7ம் அறிவு - திரைப்பார்வை (Neutral Review from Surya's Fan)
டிஸ்கி: நான் சூர்யா ரசிகன். விஜய் ரசிகனில்லை.
7ம் அறிவை தீபாவளியன்றே மாலை 5அளவில் பாத்திருக்க வேண்டியது 2மணி நேரம் காத்திருந்து முட்டி மோதி Ticket counterக்கு செல்ல கொஞ்சம் முதலே, முன்னே சென்றவர்கள் ஐஞ்சாறு எண்டு டிக்கெட்டுக்களை முழுவதுமாக வாங்கி முடித்து விட்டிருந்தனர். அதன் பின் நேற்று வெள்ளிக்கிழமை இரவுக்காட்சியிலேயே Concord திரையரங்கில் பார்க்கமுடிந்தது. கொட்டிய மழையையும் தாண்டி கூட்டம் அலையென வந்திருந்தது.
-----------------------------------------------------------------------------------------
படத்தை பற்றி பாக்கமுதல் தீபாவளியன்று சென்று ரிக்கெட் கிடைக்காம திரும்பி பலத்த ஏமாற்றத்தோட வந்திருந்தாலும் அங்கே நடைபெற்ற ஒரு சம்பவம் படம் பார்த்ததைவிட டபுள் மடங்கு மனநிறைவை அள்ளிதந்திருந்தது. கடவுள் என்பவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை மீண்டும் என்னிடத்தில் உறுதிப்படுத்தி சென்றிருந்தது.
4.30க்கே காட்சி ஆரம்பமாகும் என்று சொன்னாலும் முதல் காட்சிகளின் தாமதத்தால் காட்சி நேரம் பிந்தும் என்று தெரிந்தபோதும் நானும் இன்னும் இரு நண்பர்களும் 3.30மணியளவிலேயே சென்று விட்டிருந்தோம். ஒப்பீட்டளவில் கூட்டம் குறைவாக இருக்கும், பல்கனிக்குரிய நுழைவாயில் வழியே சென்று ODC Ticket எடுப்பதே எங்கள் வழமையான திட்டம். அந்த பயங்கர கூட்டத்தில் நாங்களும் சென்று எமது நிலைகளை பலப்படுத்தி உள்ளே நுழைவதற்கு காத்திருந்தோம்.
அப்போதுதான் அந்த கூட்டத்தில் அந்த நாதாரியை கண்டோம். முதலில் தன்பாட்டுக்கு அலம்பியபடி இருந்த அந்த எருமை மெல்லம் மெல்லமாக தான் பெரிய ரவுடி என்ற மாதிரி பில்டப்பை அங்கே ஏற்படுத்திகொண்டிருந்தான். தண்ணியடித்திருந்த அவன் ”தாங்கள் 12மணியிலிருந்து வந்திருக்கிறம். செற்றா வந்திருக்கிறம். எங்கட செட் போய்முடியதான் மற்ற ஆக்கள் போகலாம் என்று சொல்லி கூட்டத்திலிருந்து பலரை தள்ளியும் பலருடன் அடிதடிக்கும் போனான். இத்தனைக்கும் அந்த செற் எண்டு சொன்ன ஆக்கள் பெரிய வயதில்லாத வட்டுகள் அதோட அவர்கள் ஏற்கனவே நல்ல முன்னுக்கு இடத்தை உறுதிப்படுத்தி வைத்திருந்தனர்.
ஆன இவர் தான் பெரிய ஆள் எண்ட பில்டப்ப ஏற்படுத்தி தன்ர பாட்டுக்கு தான் நினைச்ச இடமெல்லாம் போய்வந்து தான் நிக்க ஒழுங்கா வழிவிடோணும் எண்டு கூறி தனக்கு பின்னால் முன்னால் இருந்தவர்களுடன் வீணாக சண்டைக்கு போய்க்கொண்டிருந்தான். பலருடன் முண்டி கடைசியாக என்னோடயும் சண்டைக்கு வந்தான். என்னை தட்டி ”ஏன் இதில நிக்கிறாய்? பின்னுக்கு போ” என்றான் கறாராக. முதலே இதெல்லாம் பாத்துக்கொண்டிருந்த எனக்கு அவன பாக்கவே செம கடுப்பா இருந்தது. ஆனால் அவனுடன் வந்த ஆக்கள்கூட. SO கடும் கோபத்தில இருந்தாலும் வாயை திறக்காது கடுமையாக முறைச்சு பாத்தேன்.
அது அவனுக்கு கோபத்தை வரவழைத்திருக்கவேண்டும். சிங்கள தூசனத்தால் திட்டினான். (எனக்கு பெரிய டவுட். ஏன் கொழும்பில தியட்டருக்கு வருகிறாக்கள் மற்றவய திட்டுறதுக்கோ ஏதாவது கேக்கவோ சிங்களத்த பாவிக்கினம்? பாக்கவந்தது தமிழ் படம் வருறதில 99% தமிழாக்கள். ஏன் சிங்களத்தில் பந்தா விடுகினம்?) உண்மையில் அவனை திருப்பி திட்டுற அளவுக்கு எனக்கு சிங்களம் தெரியாது. அதால ”உனக்கு தமிழ் தெரியாதா? சிங்களத்தில பெருசா விடுறாய்” என்று கடும்தொனியில் கேட்டேன். வாயை வைத்தால் வீண் சிக்கல்கள் வருமெண்டு பொறுத்திருந்தாலும் கோபமேலிட்டால் கதைக்காமல் இருக்க முடியவி்ல்லை.
உடனே அவனோடு வந்திருந்த மற்ற எருமைகள் எல்லாம் ”ஏய் டேய்” எண்டு கத்த அவனும் என்ர சேட்டைபிடித்து இழுத்து அடிக்கிற அளவுக்கு வர மற்றவர்கள் ஒரு மாதிரி பிடித்து எனக்கு அடிவிழாமல் காப்பாற்றி விட்டனர். ஆள் பலம் எம்மிடத்தில் இல்லையென்பதால் பம்மிக்கொண்டு கோபம் வந்தும் அடக்கிகொண்டு சத்தம்போடாம அப்பிடியே இருந்து விட்டோம். அவனது மண்டையை கோடாலியால் பிளக்கோணும் என்கிற அளவுக்கு எனக்கு கோபம். மற்ற நண்பனுக்கு அவனின்ர மண்டையை சுவரில போட்டு அடிக்கோணும் என்கிற அளவுக்கு இருந்ததாக சொன்னான்.
அவன் தொடர்ந்தும் தனது சாகசங்களை மற்றவர்களிடமும் அரங்கேற்றிக்கொண்டிருந்தான். என்ன செய்ய மற்றவர்களும் ஆள் பலம் இல்லாது கம்முன்னு இருந்தார்கள். அவனுடன் ஏட்டிக்போட்டியாக சண்டையிட போன இன்னொருவரும் போதிய அதரவில்லாமல் கொஞ்சம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அந்தநேரத்தில் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் கடுப்பாகி ஒரு சண்டியனிடம் phoneபண்ணி சொல்லியிருக்கவேண்டும். தூரத்திலிருந்தே கத்தியபடி அந்த குழப்பம்காசியை சிங்களத்தில் பெரிசாக வைதபடி ஒருவர் வேறு இருவருடன் வந்து கொண்டிருந்தார். அவரது உடற்கட்டும் பேச்சின் கடுமையையும் பார்த்து அவ்வளவு நேரமும் பிலிம் காட்டியவர் கதிகலங்கியே போனார். தனது பேச்சைக்குறைத்து அடங்கிப்போனார்.
முதலே கடுப்பிலிருந்த மக்கள் கூட்டமும் புதிதாக வந்தவருடன் சேர்ந்து வசை மாரி பொழிய தொடங்கினர். அவனுக்கு என்ன செய்யவதென்றே புரியவில்லை பெட்டிப்பாம்பு போல் அடங்கிப்போனான். ஆனால் வந்தவர் விடுவதாக இல்லை ”வெளிய வா உனக்கு சாத்துறன்” எண்டு அந்த இடத்தை விட்டு அகலாமலேயே நின்று கொண்டிருந்தார். அவனுக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு வாயில் வார்த்தைகளே வர தந்தளித்தது கையால் ”சும்மா தானே நிக்கிறன். நீங்க போங்க” என்பதுபோல் சைகை காட்டினான்.
அவ்வளவு நேரமும் கைப்பிள்ளைகளுடன் தன்ர வீரத்த காட்டியவருக்கு இப்ப கதைக்கவே முடியாத நிலை. பட்ட நோண்டி. தூக்கு போட்டு சாகிற அளவுக்கு பலத்த அவமானம். தலையையே வெளியே காட்ட முடியாமல் அப்பிடியே கூட்டத்திற்குள் ஒளிந்து கொண்டுவிட்டான். எங்களுக்கு தியட்டருக்கு வெளியிலேயே நல்ல படம் பாத்த திருப்தி. அவனிட்ட சேட்டைக்கு உடனேயே பதிலடி கொடுக்கப்பட்டது. எது நடக்க வேண்டுமென எதிர்பார்த்தோமோ அது அப்பிடியே அச்சொட்டாக நடந்தது.
படம்வருவதற்கு முதலே பாடல்காட்சி எடுத்த விதம் என்று போட்ட அலப்பறைகள் எல்லாம் செல்லாக்காசாகின. படத்தின் trailerஐ பார்த்தே படத்தின் கதையை அச்சொட்டாக பலரால் ஊகிக்க முடிந்தமையாலோ என்னவோ படத்தில் thrillingகையோ சுவாரஸ்ய தன்மையையோ கடைசிவரை காணமுடியவில்லை.
நான் படம்பார்த்தபோது படத்தில் பேசப்பட்டிருந்த தமிழ் உணர்வை தூண்டும் இலங்கைக்கு எதிரான வசனங்கள் நீக்கப்பட்டிருந்தன. இலங்கையில் வெளியிட்ட முதல் காட்சிகளிலேயே இவை அகற்றப்பட்டிருந்தனவா என்பதை முதல்காட்சிகள் பார்த்தவர்கள் யாராவது சொல்லுங்கள். இவ்வசனங்கள் உள்ள காட்சிகள் முகப்புத்தகத்தில் பரவலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. யாராவது பார்க்காமல் தவறவிட்டிருந்தால் பார்த்துக்கொள்ளுங்கள்.
படத்திலே சொல்லப்பட்ட, சொல்லவந்த விடயங்கள் பாராட்டுதற்குரியது. துணிச்சலுக்குரியது. பழைய வரலாற்றையும், தமிழர் பெருமைகளையும் மக்கள் மறந்து விடக்கூடாது என்ற நல்ல செய்தியை படம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறது. ஆனால் பொழுதுபோக்கு ஊடகமாக மாறிவிட்ட இந்த சினிமாத்துறையில் படம் ஒன்று வெற்றிபெற, மக்கள் மனதில் நிலைத்துவிட பல விடயங்களிலும் மிகவும் கரிசனையாக இருந்திருக்கவேண்டும். Memento படத்தை ஆட்டையை போட்டு ”கஜினி” படத்தை முருகாஸ் தந்திருந்தாலும் அதில் screenplayல் தனது தனிமுத்திரையை பதித்திருந்த இவரால் 7ம் அறிவில் அதன் 20%ஐ கூட தரமுடியவில்லை. தீனா, ரமணா, கஜனி என்று ஹட்ரிக் அடித்த இவர் இந்த படத்தில் சறுக்கியது சூர்யா ரசிகனாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டே ஆகவேண்டிய ஒன்று.(படம் வெல்கிறதோ வெல்லாமல் விடுகிறதோ அது வேறு விடயம்)
படத்தின் ஆரம்ப காட்சிகள் நன்றாக அழகாக எடுக்கப்பட்டிருந்தாலும் கதை சொல்லப்படுவது போல் (like documentary film) எடுக்கப்பட்டிருந்தமை Discovery channel programஐ பார்ப்பதை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது. அது ஆரம்பத்திலேயே படத்தின் slowness உணர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது. அதிலும் தாங்கமுடியாம ”போதிவர்மன் யார்? உங்களுக்கு தெரியுமா?” என்று பொதுமக்களை கேட்பதை கூடி படத்தில் புகுத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது. தாங்கள் படம் எடுப்பதற்கு இவ்வளவு study & work பண்ணியிருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லவே இதை புகுத்தியிருப்பதாக உணர முடிகின்றது.
படத்திற்கு தேவையான கதையை, அதன் கோர்வைகளை நன்றாக ஆராய்நது கஸ்டப்பட்டு எமக்கு தெரியாத வரலாற்றை அறிந்தே முருகதாஸ் உருவாக்கியிருக்கிறார் என்பது உண்மை. ஆனால் தான் அறிந்ததை அப்பிடிய சொல்லிடோணும் என்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு Over confidenceல் திரைக்கதையில் சொதப்பிவிட்டார் AR.முருகதாஸ். 6வருடங்களாக புதிதாக படம் எடுக்காமல் (இந்தி கஜினி தமிழின் றீமேக் அதை புது படமாக கருத முடியாது) இருந்த இவரால் எல்லாவற்றிலும் கரிசனையெடுத்து சிறப்பாக ஒரு படத்தை தரமுடியாதது சூர்யா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே.
படத்தில் வரும் ஆரம்ப சண்டைக்காட்சிகளும், டொங்லீயாக வரும் ஜொனி றீநிகுயேன் (Johny TriNguyen) தோன்றும் action காட்சிகளும், மற்றைய சில சண்டைக்காட்சிகளும் பிரமாண்டத்தை ஏற்படுத்த முயன்றிருக்கின்றது. ஆனால் இவர்கள் கொடுத்த ஓவர்பில்டப்பிற்கு ஏற்ற மாதிரி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
போதிதர்மராக வரும் சூர்யா இன்னும் அசத்தியிருக்கலாமோ என எண்ண தோன்றுகிறது. மற்ற சூர்யா வழமைபோல. ஸ்ருதியின் பின்னால் சுற்றும் காட்சிகளில் வாரணம் ஆயிரம் போலவே யதார்த்தமாக நடித்திருந்தார். ஆனால் இன்னும் சூர்யாவை திறமையாக பல இடங்களில் பயன்படுத்தியிருக்கலாம். தமிழில் இந்த படத்திலேயே ஷ்ருதிஹாசனும் வியட்நாம் நடிகர் Johny TriNguyenkம் அறிமுகமாகின்றனர்.
ஷ்ருதிஹாசன் சில இடங்களில் அழகாக தெரிகிறார். ஆனால் பல இடங்களில் அப்பிடி தெரியவில்லை. உயரமாக இருக்கிறார். தலைமயிர் டோப் போட்டுவிட்டமாதிரி செயற்கைதனமாக தெரிகிறது. வருகிறார் ஓரளவு நடிக்கிறார். குற்றம் சொல்வதற்கில்லை. Johnyக்கு பெரிதாக வசனங்கள் இல்லாதபடியால் தனது Smartnessஆலும் Body Languageஆலும் தேவையானதை செய்துவிடுகிறார். இந்தப்படத்தில் தியட்டரில் பலத்த ஆரவாரம் இவருக்குதான் கிடைக்கிறது. சிறிய சிறிய காட்சிகளில் வந்து போகும் குள்ளர் பக்ருதான் படத்தில் வரும் ஒரிரு நகைச்சுவைக்கு காரணம். படம் சுவரஸ்யமாக செல்வதற்கு குறைந்தது நல்ல நகைச்சுவை நடிகரையோ அல்லது படஓட்டத்துடனேயோ(கஜினி போல்) நகைச்சுவைகளை சேர்த்திருக்க வேண்டும்.
படத்தின் பாடல்களும் எதிர்பார்த்த அளிவில் பெரிய ஹிட் ஆகாத நிலையில் மீண்டும் ஹாரிஸ் அரைச்சமாவையே திருப்பி அரைப்பதாகவும் வேறு பாடல்களை சுட்டுதான் பாடல்களை போடுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு இந்த பாடல்கள் வெளியிட்டபின்னரும் அதிகரித்தே காணப்பட்டது. இளவட்டங்களுக்கு பிடித்த பாடலாக SPB பாடிய ”யம்மா யம்மா” என்னும் காதல் தோல்வி பாடல் அமைந்துவிட்டிருந்தது. வீர உணர்ச்சியை விதைக்கும் பல்ராம் பாடிய ”இன்னும் என்ன” பாடலும் பலரது வரவேற்பை பெற்றிருந்தது.
Oh Ringa Ringa பாடலிற்கு பல dancersஐ விட்டு ஆடவிட்டு படமாக்கியது ஒரு ஒழுங்கற்று குப்பையாக அசிங்கமாக இருந்ததுடன் இவ்வளவு பேர் ஆடினார்களா? என்பது ஒழுங்காக ஒளிப்பதிவில் தெரியவில்லை (பாடல்கள் உருவான விதத்தில் அவர்கள் சொன்னதை வைத்தே பிடிக்க முடிந்தது). ஒளிப்பதிவாளர் ரவிசந்திரன் ஒருக்கா இரண்டு தரம் மட்டும் சற்று உயரத்திலிருந்து சரிவாக ஒளிப்பதிவு செய்திருந்தார். பல நேரங்களில் கிடையாக ஆடுவோருக்கு பக்கத்திலயே எடுத்து அனைவரையும் ஒருசேர lensற்குள் கொண்டுவர தவறியிருந்தார்.
அதுபோலவே ”யம்மா யம்மா” பாடலுக்கும் சூர்யாவை மட்டும் தெளிவாகவும் சுற்றியுள்ள காட்சிகளை blurred ஆக வித்தியாசமான lensஐ பயன்படுத்தி எடுத்த பாடல் காட்சியும் சொதப்பிபோய் விட்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் சூர்யாவும் சேர்ந்தே blurredஆகியிருந்தார். ஆனால் ”யெல்லேலமா” பாடல்காட்சி எடுக்கபட்ட விதம் நன்றாக இருந்தது. ”முன் அந்திசாலை” பாடலிற்குரிய காட்சியமைப்பும் எதிர்பார்த்த அளவு வரவில்லை. இன்னும் சிறப்பாக இயற்கை அழகுடன் எடுத்திருக்கலாம்!
நல்ல விடயங்களை வித்தியாசமாக, உணர்வோடு சொல்லவந்த AR.முருகதாஸை பாராட்டலாம். எனினும் இன்னும் காத்திரமான வகையில் மக்களை படத்தோடு கட்டிப்போடும் வகையில் சொல்லியிருக்கலாம். கொடுத்தபில்டப்புக்கும் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பையும் ”7ம்அறிவு” திருப்தி செய்யவில்லை. A, B சென்ரர் ரசிகர்கள் படத்தை விரும்பி பார்த்தாலும் Cசென்ரர் ரசிகர்களிடத்தே இந்தப்படம் பெரிய வரவேற்பை பெறுமா எனபது மிகப்பெரிய கேள்வி. மொத்தத்தில் இந்தப்படமும் ”பரவாயில்லை” ரகம்தான்.
ஆனால் ”வேலாயுதம்” ”7ம்அறிவு” இரண்டிற்குமிடையிலான போட்டியில் வேலாயுதம்தான் 7ம் அறிவைவிட நகைச்சுவைகள் மூலம் கவர்ந்து, மக்களை ஜாலியாக வைத்திருந்து ஒரு படி மேலே நிற்கிறது என்பது பொதுவான கருத்து. C சென்ரர் ரசிகர்களின் அமோக ஆதரவு வேலாயுதத்திற்கான அதிக பலம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக படங்களை விரும்புவோருக்கு நிச்சயம் வேலாயுதத்தைவிட 7ம் அறிவு கூடுதலாக பிடிக்கும்.

மேலதிக தகவல்: அந்த எருமையின் பெயர் நர்மதன். கறுப்பான உயரமானவன். வலது காதில் வளைந்த தோடு போட்டவன். இவனை பற்றி தகவல்தெரிந்தவர்கள் பாத்து கவனித்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------------
சில படத்துக்கு கொடுக்கும் பில்டப்புக்கள் கூரையை பிச்சுகிட்டு போயி படத்தின் எதிர்பார்ப்புக்களை எகிறவைத்துவிட்டு படம் வெளிவந்த பிறகு அந்த பில்டப்பே படத்துக்கு ஆப்பாக முடிந்து விடுவதுண்டு. என்னைப்போறுத்தவரை அப்படியொரு படம்தான் 7ம் அறிவு. AR.முருகதாஸ், சூர்யா, ஹாரிஸ்ஜெயராஜ், அன்டனி, பீட்டர்ஹெயின் என்று பாரிய நட்சத்திரப்பட்டாளங்கள் சேர்ந்து ஒரு சூப்பர் படம் தருவார்கள் என்று பார்த்தால் நினைத்தது நடக்கவில்லை.படம்வருவதற்கு முதலே பாடல்காட்சி எடுத்த விதம் என்று போட்ட அலப்பறைகள் எல்லாம் செல்லாக்காசாகின. படத்தின் trailerஐ பார்த்தே படத்தின் கதையை அச்சொட்டாக பலரால் ஊகிக்க முடிந்தமையாலோ என்னவோ படத்தில் thrillingகையோ சுவாரஸ்ய தன்மையையோ கடைசிவரை காணமுடியவில்லை.
நான் படம்பார்த்தபோது படத்தில் பேசப்பட்டிருந்த தமிழ் உணர்வை தூண்டும் இலங்கைக்கு எதிரான வசனங்கள் நீக்கப்பட்டிருந்தன. இலங்கையில் வெளியிட்ட முதல் காட்சிகளிலேயே இவை அகற்றப்பட்டிருந்தனவா என்பதை முதல்காட்சிகள் பார்த்தவர்கள் யாராவது சொல்லுங்கள். இவ்வசனங்கள் உள்ள காட்சிகள் முகப்புத்தகத்தில் பரவலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. யாராவது பார்க்காமல் தவறவிட்டிருந்தால் பார்த்துக்கொள்ளுங்கள்.
படத்திலே சொல்லப்பட்ட, சொல்லவந்த விடயங்கள் பாராட்டுதற்குரியது. துணிச்சலுக்குரியது. பழைய வரலாற்றையும், தமிழர் பெருமைகளையும் மக்கள் மறந்து விடக்கூடாது என்ற நல்ல செய்தியை படம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறது. ஆனால் பொழுதுபோக்கு ஊடகமாக மாறிவிட்ட இந்த சினிமாத்துறையில் படம் ஒன்று வெற்றிபெற, மக்கள் மனதில் நிலைத்துவிட பல விடயங்களிலும் மிகவும் கரிசனையாக இருந்திருக்கவேண்டும். Memento படத்தை ஆட்டையை போட்டு ”கஜினி” படத்தை முருகாஸ் தந்திருந்தாலும் அதில் screenplayல் தனது தனிமுத்திரையை பதித்திருந்த இவரால் 7ம் அறிவில் அதன் 20%ஐ கூட தரமுடியவில்லை. தீனா, ரமணா, கஜனி என்று ஹட்ரிக் அடித்த இவர் இந்த படத்தில் சறுக்கியது சூர்யா ரசிகனாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டே ஆகவேண்டிய ஒன்று.(படம் வெல்கிறதோ வெல்லாமல் விடுகிறதோ அது வேறு விடயம்)
படத்தின் ஆரம்ப காட்சிகள் நன்றாக அழகாக எடுக்கப்பட்டிருந்தாலும் கதை சொல்லப்படுவது போல் (like documentary film) எடுக்கப்பட்டிருந்தமை Discovery channel programஐ பார்ப்பதை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது. அது ஆரம்பத்திலேயே படத்தின் slowness உணர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது. அதிலும் தாங்கமுடியாம ”போதிவர்மன் யார்? உங்களுக்கு தெரியுமா?” என்று பொதுமக்களை கேட்பதை கூடி படத்தில் புகுத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது. தாங்கள் படம் எடுப்பதற்கு இவ்வளவு study & work பண்ணியிருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லவே இதை புகுத்தியிருப்பதாக உணர முடிகின்றது.
6பக்ஸுடன் சூர்யா |
படத்திற்கு தேவையான கதையை, அதன் கோர்வைகளை நன்றாக ஆராய்நது கஸ்டப்பட்டு எமக்கு தெரியாத வரலாற்றை அறிந்தே முருகதாஸ் உருவாக்கியிருக்கிறார் என்பது உண்மை. ஆனால் தான் அறிந்ததை அப்பிடிய சொல்லிடோணும் என்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு Over confidenceல் திரைக்கதையில் சொதப்பிவிட்டார் AR.முருகதாஸ். 6வருடங்களாக புதிதாக படம் எடுக்காமல் (இந்தி கஜினி தமிழின் றீமேக் அதை புது படமாக கருத முடியாது) இருந்த இவரால் எல்லாவற்றிலும் கரிசனையெடுத்து சிறப்பாக ஒரு படத்தை தரமுடியாதது சூர்யா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே.
படத்தில் வரும் ஆரம்ப சண்டைக்காட்சிகளும், டொங்லீயாக வரும் ஜொனி றீநிகுயேன் (Johny TriNguyen) தோன்றும் action காட்சிகளும், மற்றைய சில சண்டைக்காட்சிகளும் பிரமாண்டத்தை ஏற்படுத்த முயன்றிருக்கின்றது. ஆனால் இவர்கள் கொடுத்த ஓவர்பில்டப்பிற்கு ஏற்ற மாதிரி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
Johny TriNguyenk (Dong Lee) |
போதிதர்மராக வரும் சூர்யா இன்னும் அசத்தியிருக்கலாமோ என எண்ண தோன்றுகிறது. மற்ற சூர்யா வழமைபோல. ஸ்ருதியின் பின்னால் சுற்றும் காட்சிகளில் வாரணம் ஆயிரம் போலவே யதார்த்தமாக நடித்திருந்தார். ஆனால் இன்னும் சூர்யாவை திறமையாக பல இடங்களில் பயன்படுத்தியிருக்கலாம். தமிழில் இந்த படத்திலேயே ஷ்ருதிஹாசனும் வியட்நாம் நடிகர் Johny TriNguyenkம் அறிமுகமாகின்றனர்.
ஷ்ருதிஹாசன் சில இடங்களில் அழகாக தெரிகிறார். ஆனால் பல இடங்களில் அப்பிடி தெரியவில்லை. உயரமாக இருக்கிறார். தலைமயிர் டோப் போட்டுவிட்டமாதிரி செயற்கைதனமாக தெரிகிறது. வருகிறார் ஓரளவு நடிக்கிறார். குற்றம் சொல்வதற்கில்லை. Johnyக்கு பெரிதாக வசனங்கள் இல்லாதபடியால் தனது Smartnessஆலும் Body Languageஆலும் தேவையானதை செய்துவிடுகிறார். இந்தப்படத்தில் தியட்டரில் பலத்த ஆரவாரம் இவருக்குதான் கிடைக்கிறது. சிறிய சிறிய காட்சிகளில் வந்து போகும் குள்ளர் பக்ருதான் படத்தில் வரும் ஒரிரு நகைச்சுவைக்கு காரணம். படம் சுவரஸ்யமாக செல்வதற்கு குறைந்தது நல்ல நகைச்சுவை நடிகரையோ அல்லது படஓட்டத்துடனேயோ(கஜினி போல்) நகைச்சுவைகளை சேர்த்திருக்க வேண்டும்.
படத்தின் பாடல்களும் எதிர்பார்த்த அளிவில் பெரிய ஹிட் ஆகாத நிலையில் மீண்டும் ஹாரிஸ் அரைச்சமாவையே திருப்பி அரைப்பதாகவும் வேறு பாடல்களை சுட்டுதான் பாடல்களை போடுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு இந்த பாடல்கள் வெளியிட்டபின்னரும் அதிகரித்தே காணப்பட்டது. இளவட்டங்களுக்கு பிடித்த பாடலாக SPB பாடிய ”யம்மா யம்மா” என்னும் காதல் தோல்வி பாடல் அமைந்துவிட்டிருந்தது. வீர உணர்ச்சியை விதைக்கும் பல்ராம் பாடிய ”இன்னும் என்ன” பாடலும் பலரது வரவேற்பை பெற்றிருந்தது.
Oh Ringa Ringa பாடலிற்கு பல dancersஐ விட்டு ஆடவிட்டு படமாக்கியது ஒரு ஒழுங்கற்று குப்பையாக அசிங்கமாக இருந்ததுடன் இவ்வளவு பேர் ஆடினார்களா? என்பது ஒழுங்காக ஒளிப்பதிவில் தெரியவில்லை (பாடல்கள் உருவான விதத்தில் அவர்கள் சொன்னதை வைத்தே பிடிக்க முடிந்தது). ஒளிப்பதிவாளர் ரவிசந்திரன் ஒருக்கா இரண்டு தரம் மட்டும் சற்று உயரத்திலிருந்து சரிவாக ஒளிப்பதிவு செய்திருந்தார். பல நேரங்களில் கிடையாக ஆடுவோருக்கு பக்கத்திலயே எடுத்து அனைவரையும் ஒருசேர lensற்குள் கொண்டுவர தவறியிருந்தார்.
அதுபோலவே ”யம்மா யம்மா” பாடலுக்கும் சூர்யாவை மட்டும் தெளிவாகவும் சுற்றியுள்ள காட்சிகளை blurred ஆக வித்தியாசமான lensஐ பயன்படுத்தி எடுத்த பாடல் காட்சியும் சொதப்பிபோய் விட்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் சூர்யாவும் சேர்ந்தே blurredஆகியிருந்தார். ஆனால் ”யெல்லேலமா” பாடல்காட்சி எடுக்கபட்ட விதம் நன்றாக இருந்தது. ”முன் அந்திசாலை” பாடலிற்குரிய காட்சியமைப்பும் எதிர்பார்த்த அளவு வரவில்லை. இன்னும் சிறப்பாக இயற்கை அழகுடன் எடுத்திருக்கலாம்!
AR.Murugadas + Udhyanithi Stalin + Surya |
நல்ல விடயங்களை வித்தியாசமாக, உணர்வோடு சொல்லவந்த AR.முருகதாஸை பாராட்டலாம். எனினும் இன்னும் காத்திரமான வகையில் மக்களை படத்தோடு கட்டிப்போடும் வகையில் சொல்லியிருக்கலாம். கொடுத்தபில்டப்புக்கும் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பையும் ”7ம்அறிவு” திருப்தி செய்யவில்லை. A, B சென்ரர் ரசிகர்கள் படத்தை விரும்பி பார்த்தாலும் Cசென்ரர் ரசிகர்களிடத்தே இந்தப்படம் பெரிய வரவேற்பை பெறுமா எனபது மிகப்பெரிய கேள்வி. மொத்தத்தில் இந்தப்படமும் ”பரவாயில்லை” ரகம்தான்.
ஆனால் ”வேலாயுதம்” ”7ம்அறிவு” இரண்டிற்குமிடையிலான போட்டியில் வேலாயுதம்தான் 7ம் அறிவைவிட நகைச்சுவைகள் மூலம் கவர்ந்து, மக்களை ஜாலியாக வைத்திருந்து ஒரு படி மேலே நிற்கிறது என்பது பொதுவான கருத்து. C சென்ரர் ரசிகர்களின் அமோக ஆதரவு வேலாயுதத்திற்கான அதிக பலம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக படங்களை விரும்புவோருக்கு நிச்சயம் வேலாயுதத்தைவிட 7ம் அறிவு கூடுதலாக பிடிக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி
- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
11 comments:
நல்ல விமர்சனம் நடுநிலையுடன்....
விமர்சனத்தவிட படம்பார்க்கப்போன கதை பெரிசா இருக்கே..
உண்மைய சொல்லுங்க அண்ணே அடி விழுந்திச்சா இல்லையா
மூன்றாம் கோணம்
பெருமையுடம்
வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30
இடம்:
ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்
போஸ்டல் நகர்,
க்ரோம்பேட்,
சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )
11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து
எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்
பதிவர் சந்திப்பு
அழகான விமர்சனம்.ஆறுதலாய் வந்தாலும் சூப்பர்!
ஹிஹி அண்ணனுக்கு வந்த கோபத்தில...
நமக்கு ஒரு கோல் போட்டிருக்கலாமே!
அடுத்த நிமிசமே ஓடி போயிருப்போம்!:)
முதல் காட்சியிலும் அந்த வசனங்கள் இல்லை அண்ணா.நடுநிலையான விமர்சனம்.
ச்சே அந்த எருமை படம் பார்த்த பிறகு உங்களிடம் வம்பிலுத்திருக்கலாம், தமிழனனென்ற திமிரில போட்டு சாத்தியிருப்பிங்க.
உண்மையிலேயே இதுதான்யா நடுனிலையான விமர்சனம்
இவளவு பிரச்சனை நடந்திருக்கு உங்களை காப்பாற்ற 'வேலாயுதம்' நேர்ல வரலையா? ஒருவேளை சூர்யா படம் ஓடிர திரையரங்கென்று வரலையோ :-))
இந்த மாதிரி ஒருத்தனை நீங்க திரையரங்கில பார்த்ததுக்கே இம்புட்டு கோபம் வருதே; இங்க விடுமுறை நாட்களில் பள்சரில் சில நாய்கள் பண்ணிற அலப்பறை தாங்க முடியல; ஒரு அந்நியன் சூட்டுக்கு ஓடர் பண்ணலாம் என்று இருந்தான், உங்க கோபத்தை பாக்கிறப்போ கூடவே ஒரு வேலாயுதம் or கந்தசாமி சூட்டுக்கும் ஓடர் குடுக்கலாம் போல இருக்கே :-)
விமர்சனம் as usual simply superb.
Awesome review as usual! Keep it up Carthigan!!!
படம் பார்க்கப் போன கதை - தனக்கு தனக்கு வந்தால் தான் :)
(எனது மங்காத்தா பார்க்கப் போன கதைக்கு தாங்கள் இட்ட பின்னூட்டத்தை மீண்டும் வாசிக்க அழைக்கிறேன் ;))
விமர்சனம் - :)
//மொத்தத்தில் இந்தப்படமும் ”பரவாயில்லை” ரகம்தான்.//
சூர்யாவின் தீவிர ரசிகராக இப்படி ஒரு 'நடுநிலை'க் கருத்து வந்ததே நல்ல விஷயம் தான் சகோ :)
// ”வேலாயுதம்” ”7ம்அறிவு” இரண்டிற்குமிடையிலான போட்டியில் வேலாயுதம்தான் 7ம் அறிவைவிட நகைச்சுவைகள் மூலம் கவர்ந்து, மக்களை ஜாலியாக வைத்திருந்து ஒரு படி மேலே நிற்கிறது என்பது பொதுவான கருத்து.//
இதுவே என்னுடையதும் :)
வித்தியாசமான அனுபவத்துடன் காத்திரமான விமர்சனம்!
tamizh nadula mattum than padathai pathi ippadi soldringa ana indha padatha hibdiyil remake panna poranga ana namakku pudikala mudhala thamizha ozhunga yezhutha kathukonga.thamizha vaayala mattum pesuna pothathu dna la irukanum
but,sorry ungal karuthu kanippu thavaraga poivittadhu 7aum arivu nichayamaga oru arivaaligaluku mattum athavathu oru thamizharuku mattum
கருத்துரையிடுக