சுவாரஷ்ய பதிவர் விருதும்-குரங்கின் கை பூமாலையும்

அண்மைக்காலமாக வலைப்பதிவுகளில் பரவிவரும் கொடிய தொற்று நோய்களில் ஒன்றான சுவாரஷ்ய பதிவர் விருது (Interesting Blog) எனக்கும் இரு அன்பர்களால் பரப்பப்பட்டுவிட்டது. சுவின் புளு (Swine Flu)ஐ விட வேகமாக தொற்றும் இந்நோய் எங்கு போய் முடியபோகிறதோ தெரியவில்லை. விருதைபெறும் ஒருவர் அதை கிட்டதட்ட 6பேருக்கு கொடுக்கலாம் என்ற எழுதப்படாத விதியின் மூலம் என்னை போன்ற குரங்குகள் கையிலும் சில வேளை பூமாலைதான்.


இதை பெற எனக்கு தகுதிஇருக்கா இல்லையா என்ற ஆராய்சியின் (எனக்கே தெரியும் இது எனக்கு ரொம்பவே ஓவர்) மூலம் தகுதி இருப்பதுபோலான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயலாமல், மற்றவர்கள் என்ன செய்தார்களோ அதைபோலே நானும் ஊரோடு ஒத்து ஓடுகிறேன். ஆனால் இப்படியான பாராட்டுக்கள்தான் ஒருவருக்கு நல்ல உந்து சக்தியை கொடுக்கும் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை. நாங்களும் விருதின் படத்தை Blogல போட்டுட்டமில்ல...


இந்தபதிவு தேவையற்ற ஒன்றாக இருந்த போதிலும், சிலரை பாராட்டுவதற்காக பதிகின்றேன்.

விருதை வழங்கிய சுபாங்கன், கரவைக்குரல் இருவருக்கும் கோடி நன்றிகள்.

இவர்களில் சுபாங்கன் எனக்கு பழக்கமானவர். பல்கலைகழகத்தில் எனது கனிஷ்ட மாணவன். ஐந்தறைப்பெட்டி என்ற வலைப்பதிவு மூலமாக பல சுவாரஷ்யமான தகவல்களை தருபவர். இலங்கையிலுள்ள முன்னணி பதிவர்களில் மிக முக்கியமானவர். சிறந்த தொழில்நுட்ப பதிவாளர். இவரது பதிவுகள்மூலம் பலவற்றை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.

அடுத்தவர், கரவைக்குரல். உண்மையை சொல்ல போனால் எனக்கு பரிட்‌சையமற்றவர். வலைபதிவு மூலமே இவரை அறிகிறேன். எனது பதிவையும் இவர் பார்த்திருக்கிறார் என்பது விருதை வழங்கிய பின்பே எனக்கு தெரியும். ரொம்பவே மகிழ்சியாக இருக்கிறது. கரவையின் ஓசை, வாழ்த்தவரும் வானம்பாடி ஆகிய வலைபதிவுகளின் சொந்தகாரர். க‌ரவையின் ஓசை மூலம் பல தரப்பட்ட வித்தியாசமான பதிவுகளிடும் திறமையுடையவர். வாழ்த்தவரும் வானம்பாடி என்ற பதிவுமூலம் பல திறமைகளையுடைய ஈழத்து சொந்தங்களை வாழ்த்திவருகிறார்.

எனக்கு தரப்பட்ட இந்த நோயை(மன்னிக்கவும் விருதை) 6பேருக்கு அளிக்கவேண்டுமாம். இருந்தாலும் இருவருக்கு அளிக்கின்றேன்.
  1. முதலாமர் ஹிசாம் அண்ணா. வெற்றிFM வானொலியின் உதவி முகாமையாளர். இவரது வலைபதிவு Hisham Mohamed. நான் Blogஐ பற்றி அறிந்தபோது பார்த்த முதலாவது வலைபதிவு இவருடையதாகும். சிறந்த புரட்சிகரமான எழுத்துக்கு சொந்தமுடையவர். தற்போது இவரது எழுத்துக்கள் மிகவும் குறைவடைந்துவிட்டாலும் மீண்டும் புது உத்வேகத்துடன் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
  2. அடுத்தவர் மயூரன் அண்ணா. சக்திFM வானொலியின் நீண்டகால அறிவிப்பாளர். வலைஉலகத்திற்கு புதியவர். MAYURAN என்ற வலைபதிவை எழுதி வருபவர். உலகத்தில் நடக்கும் எல்லா முக்கிய விசயத்தையும் முந்திக்கொண்டு பதிவிடுபவர். சின்ன சின்னதாக அளவான பதிவுகளில் அசத்துபவர். அடிக்கடி எழுதும் இவருக்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறதோ?
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒருமாதிரி விருதை Pass பண்ணியாச்சு!!!

2ம் உலகயுத்தத்தின் சுவடு யாழ்ப்பாணத்தில்!!

நீங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தவராயிருப்பின் சிலவேளை படத்தில் காட்டப்பட்டுள்ள சரிவக அமைப்பிலான தூணை கண்டிருக்ககூடும். என்ன இவன் ரோட்டில இருக்கிற ஒரு தூணை காட்டி அலுப்படிக்கிறான் என்று எண்ணவேண்டாம்.

வீதியோரமாக மரத்திற்கண்மையில் அமைந்துள்ள தூண்


இது யாழ்ப்பாணம் கொழும்புத்துறைவீதியில் சென்ஜோண்ஸ் கல்லூரிக்கு (நான் படிச்ச பள்ளிக்கூடம்) அண்மையில் உள்ள சேமக்காலைக்கு முன்பாக வீதியோரமாக இருக்கின்றது.


உருப்பெருப்பிக்கப்பட்ட படம் (தூணில ஒரு மரமும் சின்னதாக வளர்கிறது)

இத்தூணானது இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது (1939-1945) கட்டப்பட்டதாம். சண்டைக்கும் இத்தூணிற்கும என்ன சம்பந்தம்? அந்த காலத்தில் யுத்தவிமானங்கள் ஏதாவது குண்டு வீச வந்தால் அதை மக்களுக்கு அறியதந்து முன்எச்சரிக்கை செய்ய இந்த தூணில் ஏறி நின்று சைரண் ஊதுவார்களாம். (இவ் 2ம் உலகயுத்தத்தின் போது 1942ம் ஆண்டு ஜப்பானினால் இலங்கை மீது விமான தாக்குதல் கொழும்பிலும் திருகோணமலையிலும் நடத்தப்பட்டமையை நீங்கள் அறிந்திருக்கலாம்.)

எவ்வளவு காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்தபோதும் இந்த விடயம் அண்மையில் நான் விடுமுறைக்காக சென்றபோதே அம்மாவின் மூலமாக அறிந்து கொண்டேன். அதை உங்களிடமும் பகிர்கிறேன்.

ஒவ்வொரு தூணுக்கு பின்னாலும் இப்பிடிதான் வெவ்வேறு கதைகள் இருக்குமோ??????
யாருக்குதான் தெரியும்!!!!!!

கசப்பான அந்த நாள்-III

எனது இதற்கு முந்தைய பதிவான பாடகர் அட்னன் சாமி பற்றிய பதிவு Youthful விகடனில் Good Blogs பகுதியில் வெளியாகி இருந்தது. அந்த பதிவை பார்க்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும். தொடர்ச்சியா டுபாக்கூர் பதிவுகளை நான் போடவில்லை என்பதை இதிலிருந்து நான் தெரிந்து கொண்டேன்.

அந்த இணையதளத்தின் Screen Shot கீழே உள்ள படத்தில்.....


இதன் முழுமையான பாகங்களுக்கு இங்கே கிளிக்குக 1  2   3   4

வீண் பில்டப்புகளைவிட்டு இன்றைய பதிவுக்கு வருகின்றேன். இது இதற்கு முன் வந்த இரண்டு பதிவுகளின் தொடர்ச்சி. முதல் பதிவுகளை பார்க்க விரும்புவோர் இங்கே 1 2 கிளிக் செய்து விரும்பினால் பார்க்கவும்.

நேரமும் வேகமாக சீறிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு Chief Student Counselor ஆக இருந்த Lecturer வந்து பாதுகாப்பாக எங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பஸ் வசதியை கம்பஸ் நிர்வாகம் செய்து தருவதை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் வெளியே நிலமை எவ்வாறு இருக்கின்றது உங்களால் ஊகிக்க முடிந்திருக்கும் பெயர்களை பதிவு செய்து கொண்டு நாங்களும் புறப்பட தயாராகினோம்.

என்ன ஆச்சரியம் என் பிரார்த்தனை வீண் போகவில்லை. அண்ணாவும் ஒருவாறு எங்களுடன் வந்து சேர்ந்திருந்தார். முன்வாசல் வழியாக பெரும்பான்மை இனத்தவர் போல நைஸாக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொலிஸீற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கம்பஸிற்குள்ளே வந்திருந்தார். அதுவரை ஜடமாக இருந்த எனக்கு மீண்டும் உயிர் கிடைத்தது. என்றாலும் அந்த முயற்சி உயிரை பணயம் வைத்து செய்த முயற்சியாகும். ஏனெனில் அந்த தருணத்தில் முன்வாசல் வீதிக்கண்மையில் ஏகப்பட்ட காடையர்கள் தமிழர்களை எதிர்பார்த்து உலாவித்திரிந்தனர்.

பிற்பகல் 4.30 மணியளவில் எங்கள் (தமிழ் மாணவர்களின); தேசிய மற்றும் கம்பஸ் அடையாள அட்டைகள் துருவி துருவி பரிசோதிக்கப்பட்டபின்னர் பஸ்ஸினுள் ஏற்றப்பட்டோம். அவ்வேளை கம்பஸினுள் முன்னுள்ள ஓர் அறையில் தங்கியிருந்த எமது சக மாணவர்கள் சிலர் உள்ளே வரமுடியாமல் அங்கேயே சிக்கி இருந்தனர். அவர்களது அறையில் பொலிஸ் அந்தநேரம் சோதனை இட்டு கொண்டிருந்தது.



பஸ்வேறு புறப்பட தயாராகி அவர்களது வருகைக்காக நிறுத்திவைக்கப்படிருந்தது. எனினும் அவர்கள் தனியே கம்பஸிற்குள் வருவது பயங்கரமானதும் சாத்தியமற்றதாகவும் அந்த நேரத்தில் பட்டது. தொலைபேசி மூலம் ஏற்படுத்திய அழைப்புகளிற்கு உடனே வருகின்றோம் என்ற பதிலே வந்தது. சோதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தமையால் அவர்களால் வேறெதுவும் கூறமுடியாதிருந்தது.

அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு அவர்களை மீட்க துணிச்சலுடன் எம் சக நண்பன் ஒருவன் எங்களுடன் நின்ற பொலிஸின் உதவியை கேட்டு அவர்களுடன் ஜீப்பில் விரைந்து பத்திரமாக அவர்களை மீட்டு வந்தார்.

ஒருவாறு பஸ்ஸும் புறப்பட்டது. புறப்படும் வேளையில் 'இதுதான் எங்களுக்கு கம்பஸில் கடைசிநாள் ஒருக்காக கம்பஸை வடிவா பாத்திட்டு வாங்கடா' என்று சிரேஷ்ட மாணவர் ஒருவர் கூறினார். அவ்வேளையில் அது சரியாகவே இருக்கும்போல பட்டது.

பஸ்ஸும் கம்பஸ் வாயிலை கடக்கும் போது வீதியில் நின்றவர்கள் கோபமாக எங்களை பார்த்து கையைகாட்டி காட்டி பேசிக்கொண்டிருந்தனர். வெளிக்கிட்டு கொஞ்சநேரத்தில் 'டேய் எதாவது அனாமதேய பைகள் இருக்கா என்று பாருங்கடா!!' என்று பஸ்ஸில் நின்ற ஒருவர் குரல் எழுப்பினார். எல்லோரும் வடிவாக பார்த்து அவ்வாறு ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்தோம். அந்த நேரத்தில் எவ்வாறெல்லாம் பயந்திருந்தோம் என்பதை இதன்மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

யாராவது எங்களை கூண்டோடு அனுப்பி விடுவார்களோ என்றுகூட நாம் பயந்தோம். எதுஎவ்வாறெனினும் அனைவரும் பாதுகாப்பாக மாலை6 மணியளவில் வேண்டிய இடங்களில் இறக்கப்பட்டோம். அந்த பஸ்ஸின் பயணம் பம்பலப்பிட்டிவரைதான் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.



இதன்பிறகு நடந்த சில சுவாரஷ்யமான சம்பவங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம். இங்கே

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்