விட்டுச்சென்ற நாய்க்குட்டி-சுட்டது
ஏப&
01
எனது அண்ணன் நிருத்தியுடம் இருந்து சுட்ட 2வது கவிதை இது. அவரிடம் சுட்ட 1வது கவிதைக்கு இங்கே கிளிக்கவும்! அவரின் அனுமதியுடன் இங்கே மீள் பிரசுரிக்கிறேன். நாய்க்குட்டியை மனதில் வைத்தே இது எழுதப்பட்டுள்ளது. யாவும் முற்றிலும் கற்பனையே. யாருடைய நடைமுறை வாழ்க்கையுடன் (விண்ணைத்தாண்டி வருவாயா ???, அதே நேரம் அதே இடம்?) ஒத்துப்போனால் அது தற்செயலானதே!
அழகிய கொஞ்சல்கள், செல்ல விளையாட்டுக்கள்
அடுக்கிக்கொண்டே போகலாம்-அது கொஞ்சமல்ல
பசுமையாக இன்னும் கண் முன்னே....
பட்டத்து முடிசூடா பேரரசனுக்கு
பஞ்சுப்படுக்கையும், ஊட்டிவிட்ட சாப்பாடும்
அன்பு, பாசம் அள்ளி ருசித்தது கூட இன்னும் மறக்கவில்லை
இப்போ மட்டும் எல்லாம் கசந்து விட்டதாக்கும்????

தூரத்தே மீன் வாடை இழுத்துவிட்டதா?
கட்சித்தாவல் மசோதா சட்டசபையில் நிறைவேறியது
சட்ட சாட்சியாகிவிட்டது இப்போது
கனவில் கூட வலிக்குதடா ரணமாய்....
கவ்வி காவு கொண்டது சீவனயெல்லோ!!
ஊள்ளிருந்த நான் தெரிய நியாயமில்லைதான்-அதற்காக
உடனிருந்து செய்தது நியாயமென்றாகி விடாதுதானே....
உணர்ச்சிகளெதுவும் இல்லையென்றாகிய பின்
நாதியற்ற இந்த உடைகள் கனக்கிறது எனக்கு
அதனால்தான் என்னமோ இப்போதெல்லாம் நிர்வாணம்தான்
தனிமை இனிக்கிறது; அமைதி அழைக்கிறது
மனச்சமாதானங்களெல்லாம் சருகுகளாய் காற்றில் பறந்துவிட
கழித்து விடப்பட்ட பண்டமாய் ஓர் மூலையில்
மரங்கள் கூட என்னைப்பார்த்து இரத்தக்கண்ணீருடன்
பாலும் மீனும் ஊட்டியது உண்மை ஆனால்
பாற்கடல், சமுத்திரம் எதிர்பார்த்தது யார் தவறு?
ஏற்ற எஜமான் நான் அல்ல என்று புரிந்துவிட்டது போலும்
அதற்கு ஏதும் புரிந்ததோ இல்லையோ,
எனக்கு ஒன்று நன்றாக புரிந்துவிட்டது
இப்போதெல்லாம் நாய்கள் கூட ஒருநாள் நன்றி மறந்துவிடுகிறதென.......
பிற்குறிப்பு: மொறட்டுவை பல்கலைகழக தமிழ்மாணவர்களால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சங்கமம் சஞ்சிகையில் 2008ல் வெளியான ஆக்கம் இது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
3 comments:
//எனக்கு ஒன்று நன்றாக புரிந்துவிட்டது
இப்போதெல்லாம் நாய்கள் கூட ஒருநாள் நன்றி மறந்துவிடுகிறதென.......//
உண்மை. வாழ்த்துக்கள்
ம்...இந்த கவிதையை பாத்தேன்....அதன் அர்த்தங்கள் புரிகின்றன...ஆனாலும் அண்ணன் தொடர்பான சந்தேகங்கள் இன்னும் தொடர்கின்றன...ஆனாலும் அண்ணனின் உணர்வை புரிந்துகொண்டிருப்பார் தம்பி என நினைக்கின்றே
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கருத்துரையிடுக