முப்பொழுதும் உன் கற்பனைகள் - திரைப்பார்வை
முப்பொழுதும் உன் கற்பனைகள் - இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு இருந்த முக்கிய 3 காரணங்கள் 1.அமலாபால் 2.ஜீவி.பிரகாஸ்குமார் 3.விண்ணைத்தாண்டி வருவாயா, கோ படங்களை தயாரித்த கம்பனியின் படம். கணேஷ் விநாயக் என்ற இயக்குனரின் (இறுதியில் எல்ரெட் குமாரால் இயக்கி முடிக்கப்பட்டது ???) முதல்படம் என்பதால் அவருடைய பெயர் செல்லாக்காசகவே promotionகளில் இருந்தது. அது வழமைபோல எல்லா புதுமுகங்களுக்கும் இருப்பது தவிர்க்கமுடியாதது. Why this Kolaveri போன்ற ஒரு சில exceptional casesதான் புதுமுகங்களிலும் பலத்த எதிர்பார்பை நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
படத்தில் நாயகன் அதர்வாவுக்கு பொருந்திய stylishஆன modern கதாபாத்திரம். தனது முதல் படமான பானாகாத்தாடியிலேயே நல்ல பெயர் எடுத்திருந்தாலும் அவரது உடல்வாகுக்கு அந்த படத்தில் சேரிப்புற இளைஞனாக வந்திருந்தமை எனக்கு உறுத்தலாக இருந்தது. அந்த குறையை இந்த படத்தில் நீக்கி இருக்கிறார்கள். இவரது தமிழ் பேசும் பாணி கொஞ்சம் artificial போல ஒரு உணர்வை தருகிறது. அதர்வாவின் குரல் சாதாரணமானவர்களிலிருந்து வித்தியாசமானதுதான் ஆனால் பானா காத்தாடியில் அப்படி உணர்வு பெரிதாக ஏற்படவில்லை இதில் அது தெரிந்தது. வரும்படங்களில் இதைக்கவனத்தில் கொண்டால் நல்லா இருக்கும்.
அதர்வா இதுவரை நடித்த 2படங்களின் ஹீரோயின்களும் தமிழில் ஒரு கலக்கு கலக்குவார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ள நடிகைகள். சமந்தா தெலுங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பானா காத்தாடியிலேயே அதர்வாவின் நடிப்பும் அவர் தன்னகத்தே கொண்டிருக்கும் attractiveஆன lookம் எனக்கு நல்லா பிடித்திருந்தது. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்கு தேவைப்பட்ட இந்த இயல்புகளை சிறப்பாக அதர்வா வெளிக்கொணர்ந்திருக்கிறார். தமிழ்சினிமாவில் இவருக்கும் அப்பா முரளியை போல நல்லவொரு இடம் கிடைக்கப்போகும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

உண்மையாக இந்தப்படத்திற்கொரு பெரிய பலமென்றால் அது அமலா பால்தான். (பாலா போலா? என்ன இழவோ எழுத்தோட்டத்தில கூடி பால் எண்டுதான் போட்டாங்க சார்!) இந்தப்படம் பற்றிய பேச்சு இவா நடிக்கின்றா என்றதும்தான் பெரிதாக வர ஆரம்பித்திருந்தது. தற்காலத்தில் பல இளவட்டங்களின் கனவுக்கன்னியாக அமலா பால் ஆகிவிட்ட நிலையில் கைவசம் தொடர்ச்சியாக நிறைய படங்கள் + இளசுகளின் ஆதரவோடு இவர் காட்டில் இப்ப அடை மழைதான்.
கொஞ்சம் படங்களில் நடித்திருந்தாலும் அந்தக்கால அமலாவுக்கும் அப்போது நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோலதான் இப்போதைய அமலாவுக்கும். அமலா என்று பெயர் வைச்சிருந்தாலே இப்பிடிதானோ? (ஆனால் எனக்கு இன்னும் அப்பிடி என்னதான் மக்களுக்கு அமலாபாலில கிறுக்கு பிடிக்ககாரணம் என்று தெரியல. அமலா பால் முதலில் நடித்த விகடகவி, சிந்துசமவெளி படங்களை யாராவது பாத்திருந்தா இப்ப இப்பிடி இருப்பாங்களோ தெரியல). தெய்வதிருமகள், வேட்டை பிறகு அமலா நடித்த படம் வெளியாகியிருக்கிறது அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்கள். மற்றையது ”காதலில் சொதப்புவது எப்படி”
இயக்குனர் கணேஷ் விநாயக் தனது முதல் படத்தில் கஸ்டப்பட்டு நேர்த்தியா வேலை செய்திருப்பது தெரிகிறது. நல்லதொரு படத்தை தந்த திருப்தி இவருக்கும் நல்லதொரு படத்தை பார்த்த திருப்தி எங்களுக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் மூலம் பெரும்பாலும் கிடைத்திருப்பது உறுதிதான். அதற்காக படம் பக்கா டாப் மார்க் படமென்று சொல்வதற்கில்லை. படத்தில் 6பாடல்கள்தான் என்றாலும் குனிந்தால் நிமிர்ந்தால் பாட்டு என்று அடிக்கடி அள்ளி இறைத்திருப்பதுபோல் ஒரு உணர்வை படத்தில் காணமுடிந்தது. ஜீவி.பிராகாஸ் தனது நண்பர்தான் என்பதால சரியான கவனமெடுத்து இசையமைத்ததாக கூறியுள்ள இயக்குனர் அதுக்காக பாடல்கள் பலவற்றை சும்மா தேவையில்லாமல் புகுத்தியுள்ளது அப்படியே கண்கூடாக தெரிகிறது.
படத்தின் சில conceptகள் ஏற்கனவே பல தமிழ்படங்களில் வந்திருந்தாலும் அதில் புதினத்தை தனது பாணியில் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளமையால், முதலே இதமாதிரி படங்களை பார்த்தோம் என்ற உணர்வை ஏற்படாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். இப்படியான Action+Thriller படங்களில் Logic மீறல்கள் பார்ப்பது தேவையற்றதோடு அப்படியான தவறுகள் தவிர்க்கமுடியாதது என்றமையால் அவற்றை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவதே ரொம்ப நல்லது. Action சண்டைக்காட்சிகளை நல்ல தரமாக எடுத்திருந்தமை ரசிக்ககூடியதாக இருந்தது.
அமலாவுக்கு மைனாவின் பிறகு நல்ல ஒரு படத்தில் முழுவதுமாக ஹீரோவுக்கு இணையாக படத்தில் ஆளுமை செய்ய நல்லதொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. பாத்திரத்திற்கேற்றபடி இளமையாக கவர்ச்சியாக நடித்திருக்கிறார். உண்மையா படத்தில 2காமெடியன்கள் 1.சந்தானம் 2.படத்தில நடிக்காமலே TR.ராஜேந்தர். (படத்தில் அதர்வாவின் Favourite heroவாக TR. So இடைக்கிடை TRன் காட்சிகள் TVல ஒளிபரப்பாகும் சந்தர்ப்பங்கள் உண்டு) சந்தானம் இதில் Americaல இருந்து வந்த Officerமாதிரி Hi-Fi கெட்டப்பில் வருகிறார். அசத்தோ அசத்தென அசத்துகிறார். TR TVல வருற காட்சிக்கு தியெட்டரில் பலத்த கரகொசங்கள் சிரிப்புகள். நடிகர் ஜெயபிரகாசிற்கும் இதில் முக்கிய வேடம். பசங்க பட வெற்றியிலிருந்து குணச்சித்திர வேடங்கள் பல இவரிடமே செல்கின்றன. இப்போது வருகின்ற பலபடங்களில் இவரை பார்ப்பதை தவிர்க்க முடியாது.
படத்தில் பாட்டுகள் பல வீண்செருகல்கள்தான் இப்ப பாட்டுவரும் எண்டு சொன்னா நிச்சயம் கொஞ்ச நேரத்தில பாட்டு வந்திரும். ஜீவீ.பிரகாஸ்குமாரின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருந்தாலும் தெய்வதிருமகள், மயக்கம்என்னவில் கொடுத்த classics இதில் miss ஆகினமாதிரிதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் குறை சொல்வதற்கே இல்லை. பெரிதும் எதிர்பார்த்த ”கண்கள் நீயே” பாட்டை நல்லா touchingகா எடுத்திருந்தமை இயக்குனரின் திறமைக்கு சான்று. இந்த பாடலில் வரும் அந்த சின்ன தம்பியும் அழகாக நடித்திருந்தமை இன்னும் சிறப்பு.பின்னணி இசையில் இன்னும் செய்திருக்கலாம்.
படத்தில் பாடல்கள் படத்தின் வெயிட்டுக்கு கூடிவிட்டதென்று எண்ணியமையாலோ என்னவோ ”சொக்கு பொடி போட்டாலே” பாடலின் சில வரிகளை கத்தரித்து கொஞ்சம் குறைவான நேரத்தில் அந்த பாட்டை முடித்துவிட்டனர். அத்தோடு Production Companyக்கு விசுவாத்தை காட்ட ”கோ” VTV படங்களிலிருந்து காட்சிகள் சில படத்திலே காட்டப்பட்டிருந்தன. பாடல்கள் படமாக்கப்பட்டவிதமும் அழகாக இருந்தது.
GV.PrakashKumar |
அமலாவுக்கு மைனாவின் பிறகு நல்ல ஒரு படத்தில் முழுவதுமாக ஹீரோவுக்கு இணையாக படத்தில் ஆளுமை செய்ய நல்லதொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. பாத்திரத்திற்கேற்றபடி இளமையாக கவர்ச்சியாக நடித்திருக்கிறார். உண்மையா படத்தில 2காமெடியன்கள் 1.சந்தானம் 2.படத்தில நடிக்காமலே TR.ராஜேந்தர். (படத்தில் அதர்வாவின் Favourite heroவாக TR. So இடைக்கிடை TRன் காட்சிகள் TVல ஒளிபரப்பாகும் சந்தர்ப்பங்கள் உண்டு) சந்தானம் இதில் Americaல இருந்து வந்த Officerமாதிரி Hi-Fi கெட்டப்பில் வருகிறார். அசத்தோ அசத்தென அசத்துகிறார். TR TVல வருற காட்சிக்கு தியெட்டரில் பலத்த கரகொசங்கள் சிரிப்புகள். நடிகர் ஜெயபிரகாசிற்கும் இதில் முக்கிய வேடம். பசங்க பட வெற்றியிலிருந்து குணச்சித்திர வேடங்கள் பல இவரிடமே செல்கின்றன. இப்போது வருகின்ற பலபடங்களில் இவரை பார்ப்பதை தவிர்க்க முடியாது.
Jayaprakash |
படத்தில் பாடல்கள் படத்தின் வெயிட்டுக்கு கூடிவிட்டதென்று எண்ணியமையாலோ என்னவோ ”சொக்கு பொடி போட்டாலே” பாடலின் சில வரிகளை கத்தரித்து கொஞ்சம் குறைவான நேரத்தில் அந்த பாட்டை முடித்துவிட்டனர். அத்தோடு Production Companyக்கு விசுவாத்தை காட்ட ”கோ” VTV படங்களிலிருந்து காட்சிகள் சில படத்திலே காட்டப்பட்டிருந்தன. பாடல்கள் படமாக்கப்பட்டவிதமும் அழகாக இருந்தது.
ஒருசில குறைகள் பல பிளஸ் பாயிண்டுகள் என்று பார்ப்பவர்கள் நல்லவொரு படம்பார்த்தம் என்று சொல்லக்கூடிய படம்தான் முப்பொழுதும் உன் கற்பனைகள். அருமையான தமிழ் பெயரில் படத்தை பெயரிட்டமைக்கு உரியவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
5 comments:
நல்ல விரிவான விமர்சனம். நன்றி பாஸ் ...
அப்போ பார்க்கக் கிளம்பிட வேண்டியது தான் :-)
சிலர் விமர்சனம் என்கின்ற பெயரில் தங்கட கெட்டித்தனத்தை காட்ட பார்க்க கூடிய ஓகே ரக படங்களையும் அது நொள்ளை, இது நொள்ளை என்று நொட்டை பிடிக்கும் பொது; உங்களது போசிடிவே விமர்சானம் வரவேற்க்கத்தக்கது!!!
அமலா பால் வாழ்க, அவர் புகழ் ஓங்குக, அவர் 1000 படம் கண்ட அபூர்வ சிந்தாமணியாக வளம் வர அமலா பாலின் (பால் தான் போல் அல்ல) கடைநிலை ரசிகர் சார்பில் வாழ்த்துக்கள்.
சமந்தா - 'நீ தானே என் வசந்தம்' டிரெயிலர் பார்த்ததும் அட நம்ம பாடா காத்தாடி பொண்ணா இதுன்னு ஆச்சரியமா இருந்திச்சு; நல்லாவே நடிப்பில மச்சுவேட் ஆகிடிச்சு சமந்தா :p
கூகுளில் தட்டும் போதெல்லாம் மதலில் வந்து என்னை ப் படி என்று எறை கூவியது உங்கள் விமரிசனம்.
தமிழ் சினிமா பார்க்க முடியாத காரணத்தால்(வெளி மாநிலம்),பல நல்ல படங்களை தவற விட்டாயிற்று.
உங்கள் விமரிசனம் ஒரு வித்யாசமான பார்வையில் , தெளிவாக எழுதப் பட்டுள்ளது.
தமிழ் தட்டுக்கள் கிடைத்தால் பார்க்க வேண்டிய பட லிஸ்டில் சேர்த்துள்ளேன்.
நன்றி.
பிழைகளுக்கு மன்னிக்கவும். இன்னும் தேறவில்லை;-)
கருத்துரையிடுக