குட்டை + கல் :'(

 அமைதியாக இருந்த குட்டைகளை நோக்கி வீணாக பலர் கற்களை  எறிகின்றனர். இது கடந்த வாரத்தில் பலரும் பதிவுலகத்தில் முணுமுணுத்த வார்த்தையாக இருக்கும்.

ஒரு சில கற்கள் குட்டையை வேணுமென்றே கலக்கி குழப்பும் நோக்கத்துடன் எறியப்பட்டிருக்கலாம். ஒரு சில கற்களோ நடு வீதியில் இடைஞ்சலாக  இருந்தமையால் வீதியை சீராக்கும் நோக்கில் குட்டையை நோக்கி சிலரால் எறியப்பட்டிருக்கலாம். ஆனால் இரண்டிற்குமான வித்தியாசத்தை உண்மையாக எறிந்தவனின் மனசாட்சியே அறியும். பார்வையாளராக இருப்பவர்களுக்கு அதன் நோக்கம் சரியாக விளங்கியிருக்காது. உண்மையாக வீதியின் சீர்த்தன்மையை வேண்டி குட்டையை நோக்கி கல் எறிந்தவன் கூட பிழையாக நோக்கப்பட்டிருக்கலாம்.  நான் எப்போதும் இரண்டாமவதராகவே  இருக்க விரும்புகிறேன். 


எல்லோரும் எல்லோரையும் ஊக்குவிக்கவேண்டுமென்றே, விரும்பியிருந்த எனது கருத்து எனது சொல்லாடல் பிழையாலோ, சொன்ன இடத்தின் தவறாலோ பின் உருவ அமைப்புக்கள் தெளிவாக்கப்பட்டு(?) குதர்க்கமாக விளக்கம் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை ஒரு போதும் பிரபலத்திற்காக ஒருவரையும் நான் குறை கூறியதில்லை. கூறப்போவதுமில்லை. அதற்காக சிலர் சிலரிலுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்காக பலவற்றை பலவிதமாக பயன்படுத்துவதை நான் வரவேற்கவில்லை. அவர்கள் இன்னும் பக்குவப்படவேண்டும் என்றே கருதுகிறேன்

ஆனால் என்னை மதித்து எனது தளத்திற்கு பின்னூட்டம் இடும் நண்பர்களின் தளத்திற்கு சென்று அவர்களின் பதிவு தொடர்பான எனது ஆதரவானதோ எதிரானதோ கருத்தை கூறுவேன். அதற்கு ஒரு போதும் பின்னிற்கப் போவதில்லை. அதற்காக அந்த பதிவுகளின் கருத்துதான் எனது கருத்து என்று யாராவது வியாக்கியானம் கற்பித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.


இறுதியாக பதிவுலகத்தில் இருக்கும் எல்லோரும் (Positive / Negative கருத்துடையோர்) எனக்கு நண்பர்களே. நல்ல பதிவுகளை ஊக்குவிப்பேன்.  ஒன்றாக சேர்ந்து பயணிப்போம். இங்கே நடக்கும் (?) ஒரு அரசியலும் எனக்கு சத்தியமாக விளங்குவதில்லை!!!

பி.கு: எனது முதல் பதிவில் குறிப்பிட்டது போல வெற்றியாளர் விபரம் இந்த பதிவில் தர முடியவில்லை. நாளைய பதிவில் விபரங்கள் அறிவிக்கப்படும்!
நன்றி.

7 comments:

Unknown சொன்னது…

ஹஹஅஹா உங்கள் கடைசி பன்ச் பிடிச்சிருக்கு!!

ஆதிரை சொன்னது…

//எல்லோரும் எல்லோரையும் ஊக்குவிக்கவேண்டுமென்றே, விரும்பியிருந்த எனது கருத்து எனது சொல்லாடல் பிழையாலோ, சொன்ன இடத்தின் தவறாலோ பின் உருவ அமைப்புக்கள் தெளிவாக்கப்பட்டு(?) குதர்க்கமாக விளக்கம் கற்பிக்கப்பட்டிருக்கின்றது.//

இது எங்கே???

anuthinan சொன்னது…

:) sme times poka poka puriyalam. :D

Mathuran சொன்னது…

//ஒரு சில கற்கள் குட்டையை வேணுமென்றே கலக்கி குழப்பும் நோக்கத்துடன் எறியப்பட்டிருக்கலாம். ஒரு சில கற்களோ நடு வீதியில் இடைஞ்சலாக இருந்தமையால் வீதியை சீராக்கும் நோக்கில் குட்டையை நோக்கி சிலரால் எறியப்பட்டிருக்கலாம். ஆனால் இரண்டிற்குமான வித்தியாசத்தை உண்மையாக எறிந்தவனின் மனசாட்சியே அறியும். பார்வையாளராக இருப்பவர்களுக்கு அதன் நோக்கம் சரியாக விளங்கியிருக்காது//

உண்மை நண்பா... பிரச்சனைகளுக்கெல்லாம் மூலகாரணம் ஒரு விடயத்தை நன்கு ஆராயாமல் கருத்துக்களை முன்வைப்பதுதான்

நல்லதொரு அலசல்

நிரூபன் சொன்னது…

பாஸ், பின்னவீனத்துவம் மூலம் பல விடயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறீங்க.

ARV Loshan சொன்னது…

:)

ஒன்றாக சேர்ந்து பயணிப்போம்//
:)

ARV Loshan சொன்னது…

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் :)

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்