டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
ச&#
21
டிஸ்கி: ஒரு சஞ்சிகைக்காக SLPL + இந்த திறமையான வீரர்களை சேர்த்து எழுதியிருந்த பகுதி மிக நீண்டுவிட்டதால் இந்த வீரர்களின் பகுதியை வெட்டி இங்கே பதிகிறேன். SLPL தொடர்பான அந்த பதிவு பொட்டலத்தில் பிறகு பதிவேற்றப்படும்
Dilshan Munaweera
Dilshan Munaweera
23வயதே ஆகும் இந்த வீரர் நடந்து முடிந்த SLPL தொடரில் கூடிய மொத்த ஓட்டங்களை குவித்தவீரராக இருக்கிறார். மத்தியுஸை விட ஒரு ஓட்டம் கூட எடுத்து 212ஓட்டங்களை இந்த போட்டி தொடரில் பெற்றிருக்கிறார். வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர் அதிரடியாக ஆடக்கூடியவர். இலங்கை 19, 21 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியிருக்கிறார். SLPL முழுவதும் திறமையாக விளையாடிய இவர் இறுதிப்போட்டியில் மத்தியுஸின் NAGENNAHIRA NAGASவுடன் ஆட்டமிழக்காமல் வெறும் 23 பந்துகளில் பெற்ற 44ஓட்டங்கள் வெற்றியை டக்வத் லூயிஸ் முறை மூலமாக இவரது Uva Next அணிக்கு வழங்கியிருந்தது.
ஹெல்மெற்றுடன் இவர் துடுப்பை அந்தரத்தில் வைத்து பிடித்தபடியே துடுப்பெடுத்தாடும் அழகும் இவரது முகவெட்டும் மேற்கிந்திய தீவுகளின் வீரர் ராம்நரேஷ் சர்வேனை பார்ப்பது போல ஓர் உணர்வை தருகிறது. அதிரடி வீரராக இருந்த போதிலும் Stylish ஆக அடித்து பந்துகளை Gapகளினூடாக placeசெய்யும் திறமை இவரை எதிர்காலத்திற்கான இலங்கை அணியில் நிரந்தர இடத்தை வழங்கும் என்பது எதிர்பார்ப்பு. 7போட்டிகளில் 212ஓட்டங்களை 35என்ற சராசரியுடனும் 144ஓட்டவிகிதத்தில் இவர் SLPLல் பெற்றிருந்தார். T20 போட்டிகளில் இலங்கை சார்பாக டில்ஷானுடன் களமிறங்குவதற்கு பொருத்தமான ஆரம்ப துடுப்பாட்ட வீரரை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் மஹேல ஜெயவர்ததனவே பெரும்பாலும் அந்தப்பணியியை செய்து வந்திருந்தாலும் இந்த உலககிண்ண போட்டிகளில் டில்ஷான் முனவீர அந்தப்பணியை செவ்வனே செய்வார் என இலங்கை கிரிக்கெற் சபை எதிர்பாக்கின்றது. நான் எழுதும்வரை (Sep15) இலங்கை விளையாடிய மேற்கிந்தியதீவுகள் இந்திய அணிகளிற்கிடையான Warm-up போட்டியில் இவர் முறையே 24, 03 ஒட்டங்களை பெற்றிருந்தார்.
Akila Dananjaya
வெறும் 18வயதுடைய SLPLஐ தவிர வேற முதல்தரப்போட்டிகளிலேயே கலந்து கொள்ளாத இவர் தற்போது T20 உலககிண்ண இலங்கை அணியில். இவர் திடீரென வயம்ப அணிக்காக SLPLல் சேர்த்துக்கொள்ளப்பட்ட போது பல சலசலப்புகள் எழுந்திருந்தன. இரண்டு கேள்விகள் பொதுவாக இவர் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒன்று, முதல்தரப்போட்டிகளிலேயே விளையாடாத இவர் எவ்வாறு இந்தப்பெரிய்ய போட்டிக்கான அணியில் வந்தார். இரண்டாவது திறமையானவர் எனின் ஏன் அப்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செல்லவில்லை. இந்தக்குழப்பங்கள் ஆரம்ப்பத்தில் பலருக்கும் இருந்தாலும் பின்னர் அனைத்தும் தெளிவாக்கப்ட்டது.
பாகிஸ்தான் அணி இலங்கையில் Juneல் மேற்கொண்ட சுற்றுலாவில் இலங்கைக்கு மரண பயத்தை கொடுக்க கூடியவர் என பாகிஸ்தானின் சுழல்பந்துவீச்சாளர் சயிட்அஜ்மால் இனங்காணப்பட்டிருந்தார். அஜ்மாலின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வதற்காக அவர் மாதிரி பந்துவீசக்கூடியவர்களை இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து அழைத்து இலங்கை அணியின் பயிற்சிகளின் போது பந்துவீச சொல்லியிருந்தார்கள் அங்கே இவரது பற்துவீச்சு இலங்கை அணி தலைவர் மஹேலஜெயவர்த்தனவிற்கும் சங்கக்காரவிற்கும் எதிர்கொள்ள சற்று கடினமாக இருந்ததாக கூறப்பட்டது. பயிற்சிகளின்போது இவரது சிறப்பான பெறுபேற்றை பார்த்து இவர் மஹேலவினால் வயம்ப அணிக்கு அழைத்துவரப்பட்டார். இலங்கைக்காக 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அவுஸ்திரேலியா செல்வதிலும் இங்கே தனது அணியில் SLPLல் விளையாடுவதில் மஹேல விரும்பியதனாலேயே அகில தனன்சய வயம்ப அணிக்காக விளையாடினார் என்று சொல்லப்படுகிறது.
பணபலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் உள்ளே நுழைந்தார் என்று சிலரால் சந்தேகிக்கப்ட இவர் SLPLல் விளையாடிய போட்டிகளில் காட்டிய திறமையின் பின்னர் தன்னை சந்தேகித்தோரை வாயடைக்கச் செய்தார். பல விதமான பந்துவீச்சு வகைகளை வீசக்கூடியவரான இந்த வலது கை சுழல் பந்துவீச்சாளர் போட்டியின் நிலைகளை கருத்தில் கொண்டு தந்திரமாகவும் பந்துவீசக்கூடியவராக இருப்பது இவரின் மிகப்பலமாக கருதப்படுகிறது. SLPL தொடர் முழுவதும் சிறப்பாக பிரகாசித்த இவர் றுகுண றோயல்ஸ் அணியுடனா போட்டி தவர்த்து (இதில் 3ஓவர்களில் 37ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார்) அனைத்து போட்டிகளில் சொற்ப ஓட்டங்களையே விட்டுக்கொடுத்து எதிரணியை கட்டுப்படுத்தியுமிருந்தார். 6 போட்டிகளில் 9 விக்கெட்களை சரித்த இவர் வெறும் 6.36 என்ற ஓட்டவீதத்திலேயே ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
இலங்கையின் Mystery பந்துவீச்சாளரென முன்பு அறியப்பட்ட அஜந்த மெண்டிஸ் போலவே இவரையும் பலர் கருதுகின்றபோதிலும் மிகச்சிறிய வயதில் சர்வதேச போட்டியில் அதுவும் உலக T20 போட்டிகளில் இவரால் சாதிக்கமுடியுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறபோதிலும் சர்வதேச போட்டி அனுபவம் ஒன்று கூட இல்லாமல் முக்கிய போட்டியில் கழமிறங்குவது கொஞ்சம் கடினமான விடயம்தான். அத்தோடு இவர் இந்த முக்கிய போட்டியில் சொதப்புமிடத்து இவரது எதிர்காலத்துக்கு அது ஒரு பிழையான அடித்தளமாக கூட அமைந்துவிடலாம். மிகச்சிறிய வயதில் இவரை சர்வதேச போட்டிகளின் அனுபவம் வழங்காது இவரை பாழாக்கிவிடப்போகிறார்களோ தெரியவில்லை. இலங்கை மேற்கிந்தியதீவுகளிடையேயான முதலாவது Warm-up போட்டியில் 3ஓவர்களில் 17ஓட்டங்களை கொடுத்திருந்தார் இவர். இந்தியாவுடனான 2வது போட்டியில் இவர் விளையாடவில்லை. ஒரு காலப்பகுதியில் தனது மாயப்பந்து வீச்சுக்களால் பலரையும் வீழ்த்திய அஜந்த மெண்டிஸிற்க்கு பிற் காலத்தில் நடந்தது போல இவருக்கும் நடக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
ச&#
06
September 01 ஏகப்பட்டரோரினது எதிர்பார்ப்புகளுடன் ”நீதானே என் பொன்வசந்தம்” பாடல்கள் வெளிவந்திருந்தன. இந்தப்பாடல்கள் தொடர்பில் பலதரப்பட்ட Mixed comments வந்துகொண்டிருக்கின்றன. என்னை பொறுத்தவரை பாடல்கள் எல்லாம் நல்லா இருந்திச்சு ஆன அல்பம் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போல மக்சிமம் என்று சொல்கிறள அளவு இருக்கல. ஆனா சிலர் ”ராஜாவா இப்பிடி போட்டார்” என்று தாறுமாறாக கேவலப்படுத்துகிற அளவில் இல்லவே இல்லை. இவர்கள் அண்மையில் இளையராஜா போட்ட வேறு படபாடல்களை கேட்டார்களோ தெரியல. இளையாராஜாவின் அண்மைக்கால அல்பங்களுடன் ஒப்பிடும்போது இது சுப்பர் ரகம் எனலாம்.
அண்மையில் வந்த பட பாடல்களில் தாண்டவம் பாடல்கள்தான் எனக்கு இனிமையில் முன்னிலையில் இருப்பது போல தெரிகிறது. இயக்குனர் AL.விஜய்யும் இசையமைப்பாளர் GV.பிரகாஸ்ஸும் இணையும் 4 வது தடவை இது. ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய்ய வெற்றிகளை பெற்றிருந்தன. அதைப்போலவே எதிர்பார்ப்பை குலைக்காமல் தாண்டவம் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன.
![]() |
GV PrakashKumar&Saindhavi |
![]() |
Sathya Prakash |
![]() |
Vandana Srinivasan |
ஆனால் இந்த அல்பத்தின் மூலம் முக்கியமாக பிரபலமாகப்போகிறவர் பாடகி வந்தனா ஸ்ரீநிவாசன். இதற்கு முன் ”பாலை” என்று இளையவர்கள் எல்லாம் அறிமுகமான படத்தில் ”யாதோ யாதோ ஏதொ நடந்தது” என்ற பாடலை பாடியிருந்தார் இவர். இந்த வந்தனா ஸ்ரீநிவாசன் பல Albumகள் தயாரிக்கும் இசையமைப்பாளர்களுக்கு Mashup பாடல்கள் + வழமையான பாடல்களை பாடிவருகின்றவர். Mashup என்பது ஏலவே இருக்கும் பாடல்களை இணைத்து உருவாக்கும் பாடல்களாம். இப்படியான பாடல்களை உருவாக்குவதில் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் வெளிநாட்டு இசையமைப்பாளர் Shankar Tuckerன் இசையிலும் இவர் ”துளி துளியாய்” என்ற பாடலை பாடியிருக்கிறார்.
தாண்டவம் பட வந்தனாவின் பாடல் கீழே....
தாண்டவம் படத்தில் வந்தனா ஸ்ரீநிவாசன் ”ஒரு பாதி கதவு நீயடி” என்ற பாடலை ஹரிசரனுடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடல் அந்தமாதிரி மெலடியாக இருக்கிறது. இவரின் குரல் கேட்பதற்கு பாடகி சின்மயியின் குரல் போலவே இருக்கிறது. பல வாய்ப்புக்கள் இவருக்கு இனி கிடைக்க போவது தெரிகிறது. (அலாப்ராஜுக்கு இவ்வாறு அவரின் ஆரம்ப பாடல்களின் போதே திரைதகவல் பெட்டகம்-III ல் சொல்லியிருந்தோம். இப்போது அவரின் வாய்ப்புக்கள் அனைவரும் அறிந்ததே.) இந்தப்பாடலில் ஹரிசரன் ”நீயென்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி” என்று இழுக்கும் அந்த இழுவைதான் பாட்டின் ஹைலைட். இப்போது இருக்கும் இளமையான பாடகர்களில் ஹரிசரனுக்குதான் எனது முதலிடம்.
Vandana Srinivasan's Rahman Mash Up - Hindi ( Prithvi Chandrasekhar feat)
வந்தனா ஸ்ரீநிவாசனின் சில பாடல்கள் + Mashups links
Thuli Thuliyaai" - Shankar Tucker ft. http://www.youtube.com/watch?v=uTnla1nAfI8
Rahman Mashup - Tamil - Prithvi Chandrasekhar feat. http://www.youtube.com/watch?v=DhNRNS3UPnU&feature=relmfu
முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
ச&#
03
என்னதான் மற்றவர்களை கணக்கெடுக்காமல் ஓவராக தாறுமாறாக பேசினாலும் சிலரிடம் இருக்கு மதிப்பு குறைவதில்லை. அதுபோலதான் இயக்குனர் மிஸ்கினிடம் ஒரு எதிர்பார்ப்பு கலந்த மதிப்பு சினிமா ரசிகர்களிடயே இருந்து வருகிறது. சித்திரம்பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம்செய் என்று இவரால் வந்த படைப்புக்கள் வித்தியாசமானவை இவரது தனி முத்திரையை வெளிப்படுத்தியவை. இவரது முதல் 2படங்களும் சூப்பர்ஹிட்டாகவும் நந்தலாலா பெரிதாக சோபிக்காமலும் (பலதரப்பாலும் பெரிதாக பாராட்டப்பட்டாலும்) யுத்தம்செய் முதலுக்கு மோசமில்லாது நன்றாகவும் போயிருந்தது.
உலகசினிமாவை உல்டா பண்ணுகிறார் (நந்தலால படத்திற்கே முக்கியமாக எழுந்தது) என்று ஆங்காங்கே கூச்சல்கள் எழுந்தாலும் திரையுலகில் இவரது பயணம் உறுதியாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இயக்குனராக வசனகர்த்தாவாக பாடகராக நடிகராக என்று பல அவதாரங்கள் அனைத்திலும் கலக்கி இருந்தவர்தான் இந்த மிஸ்கின்.
தனது கனவுப்படம் (Dream Movie) என்றும் தமிழ் சினிமாவில் முதலாவது Super Hero Filmஎன்றும் மிஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட படம்தான் இந்த முகமூடி. தனது முதல் இரு படங்களுக்கும் இசைக்காக சுந்தர்.C.பாபுவையும் அறிமுகப்படுத்தி பயன்படுத்திய இவர் நந்தலாலாவுக்கு இளையராஜாவையும் இறுதியாக யுத்தம் செய்யிற்கு புதுமுகமாக இசையமைப்பாளர் Kயையும் அறிமுகப்படுத்தியிருந்தார். மிஸ்கினின் படங்களில் பாடல்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்திலும் பின்னணி இசைக்கு தனியொரு முக்கியத்துவம் கிடைப்பது வழமை. எனினும் நந்தலாலா தவிர்த்து சித்திரம்பேசுதடியிலிருந்து ஒவ்வொரு படத்திலும் டப்பாங்கூத்து பாடல் ஒன்று வந்து அந்தவருடத்தின் சூப்பர்ஹிட் என்கிற அளவுக்கு அது வெற்றியும்பெற்று வந்துள்ளது. யுத்தம்செய்யில் ஒரு பாடலிலும் கலக்கலான பின்னணி இசையினுாடாகவும் அறியப்பட்ட Kயையே மீண்டும் முகமூடிக்கும் கழமிறக்கியிருந்தார் மிஸ்கின்.
படம் எப்பிடி என்கிற கேள்விக்கு முதல் ஏன் இதை மிஸ்கின் தமிழின் முதலாவது Super Hero படமெண்டு சொன்னார் என்கிறது புரியாத புதிராகவே இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை ஆங்கில படங்களில் வருகின்றதுபோல ஆச்சர்ய அமானுச சக்திகளை கொண்ட ஹீரோவைப்பற்றிய கதைகளே Super Hero படங்களில் உள்ளடங்கும். இந்தப்படத்திலேயே நரேன் அடிக்கடி சொன்ன படப்பெயர்களான SuperMan SpiderMan IronMan போன்ற படங்கள். ஆனால் தமிழ் சினிமாவில் வந்த கந்தசாமி வேலாயுதம் படங்களை யாரும் அந்த Categoryக்குள் போடுவார்களா? அப்பிடி போடப்பட்ட படம்தான் இந்த முகமூடியும். Atleast ஜித்தன் படத்தில் வந்த மாதிரியேனும் ஒரு அற்புதசக்திகூட ஹீரோவுக்கு இல்லை. ஆனால் சில சகாசங்களை செய்கிறார் ஹீரோ. தமிழ்சினிமாவில் அமானுச சக்திகள் கொண்ட ஹீரோக்கள் வருவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் லாஜிக் இல்லை என்பார்கள் என்பதால்தான் இப்பிடி என்றால் சும்மா ஒரு மனிதர் வெவ்வேறு இடங்களுக்கெல்லாம் கணப்பொழுதில் போகும் லாஜிக்கை என்னவென்று சொல்வது. ஒரு திறமையான இயக்குனர் இப்பிடி எதையோசித்து செய்தார் என்பது புரியாத புதிர்தான்.
படம் முதல்பாதியில் மிஸ்கினின் அரசாட்சி என்று சொல்லும்படியாக அவரது வழமையான பாணியில் சுவாரஸ்யமாக வேகமாக நேரம்போவதே தெரியாமல் போகின்றது. குடும்பம், அடிதடிஅக்சன், காதல், மர்மமனிதர்கள் திரில் என்று அற்புதமாக பிணைக்கப்ட்டு அனைத்து காட்சிகளும் நேர்த்தியாக சென்றிருந்தது. ஆனால் இரண்டாம்பதியோ எடுத்துக்கொண்ட Story Concept சொதப்பலால் முதல் பாதியின் வேலைகளை மறக்கசெய்யக்கூடியவாறு சும்மா ஏனோதானோவென்று சென்றுவிட்டது. சொல்ல வந்த கதையின் வினைதான் அது. மிஸ்கின் எடுத்துக்கொண்ட கதை படத்தை சுவாரஸ்யமாக 2வது பாதியில் கொண்டு செல்லவிடவேயில்லை. இந்த கதையைகொண்டு படத்தை சுவாரஸ்யமாக ஆக்கியும் இருக்கேலாது. மிஸ்கினும் சொதப்ப தொடங்கி விட்டார் என்று 2வது பாதியில் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். படம் மொக்கை விசர் கேவலம் என்று சொல்லவில்லை. ஆனால் படம் வாய்க்கவில்லை ”பார்க்கலாம் ரகம்” என்பதனுள்தான் இந்த 2வது பாதி சொதப்பாலால் சொல்லலாம்.
சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தாலும் சூப்பர்ஹீரோ Subject என்று சொன்ன பில்டப்பிற்கு ஏற்றவாறு பெரிதாக சண்டைக்காட்சிகள் இருக்கவில்லை. ஜீவா கொடுத்தவேலையை அழகாக செய்திருக்கிறார். வழமையான அவரின் அலட்டலில்லாத அளவான நடிப்புடன் அழகாகவும் தெரிகிறார். (நீதானே என்பொன்வசந்தத்தின் பாதிப்போ தெரியவில்லை). அறிமுக ஹீரொயின் பூஜா கெஹ்டேயிற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. நடிப்பையும் கணிக்க முடியவில்லை. நரேனிற்கு இறுதி காட்சிகள் தவிர பெரிதாக பேசுவதற்குரிய காட்சிகள் இல்லை. எனினும் நரேன் காட்சிகளில் எதிர்பார்த்தளவு மிரட்டவில்லை.
படத்தின் அல்பத்தில் மொத்தம் 3 பாடலகள் என்றாலும் சின்மயி பாடிய ”மாயாவி” பாடல் படத்தில் இடம்பெறவில்லை. அதன் ஆரம்ப beatகள் இடையிடையே பயன்பட்டாலும் முக்கியமாக படம் நிறையும் தருவாயில் அந்த ஆரம்ப இசையை மட்டும் போட்டார்கள் பாட்டை கடைசிவரை காட்டவேயில்லை. மிஸ்கின் பாடிய ”நாட்டில நம்ம வீட்டில” பாடல் மெட்டு வேறு அதே மாதிரி பாடல்களை ஞாபகப்படுத்தினாலும் அந்த டப்பாங்கூத்து பாடல் எடுக்கப்பட்ட விதமும் பாடலும் நன்றாக இருந்தது. பெரிதாக ரசிக்கப்பட்ட ”வாய மூடி சும்மா இருடா” பாடல் வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருந்தது நன்றாக Visualsம் வந்திருந்தது.
யுத்தம்செய் போலவே படத்தின் பின்னணி இசை படத்தின் ஊன்றுகோல். அதிரடியான கலக்கல் இசையை வழங்கியிருந்த இசையமைப்பாளர் K இன்னும் யுத்தம்செய் பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பது பின்னணி இசையிலும் ”வாய மூடி சும்மா இருடா” பாடல் இசையிலும் தெளிவாகியிருந்தது. ”யுத்தம்செய்”இல் மர்மமான இடங்களில் பெரும்பாலும் போடப்பட்ட அந்த இசை மீண்டும் இங்கேயும் பெரிதாக தலை காட்டியிருந்தது. என்றாலும் பல இடங்களில் Kயின் பின்னணி இசைதான் படத்தின் ஹைலட்டே.
பெரிதாக எதிர்பார்க்கபட்ட முகமூடி கடைசிவரை மூடியமுகமாகவே சென்றது ரசிகர்களுக்கு பெரிய்ய ஏமாற்றம்தான். முதல்முறையாக மிஸ்கினில் தடுமாற்றத்தை இந்தப்படத்தில் உணர்ந்தேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2012
(19)
- ▼ செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)