ஹாரிஷ் ஜெயராஜ்+வேறு இசையமைப்பாளர்கள்
அக&
16
பொட்டலம் சார்பாக அனைவருக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இன்னும் இருண்டபடியே இருக்கும் எமது வாழ்வின் துன்பங்கள் துயரங்கள் தீர்ந்து சுதந்திரமாக வாழ இறைவனை பிரார்த்திப்போமாக. கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் பின்னர் இந்த தீபாவளி சிறப்பு பதிவு. பதிவுப்பக்கம் தலையே காட்டமுடியாத அளவிற்கு, நான் முதலே சொன்னவாறு கூடிய சுமைகள்.

இசையமைப்பாளர்களில் மெலடிகிங் ஹாரிஷ் ஜெயராஜிற்கு மற்றைய இசையமைப்பாளர்களை விட தனியான சிறப்பொன்று உண்டு. இவரது இசையில்

A.R.RAHMANனுக்கு அடுத்தபடியாக தமிழில் கூடுதலாக ஒரு படத்திற்கு ஊதியம் பெறும் இசையமைப்பாளராக இருக்கும் ஹாரிஷ், திறமை உடையவர்கள் தன்னுடைய போட்டியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நல்ல குணம் கொண்டவராக இருக்கிறார்.
இவ்வாறு இவர் பாடவைத்த இசையமைப்பாளர்களின் பெயர் பட்டியலும் அவர்களுக்கு கொடுத்த பாடலும் படத்தின் பெயரும் கீழே உங்களுக்காக.
- ரமேஸ் விநாயகம்- ”யாரிடமும் தோன்றவில்லை” (தொட்டிஜெயா)
- ஜாஸி ஹிப்வ்ட்- ”அண்டங்காக்க்கா” (அந்நியன்)
- பிரேம்ஜி அமரன்-”Hey Girls” (12B), ”அடகடகட அடபம்பம்” (சத்தியம்)
- G.V.பிரகாஸ்குமார்- ”காதல் யானை” (அந்நியன்), ”Xமச்சி” (கஜினி) ”Hello Miss இம்சையே” (உன்னாலே உன்னாலே”)
- யுகேந்திரன்- ”முதன் முதலாய்” (லேசா லேசா), ”கல்யாணம்தான் கட்டிகிட்டு”(சாமி)
- கைலாஷ்கர்- ”ரங்கு ரங்கம்மா”(பீமா), "உய்யலால உய்யலால நீதான்"(தாம் தூம்)
- லெஸ்லி லூயிஸ்- ”கண்ணும் கண்ணும் நோக்கியா”(அந்நியன்)
- சங்கர் மகாதேவன்- ”குமாரி”(அந்நியன்) ”ரங்கோலா கோலா”(கஜினி)
- கரிகரன்- ”நெஞ்சுக்குள் பெய்திடும்”(வாரணம் ஆயிரம்) ”கொல்முக மலரே”(மஜ்னு)
- சுருதி ஹாசன்- ”அடியே கொல்லுதே”( வாரணம் ஆயிரம்)
மேலே குறிப்பிட்ட சிலரை இசையமைப்பாளர்கள் என்று உங்கள் சிலருக்கு தெரிந்திருக்காது. எனவே அவர்கள் பெயருடன் அவர்கள் இசையமைத்த படங்கள் கீழே..
- ரமேஸ் விநாயகம் – அழகிய தீயே, நளதமயந்தி, ஜெர்ரி
- பிரேம்ஜி அமரன் – நெஞ்சத்தை கிள்ளாதே, தோழா, அதேநேரம்அதேஇடம்
- ஜாஸி ஹிப்வ்ட் – 4Students, தீநகர், பட்டாளம்
- யுகேந்திரன் - வீரமும் ஈரமும், பலம்
- கைலாஷ்கர் - Dasvidaniya, Pranali, The Traffic Signal அனைத்தும் ஹிந்தி படங்கள்
- லெஸ்லி லூயிஸ் &கரிகரன் - மோதிவிளையாடு, Colonial Cousins(Fusion Album)
- சங்கர் மகாதேவன் - ஆளவந்தான், யாவரும்நலம், Dil Chahta Hai, Bunty aur Babli (Hindi Films). சங்கர் மகாதேவன் இசையமைக்கும் போது Ehsaan-Loy இருவருடன் சேர்ந்தே இசையமைக்கின்றார். 3பேர் கொண்ட கூட்டணி.
- சுருதி ஹாசன் - உன்னைப்போல் ஒருவன், வேறு ஆல்பங்கள்
இதிலே எனக்கு பிடித்த "கண்ணும் கண்ணும் நோக்கியா'' பாடலின் வீடியோ காட்சி கீழே. பார்த்து ரசியுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
- அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்
- Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)
- பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I
- SLPLன் வளர்ச்சி எதிர்காலம்
- டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய
- திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)
- முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை
- HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)
- DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I
- திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
வலைப்பதிவு காப்பகம்
-
►
2012
(19)
- ► செப்டம்பர் (3)
-
►
2011
(29)
- ► செப்டம்பர் (2)
13 comments:
நிறையப் புதிய விடயங்கள். நன்றி.
நன்றிகள் Subankan ;)
nice one carthi.... keep this research in final year project too... ;)
சுருதி ஹாசன் - உன்னைப்போல் ஒருவன், வேறு அல்பங்கள்....///அல்பமா ஆல்பமா
Thx Thinks Why Not - Wonders How.
என்ன பெயரே புதினமாய் இருக்கு??
பைனல் இயர் புரொஜெக்ட்டா ஆ அப்பிடின்னா என்ன?
@ Shabi
சுருதி ஹாசன் - உன்னைப்போல் ஒருவன், வேறு அல்பங்கள்....///அல்பமா ஆல்பமா
ஓ நான் கவனிக்கவில்லை. திருத்தத்துக்கு நன்றி. இப்ப மாத்திட்டன் சரியா? ஆனா அதுவும் பொருந்தும்போலதான் கிடக்கு
/*...என்ன பெயரே புதினமாய் இருக்கு??..*/
always don't think why me? instead think why not and try me... ;)
நல்லதொரு ஆராய்ச்சி.. முன்பு ரஹ்மான் பற்றி ஒரு சிறப்பு நிகழ்ச்சி இதேபோல் செய்தேன்..
ஆனால் உங்கள் ஹாரிஸ் முயற்சி புதுசு..
//always don't think why me? instead think why not and try me... ;)//
superb ..
Please check youtube and search for "copy cat harris jeyeraj" to list all his copy cat works.
ஆஆஆ இதுக்கு முதலே பறுவாயில்லை. எனக்குதான் இங்கிலீசு அடிச்சாலும் ஏறாதெண்டு தெரியாதோ? என்னவோ பெயர் சுப்பராயிருக்கு. உங்கட விளக்கத்துக்கு லோசன் அண்ணாவும் என்னவோ எழுதியிருக்கிறபடியா சொல்லுறன். :)
நன்றி LOSHAN அண்ணா.
// நல்லதொரு ஆராய்ச்சி.
உங்கள் ஹாரிஸ் முயற்சி புதுசு.
பிறகென்ன நானுமொரு றிசேச்சர் ஆராய்ச்சியாளர்.. கைவசம் இதமாதிரி கனக்க சரக்கு கிடக்கு. பிட்டு பிட்டா நேரம் கிடைக்கேக்க வந்து போடுவன் அதையும் பாருங்கள். ஆனா நேரம்தான் கிடைப்பதில்லை.
Thx Joseph for ur comment..
இங்கிலிசு பாடல்களை சுப்பராக தமிழுக்கு மாற்ற இவருக்கு நிகர் இவர்தான். எப்படியோ எல்லாம் நல்லா இருக்குதானே. கேட்போம் ரசிப்போம்
Harris is my favoutite music director(next 2 rahman)too.
now he is going to work in hindi also
all posts are superb
keep in touch :)
Thx sanjeevan.. KIT
கருத்துரையிடுக