Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)

தற்போது நடைமுறையில் உள்ள Cricket rules பல காலங்காலமாக மாற்றங்களுக்குட்பட்டு தற்கால trendற்களுக்கமைவாக polish பண்ணப்பட்டவைதான். அப்படியான ஒரு விதி ஏற்படக்காரணமாக இருந்த சம்பவம் பற்றிதான் இந்தபதிவு சொல்லப்போகிறது.

இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆஷஸ் போட்டிகள் டெஸ்ட் போட்டிகளில் உலககிண்ணத்துக்கு ஒப்பானதாக கிரிக்கெட் கனவான்களால் மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தப்போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில்தான். இப்பிடி 1932-33 பருவகாலத்தில் போட்டி நடைபெற இருந்த காலத்தில் அவுஸ்திரேலியான அணி துடுப்பாட்டத்தில் Bradman தலமையில் கப்பலமானதாக இங்கிலாந்தின் காதில் குச்சிய விட்டு ஆட்டுமளவிற்கு தனிக்காட்டு ராஜாக்களாக இருந்தது. துடுப்பாட்டத்தில் இதில் போட்டி வேற அவுஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்துக்கு வெடிக்கலக்கம் போட்டி ஆரம்பமாக கனகாலத்துக்கு முதலே ஏற்பட்டுவிட்டது.

More fielders behind the popping crease on the on side at striker’s end

கேவலமான தோல்விகள் ஏற்படாமல் தடுக்க இங்கிலாந்து தலைவர் Jardine புத்திசாலித்தனமான(?) ஒரு திட்டத்தை வகுத்தார். துடுப்பாட்டவீரரின் உடம்பை தாக்ககூடிய Short pitch bouncing பந்துகளை leg stump lineல் அடிக்கடி போடவும் கூடுதலான வீரர்களை leg sideல் catching positionsகளில் சுற்றி அடிக்கி விடவும் திட்டம் வகுக்கப்பட்டது. இப்படியான உடம்பை பதம்பார்க்கும் பந்துவீச்சுக்களையே bodyline or leg theory bowling என்று சொல்கிறார்கள்.திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் Harold Larwood மற்றும் Bill Voce தேர்ந்தெடுக்கபட்டு திட்டமும் இரகசியமாக சொல்லப்பட்டது.

Deadly accurate very fast pacer Harold Larwood

இங்கிலாந்து அணித்தலைவர் எதிர்பார்த்தபடி ஆஸி துடுப்பாட்டவீரர்கள் short pitch deliveriesக்கு மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள் தாக்குதலுக்குள்ளானார்கள் legsideல் விக்கெட்டோடு இணைந்த கால்வட்டத்தில் நிறைந்திருந்த களத்தடுப்பாளர்களுக்கு பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர். 3வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் Bert Oldfieldன் மண்டையோடு Harold Larwoodஆல் பதம்பார்க்கப்பட்டு உடைக்கப்பட்டது. இதே போட்டியில் Australia captain Woodfullம் எகிறிவந்த Larwoodன் பந்தால் நெஞ்சில் பதம்பார்க்கப்பட்டார். Wisden சஞ்சிகையால் இவ்வளவு காலம் விளையாடினதிலேயே மிகவும் கேவலமான டெஸ்ட் போட்டி என்று வர்ணிக்கப்பட்டும் பல சச்சரவுகள் குழப்பங்களை ஏற்படுத்திய தொடராக மாறி கிரிக்கெட்டில் ஒரு கறுப்பு புள்ளி குத்தப்பட்ட போட்டியாக மாறிப்போனது. எனினும் வலுவான அணியான அவுஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றியீட்டியது.

சர்ச்சைக்குரிய அந்தப்போட்டியின் வீடியோக்காட்சிகள்.



சர்ச்சைக்குரிய இந்த போட்டி தொடரின் பின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. Leg side ல் (onside) துடுப்பாட்ட வீரர் நிக்கும் விக்கெட்டுக்கு பின்னான கால்வட்டத்தில் விக்கெட் காப்பாளரை விட கூடுதலாக இரண்டு களத்தடுப்பாளர்களே நிற்க முடியும் என்ற விதி இந்த Bodyline Test seriesக்கு பிறகே MCCயால் கொண்டு வரப்பட்டது.



இது சம்பந்தமான சுவராஸ்யமான தகவல்களை இணையத்தில் தேடி விருப்பமுள்ளவர்கள் அறிந்து கொள்ளுங்கள். மிகவும் சுவாரஸ்யமான topic. யாரும் ஒரு producer தயாரா இருந்தா ஒரு Super படமாவே எடுக்க கூடிய Test series.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்