என்ன ஆக்களப்பா? + திரையிசை தகவல்கள்

மிக நீண்ட இடைவேளையின் பின்னர் மீண்டும் ஒரு சிறிய Refresh எனது வலைப்பக்கத்திற்கு. நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டு இருந்ததை சொல்ல இன்றுதான் நேரம் கிடைக்கிறது.


கடந்த வாரங்களில் சந்து பொந்து எங்கும் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்ட, பேசப்பட்ட விடயம் எல்லோருக்கும் தெரிந்ததே. அது ஒரு கேவலங்கெட்ட விசயமாக இருந்தாலும் கூட அதையொட்டி நடந்த சம்பவங்கள் பல மோசமான எடுத்துக்காட்டுக்களை எம்மத்தியில் விதைத்து சென்றுவிட்டது.

ஒரு ஊடக நிறுவனம் எப்படியெல்லாம் நடக்க வேண்டுமோ அந்த விதிமுறைகளையெல்லாம் கடந்து , அதுவும் செய்தி அறிக்கையில் ஒரு விவரணப்பட(Documentary Film) பாணியில், ஒரு பலான படத்தை தந்து இருந்தார்கள் சண்குழுமம். இதற்குள் ஒவ்வோர் காட்சியையும் விளங்கப்படுத்துகிறார் , பின்னணியில் குரல் கொடுப்பவர். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்கூட காட்டமுடியாத கேவலமான காட்சியை பகிரங்கப்படுத்தியிருந்தனர். SUN TV NETWORKSற்கு ஏற்களவே பல சனல்கள் இருந்தாலும் புதுசா ”SUN ஜல்ஸா” எண்டு ஒரு சனலை தொடங்கி இதை மாதிரி அட்டு படங்களை தொடர்ச்சியாக ஓட்டலாம். நல்ல கிராக்கி இருக்கும் எதிர்காலத்தில். உண்டையை வெளிக்கொணர்கிறோம் என்று சொல்லி  இவர்கள் காட்டிய கூத்துக்கு தண்டனை இல்லையா? திரைப்படங்களுக்கு மட்டும்தான் தணிக்கைகளும் கத்தரிப்புகளுமா??
என்ன நடக்குதெண்டு கூட தெரியாமால் பார்த்த வட்டுக்கள் எத்தனை?


இவ்வாறான போலிச்சாமிகளுக்கு எதிர்ப்பானவர்களுக்கு இந்த செய்தி மிட்டாய் சாப்பிட்டமாதிரி. ஒவ்வொருவராக வாற போற (நல்லவர்களையும் ?) ஆக்களையெல்லாம் போட்டு தாக்கினார்கள். Facebook ல வேற Statusகள் Groupகள் என ஏராளம் ஏராளம். இவ்வாறான (ஆ)சாமிகளுக்கு நான் ஆதரவோ எதிர்ப்போ இல்லை. இவர்கள் எல்லோரும்  தாங்கள்தான் கடவுள் என்று சொன்னதும் இல்லை. எங்கள் வழியைதான் பின்பற்று என்று எனக்கு தெரிந்தவரை வற்புறுத்தியதும் இல்லை. அவ்வாறு இருக்க பிறகு எவ்வாறு அவர்களை மட்டும் குறை கூறுவது.

அவர் கூறிய வசனம் ஒன்று உங்களுக்காக.
”I am not here to prove I am God. I am here to prove YOU are God!”

ஏன் விஜயின் பல படங்களுக்கு நம்பி போய் ஏமாந்தது இல்லையா? இவ்வளவு காலமும் வாழ்க்கைக்கு அவசியமான விடயங்களை அவர்கள் சொல்லும் போது மெச்சிய, அவர்களின் வசனங்களை  பயன்படுத்திய உங்களுக்கு அவருடைய ஒரு கிளிப்பை பார்த்ததும் எல்லாம் பிழையாப் போச்சோ? உங்களுக்கு தேவையான விசயத்தை யாராவது கெட்டவர் சொன்னால் எடுத்துக்கொள்ளாமலா விடுவீர்கள்?  அது உங்களுக்கு உதவும் பட்சத்தில். எனக்கு தெரிந்தவரை அந்த குறிப்பிட்ட (ஆ)சாமி சொன்ன பல கருத்துக்கள் வாழ்க்கைக்கு அவசியமானவை. சொன்னவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அலச முற்படாதீர்கள். இத்தனைக்கும் நீங்கள் என்ன இராமர்களா?


அப்படியெனின் என்ஜினியர், டொக்கராவதற்கு எங்களுக்கு A/L படிப்பிக்கும் ஆசிரியர்கள் எல்லாம் அந்த துறைகளிலல்வா இருந்திருக்க வேண்டும்! வாழ்க்கையை சிறப்பாக, நிம்மதியாக வாழ யாரும் வழிகாட்டலாம். யாரெண்டு தேர்ந்தெடுப்பது, யாருடைய கொள்கையை கடைப்பிடிப்பது ஒவ்வொருவரை பொறுத்தது. இவைகளை விரும்பாதவர்கள்  மற்றவர்களை பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை, குறைகூற தேவையில்லை. புகைப்பிடித்தல் தீங்கு எண்டு மாணவர்களுக்கு படிப்பிக்கும் எத்தனை ஆசிரியர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் புகைப்பிடிப்பதில்லை? சும்மா எல்லாரும் கதைக்கிறாங்கள் என்பதற்காக ஒண்டும் தெரியாம ஒத்து ஊத கூடாது.

<----------------------------------------------------------------------------------------------------->

A.R.Rahman ன் இசையில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா அல்பத்தில் பாடகராக சிம்புவை A.R.Rahman பயன்படுத்துவார் என்று எண்ணியிருந்தேன் அது நடக்கவில்லை. சிம்புவிற்கு ஒருவிதத்திலும் சம்பந்தமில்லாத "காதல் வைரஸ்" திரைப்படத்தில் ”பைலாமோர் கண்ணாரே” பாடலை பாட வாய்ப்பளித்திருந்தார். ஆனால் ஏனொ இப்படத்தில் கொடுக்கவில்லை. 
இவ் அல்பத்தில் அடுத்த புதினம்  காதலர் தினத்தில் தான் அறிமுகப்படுத்திய தேவனிற்கு, நீண்ட கால(10ஆண்டு) இடைவெளியின் பின்னர் சுப்பாஹிட் பாடல் ”அன்பில் அவன்” பாடும் சந்தர்ப்பத்தை கொடுத்திருந்தார்.  


தமிழில் NEW படத்தின்பின் தனது இசையில் இரண்டாவது வாய்ப்பை பாடகர் விஜய் பிரகாசுக்கு ரகுமான் Hossanna பாடல் மூலமாக வழங்கினார். தமிழிற்கு பாடகராக விஜய் பிரகாசை அறிமுகப்படுத்தயவர் யார் தெரியுமா? இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. 2003ஆண்டு ரகசியமாய் படம் மூலம்.

 யுவன்சங்கர்ராஜாவின் இசையில் வெளிவந்த "பையா" படப்பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தாலும் இதே காலத்தில் வெளிவந்த "விண்ணைத்தாண்டி வருவாயா" பாடல்களால் இதன் மவுசு சற்று மங்கியே இருக்கிறது. எனினும் படம் வந்தபின் மக்களால் நிச்சயம் பேசப்படும்.

நாணயம் பட பாடல்களுக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருப்பினும் படத்தின் பின்னணி இசைக்கு சொந்தக்காரர் தமன். இப்படத்தில் வரும் ”காகாகாகக .....” பாடலை இசையமைப்பாளர் தேவிசிறிபிரசாத் இரண்டாவது தடவையாக வேறொரு இசையமைப்பாளரின் இசையில் பாடியுள்ளார்.இதற்கு முன் பத்ரி படத்தில் ரமண கோகுலாவின் இசையில் 3பாடல்களை பாடியமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை.....

Subankan சொன்னது…

Welcome back anna :)

Nice :)

Unknown சொன்னது…

Very Good article!

கன்கொன் || Kangon சொன்னது…

// அதுவும் செய்தி அறிக்கையில் ஒரு விவரணப்பட(Documentary Film) பாணியில் //

அப்படியானால் எங்கே சொல்லலாம் என்கிறீர்கள்?
மக்கள் யாரும் பார்க்காத நேரத்தில்?


//என்ன நடக்குதெண்டு கூட தெரியாமால் பார்த்த வட்டுக்கள் எத்தனை? //

இதையே நானும் கேட்கிறேன், திரைப்படங்களில் இதைவிட ஆபாசமான காட்சிகள் காட்டப்படவில்லையா?
எத்தனை ஆபாசமான பாடல்கள், எத்தனை ஆபாசமான காட்சியமைப்புக்கள் இத்தனையும் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பானவை தானே? அவற்றை நாங்கள் எதிர்க்காமல் இதை மட்டும் எதிர்ப்பது ஏன்?
அப்படியான பாடல்களை குழந்தைகள் பார்ப்பதில்லை என்று உத்தரவாதமளிக்க முடியுமா?

என்னுடைய கருத்து சன் செய்தது சரி என்பதல்ல, ஆனால் நாம் இதை மட்டும் தூக்கிப் பிடிப்பதைத்தான் தவறு என்கிறேன்.
இன்று சன் இதைச் செய்தமைக்காக எத்தனை மூர்க்கமாக எதிர்க்கும் நாம், இதற்கு முதல் ஏனைய ஆபாசக் குப்பைகளுக்கு இந்தளவுக்கு எதிர்த்திருக்கிறோமா?


//இவ்வாறான போலிச்சாமிகளுக்கு எதிர்ப்பானவர்களுக்கு இந்த செய்தி மிட்டாய் சாப்பிட்டமாதிரி.//

பிழையானவற்றை எதிர்ப்பதில் பிழையில்லையே?
அதற்கேன் மிட்டாய் சாப்பிட்ட மாதிரி என்ற ஓர் உவமானம்?


//Facebook ல வேற Statusகள் Groupகள் என ஏராளம் ஏராளம்//

இப்படியான போலிகளுக்கு ஆதரவாக ஏராளமான குழுக்கள் இருக்கும் போது எதிர்ப்புக்குழுக்களில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து.


//எங்கள் வழியைதான் பின்பற்று என்று எனக்கு தெரிந்தவரை வற்புறுத்தியதும் இல்லை. அவ்வாறு இருக்க பிறகு எவ்வாறு அவர்களை மட்டும் குறை கூறுவது. //

உங்கள் பக்கத்தில் ஒருவன் இன்னொருவரைக் கத்தியால் குத்தச் செல்கிறான், ஆனால் குற்றுப் படப் போவனுக்கு தான் குற்றுப் படப் போகிறோம் என்று தெரியாமல் அவனுடன் நட்பாகப் பழகுகிறான்... குற்றப்படப் போவபனை காப்பாற்ற முயற்சிப்பீர்களா?
இல்லை இருவரும் நட்பு ரீதியாகப் பழகுகிறார்களே அவன் விரும்பித்தானே அவனோடு பழகுகிறான் என்று விட்டுவிட்டுச் செல்வீர்களா?


//இவர்கள் எல்லோரும் தாங்கள்தான் கடவுள் என்று சொன்னதும் இல்லை.//

பிரம்மச்சரியம் தரித்திருக்கிறோம் என்றிருக்கிறார்கள் அனைவரும்.
பிரம்மச்சரியம் தரித்திருக்கிறோம் என்று வெளிப்படையாகச் சொல்லி அதன்மூலம் தாங்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று காட்டி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் உங்களை மனிதராகக் காட்டிக் கொண்டு ஆன்மிக சொற்பொழிவாளராக மாறுங்கள்.
ஏன் பிரம்மச்சரிய வேடம்?


//ஏன் விஜயின் பல படங்களுக்கு நம்பி போய் ஏமாந்தது இல்லையா? //

விஜய் எப்போவாவது தான் விருதுக்குரிய படம் நடிப்பதாகச் சொல்லி உங்களை திரையரங்குக்கு அழைத்துவிட்டு குருவி, வில்லுப் படங்களைத் தந்திருக்கிறாரா?
நான் வணிக ரீதியிலான படங்கள் என்று சொல்லிவிட்டுத்தானே படங்களில் நடிக்கிறார்.
அப்படியானால் நித்தியானந்தரையும் 'நான் இப்படியானவன், இதெல்லாம் செய்பவன்' இப்போது என்னிடம் வாருங்கள் என்று அழைக்கட்டும் பார்க்கலாம்?


//இத்தனைக்கும் நீங்கள் என்ன இராமர்களா?//

நாங்கள் எங்களை எப்போதும் இராமர்கள் என்று அழைத்ததில்லை, ஆனால் அவர்கள் தங்களை கடவுள் என்றோ, பிரம்மச்சாரிகள் என்றோ அழைத்திருக்கிறார்கள்.
காவி உடையைக் கழற்றிவிட்டு நீ என்னவானாலும் செய், அதைப் பற்றி யாரும் எதுவும் கதைக்க மாட்டார்கள்.


//அப்படியெனின் என்ஜினியர், டொக்கராவதற்கு எங்களுக்கு A/L படிப்பிக்கும் ஆசிரியர்கள் எல்லாம் அந்த துறைகளிலல்வா இருந்திருக்க வேண்டும்!//

அதைத்தான் நாங்களும் சொல்கிறோம், வழிகாட்டியாக இருங்கள், ஆனால் கடவுளராக மாறாதீர்கள்.
வெறுமனே வழிகாட்டியாக இருக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.


//புகைப்பிடித்தல் தீங்கு எண்டு மாணவர்களுக்கு படிப்பிக்கும் எத்தனை ஆசிரியர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் புகைப்பிடிப்பதில்லை?//

ஆனால் அதையே பாடசாலையில் வைத்துப் புகைப் பிடித்தால் அது சாதாரண விடயமா?

எனக்கும் சன்னின் செயற்பாடுகள் பிடிக்கவில்லைத்தான், எத்தனையோ பதிவுகளில் சன்னைக் குறையும் கூறியிருக்கிறேன், ஆனால் அதற்காக நித்தியானந்தாவை நியாயப்படுத்துவைதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மதுரம் சொன்னது…

பொட்டலம் கலக்கல். தொடர்ந்தும் நிறைய எழுதுங்கோ.

கருணையூரான் சொன்னது…

நீங்கள் சொன்ன சாமியார் விசயத்தில் உங்களோடு நானும் ஒத்துக்கொள்கிறேன்.....எல்லாரும் சொன்னதை விட நீங்கள் வித்தியாசமான விதத்தில் நோக்கியுள்ளீர்கள் ..வாழ்த்துக்கள்

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்