தலைநகர் கொழும்பின் திரையரங்குகள்- I (Premier Concord Cinema)

இந்த தொடர்பதிவை 2வருசத்துக்கு முதலே எழுதோணும் எழுதோணும் என்று யோசிச்சு எழுத பஞ்சியில கனக்க காலமா எழுதாமேயே விட்டுட்டன். ஒரு மாதிரி கடைசியா எழுதிடோணும் எண்டு தொடங்கிறன். இந்த தொடர் பதிவுகளில் நான் தலைநகர் கொழும்பில் படம் பார்த்து ரசித்த தியெட்டர்களை பற்றிய ஒரு அலசலை தர இருக்கிறேன். நிறைகள் குறைகள் அங்கே கடைப்பிடிக்ப்படும் நடைமுறைகள் போன்றவை இயலுமானவரை இந்தபதிவில் தரப்பட உள்ளது.



இதன் முதல் பாகத்தில் கொழும்பு தெஹிவள கொன்கோர்ட் திரையரங்கு பற்றி பார்க்கவுள்ளோம். பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவள போன்ற இடங்களிலிருக்கும் அதிகமாக தமிழ் பேசுவோர், கூடுதலாக விரும்பிச்செல்லும் திரையரங்கு இதுவாகத்தானிருக்கிறது. வெகு இலகுவாக சென்றடையக்கூடிய இடத்தில் கொழும்பின் முக்கியமான நகரப்பகுதியில் இத்திரையரங்கம் இருக்கின்றமை இதன் கூடிய நன்மை. காலி வீதியில் வெள்ளவத்தயிலிருந்து தெஹிவள நோக்கி செல்லும்போது தெஹிவள நாற்சந்திக்கு முதல் பஸ்தரிப்பிற்கு மிக அண்மையிலிருக்கிறது இந்த திரையரங்கம். 

முக்கியமான பலபடங்களை எடுத்து வெளியிடும் EAP Films & Theatres நிறுவனத்திற்கு சொந்தமான பல திரையரங்குகளில் இதுவும் ஒன்றாயிருக்கிறது. மொத்தமாக 409 பேர் அமர்ந்து பார்க்ககூடிய இந்த திரையரங்கில் 294 - ODC 104 - Balcony 6 - Box(6x2=12) ஆசனங்கள் உள்ளது. குளிருட்டப்பட்ட (A/C)வசதியுள்ள பெரும்பாலும் தமிழ்ப்படங்களே திரையிடப்படும் இந்த தியட்டரில் எப்பாவது அத்திபூத்தாப்போல ஹிந்திப்படமும் திரையிடப்பட்டிருக்கிறது. 2008ஆண்டளவிலென்று நினைக்கிறேன், கிட்டத்தட்ட 3மாதங்களாக இந்த தியட்டரில் தமிழ்ப்படங்கள் திரையிடாது ஹிந்தி படங்களை மட்டும் வெளியிட்டு ஈ ஓட்டியிருந்தார்கள். பின்னர் கொஞ்சக்காலத்திற்கு பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களை திரையிடத்தொடங்கியிருந்தார்கள். என்ன பிரச்சைனயால் அந்த நிலை வந்திருந்தது என்று தெரியவில்லை.


தற்போது தலைநகரில் தமிழ்ப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளில் பலவழிகளிலும் அளவான காசுக்கு நல்ல வசதியான தியட்டர் என்று என்று சொல்லக்கூடியது இந்த Concord திரையரங்குதான். Reasonable பணத்துக்கு படம் பார்க்கலாம், நல்ல குளுகுளு என்று குளிரூட்டபட்ட வசதி, சிறந்த dts ஒலியமைப்பு, Adjustable cushion ஆசனங்கள் என்று பலவகைகளிலும் தேவையான வசதிகளை கொண்ட இந்த திரையரங்கிற்கு ரசிகர்கள் விரும்பி செல்வதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.


ODC - 235/= Balcony - 310/= Box(2)-420*2=840 போன்ற கட்டணத்தில் Concord திரையரங்கில் கட்டணங்கள் அறவிடப்படுகின்றது. மற்ற தியட்டர்களுடன் ஒப்பிடும்போது இவர்களால் வழங்கப்படும் வசதிகளுக்கு இது நல்ல reasonableஆனா கட்டண அறவீடுதான். கொழும்பில் A/C + dts வசதியுடன் குறைவான கட்டணம் அறவிடும் தியட்டராக Concordதான் இருக்கிறது. பெரும்பாலும் எந்த பெரிய்ய நடிகர்களின் படமென்றாலும் முதல்நாளிலும் ஒரே மாதிரியான கட்டணங்கள்தான் அறவிடப்படும். (இதுவரை விஜய் அஜீத் சூர்யா போன்றோரின் படங்களுக்கு கூட அவ்வாறே நடந்திருக்கிறது. நான் பார்த்தவரை ரஜினியின் சிவாஜிக்கு மாத்திரமே சற்று கூடுதலாக அறவிட்டிருந்தார்கள்.)


எனினும் நீங்கள் 235/= ODC Ticketக்காக 250/= கொடுக்கும் பட்சத்தில் மீதி 15/= தருவார்கள் என இங்கே எதிர்பார்க்கேலாது அனேகமாக தரவும் மாட்டார்கள். எனவே சரியாக 235/=கொடுத்தால் உங்களுக்குதான் நன்மை. சிலபேர் மடைத்ததனமாக முதல் நாள் ரிக்கெட் விலை கூடவாக இருக்கும் என்று கூடுதலான விலைகளை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். கூடக்கொடுத்துவிட்டு சரியான மக்கள் கூட்டத்தில் மீதிக்காசை தருவார்கள் என எதிர்பார்ப்பது கல்லில நார் உரிப்பதைப்போல கடினமானது.


இந்த தியட்டரில் மக்கள் ஒழுங்காக வரிசையில் செல்வதற்குரிய கம்பிவேலிகள் அமைப்பு நிண்டதூரத்துக்கு இல்லை. ஒரு 5பேர் நிற்பதற்குரிய அளவுதான் ODCற்கு செல்பவர்களுக்கு ஒரு பக்கமும் Balconyக்கு மற்ற பக்கமும் இருக்கிறது. எனவே வேளைக்கு செல்பவர்கள் அதிகளவான சனக்கூட்டமான நாட்களில் கூட படத்தை பார்க்க முடியும் என்றில்லை. முண்டியடித்துக்கொண்டு ஆக்களை தள்ளிக்கொண்டு உள்ள செல்ல பலம் இருந்தால் எப்பிடியான சனக்கூட்டத்திலும் இந்த தியட்டரில் படம் பார்த்து விடலாம். இல்லாவிட்டாலும் படம் வெளியாகி ஒரு கிழமை கழித்துதான் இலகுவாக பார்க்கலாம்.
Counter
இருப்பினும் புடங்குப்பாடு குறைந்தவழியில் படம்பார்க்கவும் ஒரு கள்ளவழி இருக்கிறது. பொதுவாக Balconyக்கு செல்லும்பக்கத்தில் நிற்கும் கூட்டம் ODCபக்கம் நிற்கும் கூட்டத்தை விட வெகு குறைவாகதான் இருக்கும். So Balcony பக்கமாக நின்று எப்பிடியாவது உள்ளே சென்றுவிட்டால் balcony counter மற்ற பக்கம் என்றாலும் இலகுவாக அங்கு சென்று ODC ticketஐயே எடுத்து குறைந்த பணத்திலேயே படத்தை ரசிக்க முடியும். இதுவரை இந்த techniqueஐ பாவிச்சுதான் இலகுவாக படம் பார்ந்திருக்கிறேன். இதையே எல்லாரும் தொடங்கினாங்க எண்டா என்பாடு திண்டாட்டமதான்.

Projector's room
பொதுவாக 10.30AM, 3.00PM, 7.00PM போன்ற 3நேரக்காட்சிகள்தான் திரையிடப்படுகின்றன. எனினும் புது படம் வெளியிடப்படுகின்ற தருணங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் தொடக்க நாட்களில் (முதல் கிழமைவரையிலான நாட்களில்) 4நேரக்காட்சிகளாக 10.30AM, 1.30PM, 4.30PM, 7.30PM நேரங்களில் திரையிடப்படுகின்றன. எனவே உங்களுக்கு காட்சிநேரங்கள் தெரியாத பட்சம் phone பண்ணி கேட்டு சரியான நேரம் செல்வது நல்லது. எனக்கு தெரிந்தவர்கள்கூட காட்சி நேரம் தெரியாது வந்து தங்களது நேரத்தை வீணாக வீணாக்குவதுண்டு. இப்பொழுது Online booking வசதியும் இதற்கு வழங்கப்படுகிறது. இதில் பார்த்த முதல் திரைப்படம் வரலாறு. நான் இதுவரை கூடுதலாக படம் பார்த்த தியட்டர் இதுதான்.

Concord Address: 139, Galle Road, Dehiwela, Sri Lanka
Concord  Telephone : 0117 549630,

அடுத்த பாகத்தில் ஈரோஸ் தியட்டரை பற்றி பார்ப்போம்.

4 comments:

ஹாலிவுட்ரசிகன் சொன்னது…

அட ... பால்கனி வரிசையில் போய் ஓடிசி டிக்கெட் எடுக்கும் ஐடியா நல்லாத் தான் இருக்கு. பிரச்சினை ஏதாச்சு வந்துட்டா என்ன பண்றது?

இன்னும் சினிவேர்ல்ட்டுக்கு மட்டும் தான் விசிட் பண்ணவில்லை. அதையும் பற்றி எழுதுங்க. பிறகு போக பார்க்கிறேன்.

test சொன்னது…

நல்ல முயற்சி பாஸ்! அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!

//Box(2)-420*2=840 போன்ற கட்டணத்தில் Concord திரையரங்கில் கட்டணங்கள் அறவிடப்படுகின்றது//

ஆமா ஒன்னு மட்டும் புரியல!
Boxல எதுக்கு டபுள் சார்ஜ் வாங்குறானுங்க? அநியாயம் இல்லையா? ரெண்டு சீட் இருக்குமா? அப்பிடீன்னா தனியா ஒரு சீட்டுக்கு டிக்கட் வாங்க முடியாதா? ஒண்ணுமே புரியல பாஸ்! - அறியாச் சிறுவன் ஏதாவது தவறாகக் கேட்டிருப்பின் மன்னிக்கவும்!

Athiran.m சொன்னது…

you have give our secrets boss.....

ram katradhu english சொன்னது…

அருமையா எழுதியிருக்கீங்க சகோ. யுவகிருஷ்னா கூகிள் ப்ளஸ்ஸில் இந்த பதிவை பரிந்துரைத்தார். அது மூலமா வந்தேன். அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்