2ம் உலகயுத்தத்தின் சுவடு யாழ்ப்பாணத்தில்!!

நீங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தவராயிருப்பின் சிலவேளை படத்தில் காட்டப்பட்டுள்ள சரிவக அமைப்பிலான தூணை கண்டிருக்ககூடும். என்ன இவன் ரோட்டில இருக்கிற ஒரு தூணை காட்டி அலுப்படிக்கிறான் என்று எண்ணவேண்டாம்.

வீதியோரமாக மரத்திற்கண்மையில் அமைந்துள்ள தூண்


இது யாழ்ப்பாணம் கொழும்புத்துறைவீதியில் சென்ஜோண்ஸ் கல்லூரிக்கு (நான் படிச்ச பள்ளிக்கூடம்) அண்மையில் உள்ள சேமக்காலைக்கு முன்பாக வீதியோரமாக இருக்கின்றது.


உருப்பெருப்பிக்கப்பட்ட படம் (தூணில ஒரு மரமும் சின்னதாக வளர்கிறது)

இத்தூணானது இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது (1939-1945) கட்டப்பட்டதாம். சண்டைக்கும் இத்தூணிற்கும என்ன சம்பந்தம்? அந்த காலத்தில் யுத்தவிமானங்கள் ஏதாவது குண்டு வீச வந்தால் அதை மக்களுக்கு அறியதந்து முன்எச்சரிக்கை செய்ய இந்த தூணில் ஏறி நின்று சைரண் ஊதுவார்களாம். (இவ் 2ம் உலகயுத்தத்தின் போது 1942ம் ஆண்டு ஜப்பானினால் இலங்கை மீது விமான தாக்குதல் கொழும்பிலும் திருகோணமலையிலும் நடத்தப்பட்டமையை நீங்கள் அறிந்திருக்கலாம்.)

எவ்வளவு காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்தபோதும் இந்த விடயம் அண்மையில் நான் விடுமுறைக்காக சென்றபோதே அம்மாவின் மூலமாக அறிந்து கொண்டேன். அதை உங்களிடமும் பகிர்கிறேன்.

ஒவ்வொரு தூணுக்கு பின்னாலும் இப்பிடிதான் வெவ்வேறு கதைகள் இருக்குமோ??????
யாருக்குதான் தெரியும்!!!!!!

21 comments:

ஆதிரை சொன்னது…

//ஒவ்வொரு தூணுக்கு பின்னாலும் இப்பிடிதான் வெவ்வேறு கதைகள் இருக்குமோ??????

உங்கள் ரோட்டுத் தூணுக்குப் பின்னாலேயும் நிறையக் கதைகள் இருக்கும்.

யாருக்குதான் தெரியும்!!!!!!

ஆபிரகாம் சொன்னது…

அந்த இடத்தினை நானும் கடந்து சென்றிருக்கிறேன்... இது ஒரு புதுமையான தகவல்! மறைந்து போன எச்சங்களின் மீதுதான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பெயரில்லா சொன்னது…

// 1942ம் ஆண்டு ஜப்பானினால் இலங்கை மீது விமான தாக்குதல் கொழும்பிலும் திருகோணமலையிலும் நடத்தப்பட்டமையை நீங்கள் அறிந்திருக்கலாம்.

புதிய தகவல். இப்பதான் கேள்விபடுறேன் உங்கள் பதிவால்.
நன்றிகள். தொடரட்டும்.

Subankan சொன்னது…

இதற்குப் பின்னால் இப்படியொரு கதையா? இன்றுதான் தெரியும்.

புல்லட் சொன்னது…

அடக்கடவுளே? இண்டைக்குதானப்பா எனக்கும் தெரியும்...

கார்த்தி சொன்னது…

@ ஆதிரை
// உங்கள் ரோட்டுத் தூணுக்குப் பின்னாலேயும் நிறையக் கதைகள் இருக்கும்.
யாருக்குதான் தெரியும்!!!!!!

ஆமாம் நான் சுச்சா(1)க்கு போன கதைகள் இருக்கும்.....

கார்த்தி சொன்னது…

@ஆபிரகாம்
// இது ஒரு புதுமையான தகவல்! மறைந்து போன எச்சங்களின் மீதுதான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எனது பதிவுக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றிகள். இடைக்கிடை வாருங்கள்.

நீங்கள் சொன்னது சரி. மறைந்து போன எச்சங்களின் மீதுதான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

@பெயரில்லா
உங்கள் கருத்துக்கு நன்றிகள். இனி கருத்துப்போடும்போது பெயரை போடுங்கள்.
இந்த Linkஐ பாருங்கள் சில வேளை பிரயோசனமாக இருக்கும்.
http://en.wikipedia.org/wiki/Participation_of_Ceylon_in_World_War_II

கார்த்தி சொன்னது…

நன்றிகள் Subankan.

@புல்லட்
நீங்களும் சென்ஜோண்ஸில் படித்தும் இது தெரியவில்லையே...
ஹிஹிஹி

கடவுள் சொன்னது…

மிச்சம் நன்றி கார்த்தீ எனக்கு பிடிச்சிருக்கு ............................

சுபானு சொன்னது…

//ஒவ்வொரு தூணுக்கு பின்னாலும் இப்பிடிதான் வெவ்வேறு கதைகள் இருக்குமோ??????

ம்.. உண்மைதான்!.. கல்லாலான தூண்களுக்குப் பின்னால் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதத் தூண்களுக்குப் பின்னாலும் ஒவ்வொரு கதைகள் உண்டு!

கார்த்தி சொன்னது…

@ கடவுள்
அரோகரா கடவுளே எனக்கும் அருள் தா!
யாரப்பா இந்த கடவுள்???
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்!! :)

கார்த்தி சொன்னது…

@சுபானு
// கல்லாலான தூண்களுக்குப் பின்னால் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதத் தூண்களுக்குப் பின்னாலும் ஒவ்வொரு கதைகள் உண்டு!

அப்படியா இது எனக்கு தெரியாம போச்சே!!

பால்குடி சொன்னது…

பயனுள்ள தகவல். மேலும் இப்படியான தகவல்களை எதிர்பார்க்கிறோம்.

சந்தோஷ் சொன்னது…

விகாரை மாதிரி இருக்கு எண்டு எங்கட மகாபராக்கிரமர்கள் கிளம்பாமல் இருந்தால் சரி....

கார்த்தி சொன்னது…

நன்றி பால்குடி..
ஏதாவது இருந்தா போடுறன்.

@சந்தோஷ்
//விகாரை மாதிரி இருக்கு எண்டு எங்கட மகாபராக்கிரமர்கள் கிளம்பாமல் இருந்தால் சரி....

நீங்கள்தான் சரியா புரிஞ்சு வைச்சுறுக்கியள்..
இப்பதானே ஆரம்பம் இன்னும் கொஞ்ச காலத்தில புதுசுபுதுசா யாழிலும் விகாரைகள் முளைக்கும்.

குரும்பையூர் மூர்த்தி சொன்னது…

2ஆம் உலக யுத்ததின் போது குண்டு விமானங்கள் வரும் போது சைரன் ஊத பதுங்குகுளிக்குள் இறங்க பயிற்சி அளிக்கப்ப்ட்டதான் எங்கள் தாயார் கூறி இருக்கிறா, ஆனால் இப்படி தூண்கள் எங்கள் ஊரில் இருந்ததாக நினைவில்லை

கார்த்தி சொன்னது…

உங்களது கருத்துக்கு நன்றி குரும்பையூர் மூர்த்தி!
அப்படியா? இப்ப நீங்கள் புதுசா ஒன்றை அறிந்துவிட்டீர்கள் மகிழ்ச்சிதானே...

கரவைக்குரல் சொன்னது…

எமது பகுதிகளில் இப்படி எத்தனையோ விடயங்கள் மனதோடு இருக்கின்றன. அவை உங்களைப்போன்றவர்களே வெளிக்கொண்டு வருகின்றார்கள், இன்னும் வரட்டும்,
வலைப்பதிவுகளில் சுவாரஷ்ய விருத்துக்கு நீங்கள் அறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கின்றேன்.
அதை ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு சமர்பித்து மகிழ்கின்றேன்
வாழ்த்துக்கள்
http://karavaikkural.blogspot.com/2009/07/blog-post_26.html

கார்த்தி சொன்னது…

விருதுக்கு கோடி நன்றிகள் கரவைக்குரல்.
மகிழ்சியுடன் ஏற்று கொள்கிறேன்!! :)

பெயரில்லா சொன்னது…

http://www.defence.lk/PrintPage.asp?fname=20071208_01

கார்த்தி சொன்னது…

நன்றி உங்களது இணைப்புக்கு

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்