்த்துவிட்டுதான் அன்று நித்திரைக்கு சென்றேன். 

படம் ஆரம்பிக்கும்போதே கொஞ்சம் வித்தியாசமாகதான் ஆரம்ப்பித்தது ஒரு செட்டில எடுத்த பாடலுடன் ஆரம்பித்தது படம். வழமையா படம் எப்பிடி எடுக்கப்பட்டது என்ற காட்சிகள் படம் முடிந்தாப்பிறகே போடுறது வழமை . இதில் இந்த முதல் பாடலுக்கிடையில் இடக்கிடை போட்டார்கள். அதோடு தங்களின் முதல் படைப்பான மதுரை TO தேனீ - வழி ஆண்டிப்பட்டி படத்தின் வெற்றிக்கு நன்றிகள் போட்டார்கள். (அந்தப்படம் வெற்றியோ வெற்றியில்லையோ எனக்கு தெரியாதுங்க). அந்த படத்தின் இயக்குனர் ரதிபாலா இதில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நாயக நாயகி சரத், மாலதியும் அறிமுக இயக்குனர் ரவிபாரதியும் சேர்ந்து உருவாக்கியிருந்தனர் இந்தப்படத்தை.


கிராமத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை திரில்லிங்கோ திரில்லிங். City life கதையில்தான் இப்படியான thrill கதைகள் தரமுடியும் என்ற நம்பிக்கையை தகர்த்திருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படத்தின் சுவாரஸ்யம் குறையாமா படத்தை smoothஆக கொண்டு செல்லும் இயக்குனரை தூக்கி கொண்டாடலாம். படத்தில் என்ன நடக்கின்றது ஊகிக்கவே முடியாது. படம் ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் கதிரை நுனியிலிருந்து பாக்ககூடிய ஒரு படம். படத்தின் இறுதி 10நிமிடங்களிலேயே முடிச்சுக்களை அவிழ்க்கின்றார் இயக்குனர். நான் இதுவரை பார்த்த திரில் படங்களில் இதற்கும் முக்கிய ஒர இடம் கிடைத்து விட்டது.


படத்தில் பெரும்பாலானோர் புதுமுகங்கள்தான். (சரத்தின் அம்மா தவிர்த்து) ஆனால் பொறுப்பறிந்து பின்னியிருக்கிறார்கள். அனைவரும் இயல்பாக நடித்திருப்பது படம் பார்க்கிறோம் என்ற ஒரு தோற்றப்பாட்டை இல்லாமல் செய்திருந்தது. முக்கியமாக ஆரம்பத்தில் வரும் அந்த பொலிஸ் நன்றாக சாதாரணமாக நடித்திருந்தார். வக்கீல் பொலிஸ் ஸ்டேசனுக்கு வந்து சரத்தை மீட்கும் காட்சி, பெண்ணின் வீட்டில் வந்து சண்டை பிடிக்கும் உறவினரின் காட்சி ஆகியன இந்தப்படத்தின் reality காட்சிகளின் முக்கியமானவை. இதில் எனக்கு சொதப்பியிருப்பது போல தோன்றுவது நாயகன் சரத்தான். இன்னும் perform பண்ணியிருந்திருக்கலாம். 

இப்பிடியொரு தரமான படத்தை எப்பிடி இவ்வளவுகாலம் மிஸ் பண்ணினேன்?  இதுதான் இப்பொழுது என்னில் எழும் கேள்வி. பாக்காதஆக்கள் கட்டாயம் பாருங்க சார். திரில் பட ரசிகரா உங்களுக்கும் நிச்சயம் இந்தப்படம் பிடிக்கும். அப்பிடி பிடிக்கேலனா சொல்லுங்க. நான் புளொக் எழுதுறதே விட்டுடுறன். :பி

மொத்தத்தில் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி = மணிப்படம்

6 comments:

எப்பூடி.. சொன்னது…

Feel good movie???

கார்த்தி சொன்னது…

Yes i would say Superb rather than good. Have you watched? not impressed????

எப்பூடி.. சொன்னது…

நல்ல படமென்றாலும் feel good movie தான் பாக்க பிடிக்கிறது; ஓகே இந்த வாரம் பாக்க முயற்ச்சிக்கிறன் !!!!

கார்த்தி சொன்னது…

ஓ நான் நினைச்சன் நல்ல படமா எண்டு பாத்திட்டு கேக்குறீங்க எண்டு. உங்களுக்கு பெரிசா பிடிக்கல எண்டு நினைச்சன்...

பெயரில்லா சொன்னது…

உங்கள் பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமென விரும்பினால் என் தளத்தில் இணைக்கலாம். மேலதிக தகவல்களுக்கு http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

dsfs சொன்னது…

நான் இந்த படத்தை இந்த வாரம் தான் இணையத்தில் எடுத்து பார்த்தேன். நல்ல திரில்லாகவே இருந்தது. கதாநாயகி எங்கே போனாள், யார் காரணம் என்று நம்மையும் ஒவ்வொருத்தராக தேட வைத்தது. நீங்கள் சொன்னது போல முதல் பத்து நிமிடம் தவிர போகப்போக சுவாரசியமான முடிச்சுகள். பார்த்து விட்டு தான் நினைத்தேன். இந்த படம் வந்து ஒன்றரை வருடமாகிவிட்டதே என்று.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்